அதிர்ஷ்ட தேவதை எப்போதும் உங்கள் வசமே இருக்க வேண்டும் என்றால், அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் இந்த பொருட்களை எல்லாம் உங்கள் கையால் பிறருக்கு தருவதோ வாங்குவதோ கூடாது.

kubera cash
- Advertisement -

நம் முன்னோர்கள் ஒரு பழமொழியை சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அதிர்ஷ்டம் வந்தாலும் இப்படி வர வேண்டும் பாருங்கள். இந்த சொல் வழக்காடல் நம் பழங்காலத்திலிருந்து நடைமுறையில் உள்ளது. இப்படி திடீரென அதிர்ஷ்டம் வந்தவர்களில் சிலர் கோவில் குளம் கூட செல்லாதவர்களாகத் தான் இருப்பார்கள். ஆனாலும் அதிர்ஷ்ட காற்று அவர்களுக்கு வீசிக் கொண்டே இருக்கிறது என்றால், அதற்கு அவர்கள் வாழ்வியல் முறைகள் தான் காரணம். அது என்ன என்பதை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பிறருக்கு தரக் கூடாத அதிஷ்டம் தரும் பொருட்கள்:
நம்முடைய முன்னோர்கள் காலத்திலிருந்தே வீட்டில் என்னென்ன விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஒரு பெரிய பட்டியலே வைத்திருக்கிறார்கள். அந்த விஷயங்களை சரிவர அவர்கள் கடைப்பிடித்ததால் தான் நல்ல நிலையில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். காலப் போக்கில் நாம் அப்படியான பல விஷயங்களை மறந்து விட்டதால் இன்று பல இன்னல்களுக்கு ஆளாகி கொண்டு இருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.

- Advertisement -

அந்த வகைகளில் இரண்டு சுவை உள்ள பொருட்களை எந்த காரணத்திற்காகவும் நாம் பிறருக்கு கொடுக்கவே கூடாது என்பது நம்முடைய சாத்திரங்கள் நமக்கு சொல்லி இருக்கிறது. அதில் புளிப்பு சுவை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதாவது எலுமிச்சை, தயிர், ஊறுகாய், சமையலுக்கு பயன்படுத்தும் புளி போன்றவை எல்லாம் நாம் எப்போதுமே பிறருக்கு கொடுக்கவும் கூடாது பிறர் கையால் இதை நாம் கடனாக வாங்கவும் கூடாது.

அதே போல வெள்ளை நிறத்திலான பொருட்களையும் இப்படி தருவதும் வாங்குவதும் கூடாது. அந்த வகையிலும் பால், சர்க்கரை, அரிசி போன்றவை எல்லாம் இதில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒரு சிலர் இவையெல்லாம் தெரியாமல் நம்மிடம் வந்து கடனாக கேட்கலாம். இன்னும் சிலரோ தெரிந்து கொண்டே நம்மிடம் கேட்கலாம். இதில் யார் எந்த மனநிலையில் கேட்கிறார்கள் என்பது எல்லாம் நமக்கு தெரியாது.

- Advertisement -

இந்தப் பொருட்கள் எல்லாம் நம் வீட்டில் செல்வதை அளிக்கக் கூடிய அதிர்ஷ்டமிக்க பொருட்களாக நம்முடைய சாஸ்திரங்கள் சொல்கிறது. இதை நாம் பிறருக்கு கொடுக்கும் போது நிச்சயம் இதனால் நம்முடைய குடும்பத்தில் உள்ள செல்வ நிலை தாழக்கூடும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும். எப்படி வெள்ளி செவ்வாய்களில் எந்த பொருளையும் கொடுக்கக் கூடாது. விளக்கு வைத்த பிறகு கொடுக்கக் கூடாது என்பது போன்ற சாஸ்திரங்கள் உள்ளதோ, அதே போல இந்த பொருட்களை எல்லாம் எப்போதுமே கொடுக்கக் கூடாது என்பதும் நம் கடைபிடிக்க வேண்டும்.

இதையெல்லாம் நாம் சரியாக கடைப்பிடித்தாலே போதும் நம்மிடம் இருக்கும் அதிர்ஷ்ட தேவதை நம்முடனே இருந்து நமக்கு அதிர்ஷ்டத்தை தந்து கொண்டிருப்பார். அதுமட்டுமின்றி இந்த பொருட்களில் எல்லாம் மகாலட்சுமி தாயார், குபேரர் போன்றவர்களுக்கெல்லாம் உகந்த பொருட்களாகவும், வாசம் செய்யும் பொருட்களாகவும் உள்ளவை. இவற்றையெல்லாம் தரும் பொழுது அவர்களும் நம்மை விட்டு விலகி செல்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: தரித்திரம் தோஷங்கள் என எதையும் வீட்டிற்குள் வராமல் தடுத்து, சகல ஐஸ்வர்யங்களும் நம்மை தேடி வர நிலை வாசலில் இது மட்டும் எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

அப்படியானால் நாம் யாருக்கும் எதையும் கொடுக்கவே கூடாத என்ற கேள்வி எழலாம். ஒரு வேளை உண்மையாகவே அவர்கள் இதையெல்லாம் வாங்க முடியாத சூழ்நிலையில் உங்களிடம் கேட்கிறார்கள் என்றால் முடிந்தால் நீங்கள் பணமாக கொடுத்து கடையில் வாங்க சொல்லுங்கள். வீட்டில் நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருப்பதை கொடுக்க வேண்டாம் என்பது தான் இதன் முக்கிய நோக்கம். இது போன்ற வாழ்வியல் நடைமுறைகளை நீங்களும் கடைபிடிக்கும் பொழுது நம் வாழ்வில் சந்திக்க இருக்கும் பல இன்னல்களில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என்று இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -