திருமணமான பின்பு பிறந்த வீட்டுக்குப் போகிற பெண்கள் அங்கிருந்து கொண்டு வர கூடாத பொருட்கள் என்னென்ன தெரியுமா?

lamp-pavakkai-arival-manai
- Advertisement -

ஒரு பெண் திருமணம் ஆவதற்கு முன்பு எப்படி எல்லாமோ இருந்திருப்பாள். எந்த விதமான கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாக இருந்த பெண்கள் திருமணம் ஆன பின்பு பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியதும், சாஸ்திர சம்பிரதாயத்துக்கு உட்பட வேண்டியதுமாகிறது. இதற்கு காரணம் அந்தப்பெண் அடுத்தகட்ட உயர்வுக்கு செல்வதால், ஒரு புது வீட்டில் மகாலட்சுமி ஆக கருதப்படுவதால், அவளுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. பொறுப்புகளை சரியாக நிறைவேற்றும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகளில் திருமணமான பெண்கள் பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு கொண்டு வரக் கூடாத பொருட்கள் என்னென்ன? என்பதும் அடங்கும். அவற்றைப் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

arivalmanai

குறிப்பு 1:
பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு கூர்மையான பொருட்கள், ஆயுதங்கள் போன்றவற்றை கட்டாயம் எடுத்து வரக்கூடாது. கத்தி, அரிவாள் மனை, கத்தரிக்கோல் போன்ற பொருட்களை கொண்டு வந்தால் இரு வீட்டாருக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்கிறது சாஸ்திரம்.

- Advertisement -

குறிப்பு 2:
ஒரு பெண் பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு வரும் பொழுது அங்கிருந்து கொண்டு வரக்கூடாத பொருட்களில் துடைப்பம், வீடு துடைக்கும் மாப், ஒட்டடை குச்சி போன்றவையும் அடங்கும். இப்படி வீட்டை சுத்தம் செய்வதற்கு உரிய பொருட்களை அங்கிருந்து இங்கு கொண்டு வந்தால் அதில் தேவையில்லாத சிக்கல்கள் உருவாகும் என்கிறது சாஸ்திரம்.

puli

குறிப்பு 3:
பிறந்த வீட்டிற்கு சென்ற பெண்கள் அங்கிருந்து மளிகை பொருட்களை கொண்டு வருவது வழக்கம். இப்படி மளிகைப் பொருட்களை கொண்டு வரும் பொழுது அதில் புளி மற்றும் வெந்தயம் போன்ற பொருட்களை உடன் எடுத்து வரக்கூடாது. இவ்விரண்டு பொருட்களும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. இப்பொருட்களை புகுந்த வீட்டிற்கு கொண்டு வந்தால் உறவு சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அதையும் மீறி நீங்கள் கொண்டு வர நேர்ந்தால் அதற்கான தொகையை கொடுத்துவிட்டு கொண்டு வருவது நல்லது.

- Advertisement -

குறிப்பு 4:
பிறந்த வீட்டிற்கு சென்ற பெண்கள் புகுந்த வீட்டிற்கு வரும் பொழுது உப்பு, எண்ணெய் போன்ற பொருட்களையும் கொண்டு வரக்கூடாது. உப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் ஈம சடங்கு செய்வதற்கு பயன்படுத்தக் கூடிய பொருட்கள் ஆகும். எனவே இந்த பொருட்களையும் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

7-muga-vilakku

குறிப்பா 5:
ஒரு வீட்டில் ஏற்றப்பட்ட விளக்கை எந்த வகையிலும் இன்னொரு வீட்டிற்கு கொண்டு செல்லக்கூடாது. அந்த வகையில் பிறந்த வீட்டிலிருந்து விளக்கு போன்றவற்றை ஒருபொழுதும் புகுந்த வீட்டிற்கு பெண்கள் எடுத்துச் செல்லக்கூடாது. பயன்படுத்தாத புதிய விளக்காக இருந்தால் எடுத்துக் கொண்டு செல்லலாம். ஆனால் பயன்படுத்திய விளக்கை கொண்டு சென்றால் லட்சுமி கடாட்சம் போய்விடும்.

- Advertisement -

குறிப்பு 6:
பிறந்த வீட்டிலிருந்து கசப்பான எந்த பொருட்களையும் பெண்கள் புகுந்த வீட்டிற்கு கொண்டு வரக்கூடாது. உதாரணத்திற்கு பிறந்த வீட்டில் முருங்கை மரம் இருந்தால் முருங்கை சம்பந்தப்பட்ட பொருட்களையும், அகத்திக்கீரை, பாகற்காய், கறிவேப்பிலை போன்ற கசப்புத் தன்மையுள்ள காய்கறி மற்றும் கீரை வகைகளையும் ஒருபோதும் பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது. இதனால் தேவையில்லாத மனக்கசப்புகள் ஏற்படக்கூடும் என்பது சாஸ்திர நியதி.

muram

குறிப்பு 7:
ஈம சடங்கின் போது அரிசி புடைக்க பயன்படுத்தும் முறம் பொதுவாக திருமணமான பெண்களுக்கு சீதனமாகக் கொடுப்பது இல்லை. எனவே எந்தக் காரணம் கொண்டும் முறத்தை ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்குக் கொண்டு செல்லக்கூடாது. எந்த வகையிலும் பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு முறத்தை பெண்கள் கொண்டு செல்லக்கூடாது.

குறிப்பு 8:
குடும்பத்தில் வறுமை இல்லாத வாழ்வு கொடுக்கும் கடவுளாக நாம் பார்ப்பது அரிசி அளக்கும் படி. அரிசி அளக்கும் பொழுது அந்த படியை வணங்கி விட்டுத் தான் அரிசியை அளக்க வேண்டும். அப்படியான தெய்வீக சக்தி நிறைந்துள்ள அன்னபூரணியின் அருள் பெற்ற இந்த அரிசி அளக்கும் படி பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு கொண்டு வந்தால் பிறந்த வீட்டிற்கு வறுமை உண்டாகும் என்பது சாஸ்திரம்.

kola-maavu

குறிப்பு 9:
காலையில் எழுந்ததும் முதல் வேலையாக பார்ப்பது கோலம் போடுவது தான். மகாலட்சுமி வீட்டிற்குள் வருவதற்கு நாம் போடும் இந்த கோலமாவு ஒரு பொழுதும் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு கொண்டு செல்லக்கூடாது. அப்படி நீங்கள் கொண்டு செல்ல விரும்பினால் அதற்கான தொகையை கொடுத்துவிட்டு கொண்டு செல்வது நல்லது.

குறிப்பு 10:
பிறந்த வீட்டில் இருந்த தாய் சமைத்த அசைவ உணவுகளை ஆசையாக புகுந்த வீட்டிற்கு கொண்டு வருவது வழக்கம். இப்படி அசைவ உணவுகளை பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு கொண்டு வருவது கூடாது என்பது சாஸ்திரம். அசைவ உணவைப் பின்தொடர்ந்து காத்து, கருப்பு போன்றவை வரும் என்பதால் இவ்வாறு கூறப்பட்டது. அப்படி நீங்கள் இவற்றைக் கொண்டு வர விரும்பினால் இவற்றுடன் இரும்பு சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு பொருள், கரித்துண்டு, சிறிதளவு வேப்பிலையை வைத்துக் கொண்டு, கொண்டு வருவது நல்லது.

- Advertisement -