பிரிந்த உறவுகள் ஒன்று சேர இந்த துதி பாடலை பாடினாலே போதும்

ammanl

“குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்று சொல்வார்கள் வாழ்வின் இறுதி வரை சுற்றத்தாருடன் கூடி வாழ்வதே மனித வாழ்விற்கு சிறப்பாகும். எல்லோருக்கும் இந்த சுற்றதார்கள் இருந்தாலும் கால சூழ்நிலையில் இந்த நெருக்கமான உறவினர்கள் மற்றும் தம்பதியர்களுக்குள் ஏதாவது ஒரு பிரச்சனையின் காரணமாக மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தங்களின் பாசத்திற்குரியவர்களுடன் மீண்டும் சேர பாடவேண்டிய அபிராமி அந்தாதியின் பாடல் இது.

Meenatchi amman

துதி பாடல் :
துணையும் தொழுந்தெய்வமும் பெற்றதாயும் சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் பனி மலர்ப்பூங்
கணையும், கரும்புச்சிலையும், மென்பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுரசுந்தரீ ஆவது அறிந்தனமே!

“அபிராமி பட்டர்” இயற்றிய “அபிராமி அந்தாதியின்” இப்பாடலை தினமும் காலையில் எழுந்து மனதில் அபிராமி அம்மனை நினைத்து 9 முறை பாடவேண்டும். மேலும் வெள்ளிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு அம்மன் கோவிலுக்குச் சென்று பாட வேண்டும். அப்படி கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலுள்ள துளசி மாடத்திற்கு முன்பு தீபமேற்றி இப்பாடலை 9 முறை பாடி வழிபட பிரிந்த உறவினர்களும் மற்றும் பிரிந்து வாழ்ந்த தம்பதிகளும் மீண்டும் ஒன்றிணைவர்.

இதையும் படிக்கலாமே:
மூன்று பலன்களை தரும் மகேஸ்வரி மந்திரம்

இது போன்ற மேலும் பல துதி பாடல்கள், மந்திரம் மற்றும் ஆன்மீக தகவல்களுக்கு தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.