தரித்திரம் தோஷங்கள் என எதையும் வீட்டிற்குள் வராமல் தடுத்து, சகல ஐஸ்வர்யங்களும் நம்மை தேடி வர நிலை வாசலில் இது மட்டும் எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

Nilai vasal
- Advertisement -

எந்த ஒரு வீட்டிலும் நல்லதோ கெட்டதோ எதுவாக இருப்பினும் அது நிலை வாசலை தாண்டி தான் உள்ளே வர வேண்டும். இந்த காரணத்தினால் தான் நாம் முன்னோர்கள் முதற் கொண்டு வீட்டின் நிலை வாசலுக்கு தனியாக பூஜைகள் செய்து முறையாக அதை பராமரித்து வந்தார்கள். நாம் நிலை வாசலை எந்த அளவிற்கு போற்றி வணங்குகிறோமோ அந்த அளவிற்கு நம் வீட்டிற்குள் நல்லவை எல்லாம் தானாக தேடி வரும் என்பது ஐதீகம். இப்போது இந்த நிலை வாசலில் எந்த ஒரு பொருளை நாம் கட்டினால் வீட்டில் எப்போதும் ஐஸ்வரியம் இருக்கும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் ஐஸ்வர்யங்கள் பெருக நிலை வாசலில் இருக்க வேண்டியவை:
ஒரு வீடு எப்போதும் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்க வேண்டும். இந்த லட்சுமி கடாட்சம் எப்போதும் இருக்க வேண்டும் என்றால் அந்த வீட்டில் தரித்திரம் தோஷங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். இந்த தரித்திரங்கள் நம்மை விட்டு நீங்கவும் ஐஸ்வர்யங்கள் வீட்டில் பெருகவும் நம் வீட்டு நிலை வாசலில் கட்ட வேண்டியது கற்றாழை தான்.

- Advertisement -

இப்போதெல்லாம் கற்றாழை அனைவர் வீட்டிலும் வளர்க்கிறார்கள். அதை எந்த இடத்தில் வளர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு வளர்த்தால் நல்லது. இந்த கற்றாழை சகல தோஷங்களையும் தரித்திரத்தையும் நீக்கும் தன்மையுடையது. அத்தகைய சிறப்பு வாய்ந்த கற்றாழையை நாம் வீட்டின் முன் வாசலில் வளர்ப்பது நல்லது. இதே கற்றாழையை நிலை வாசலில் கட்டுவது மிக மிக சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.

இந்தக் கற்றாழையை நிறைவாசலில் கட்ட வேண்டும் என்றால் அதற்கென தனியாக ஒரு முறையும் உண்டு. இதை முதலில் சுத்தமான தண்ணீரில் அலசிய பிறகு, இந்த கற்றாழைக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து கற்றாழையின் வேர் பகுதியை நிலை வாசலில் மேல் நோக்கியும் அதன் மடல்கள் கீழே தொங்கும் படியும் கட்ட வேண்டும்.

- Advertisement -

இப்படி கட்டப்பட்ட கற்றாழையின் மடல்களில் இருக்கும் சின்ன சின்ன முற் போன்ற பகுதிகள் நம் உள்ளே நுழையும் போது நம் தலையில் பட வேண்டும். இவ்வாறு படும் போது நம்மிடம் இருக்கும் தோஷம், தரித்திரங்கள் அனைத்தும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. இவை எல்லாம் நீங்கினாலே வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும் ஐஸ்வர்யங்கள் பெருகும்.

அது மட்டுமின்றி இந்த கற்றாழையின் ஜெல்லை கொஞ்சமாக எடுத்து வெள்ளிக்கிழமை பூஜை வேளையில் மகாலட்சுமி தாயார் இடம் வைத்து வணங்கிய பிறகு அதை நாம் அருந்தி வந்தால் நம்முடைய தோஷம் நீங்கி வீடு சுபக்சமாக இருக்கும் என்பதும் ஒரு ஐதீகம். அப்படி இதை சாப்பிட பிடிக்காதவர்கள் குளிக்கும் போது இதை உடலில் தேய்த்து குளித்தால் நம்முடைய தோஷங்கள் நீங்கி நல்லவை அனைத்தும் தானாக தேடி வரும் என்று சொல்லப்படுகிறது.

வீட்டில் ஐஸ்வர்யம் பெருகவும் தரித்திரம், தோஷம் நீங்கவும் கற்றாழையை இப்படியெல்லாம் கூட பயன்படுத்தலாம் என்று நமக்கு ஆன்மீகம் வழிகாட்டுகிறது. இதில் நம்பிக்கை உள்ளவர்கள் கற்றாழை செடியை இது போல பயன்படுத்தி பார்க்கலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -