மூன்று பலன்களை தரும் மகேஸ்வரி மந்திரம்

Amman1

கல்வி, செல்வம், உடல் பலம் இம்மூன்றும் எவரிடமும் ஒன்று இருந்தால் மற்றொன்று இருப்பதில்லை. இம்மூன்றையும் ஒரு சேரப்பெற்றவர்கள் ஒரு சிலர் தான். அந்த ஒரு சிலரிலும் யாரோ ஒருவரே இந்த மூன்றிலும் மிகவும் தேர்ச்சி பெற்றவராக இருக்கிறார்கள். மேற்கூறிய விஷயங்கள் அமையப்பெறாமல் ஒரு விரக்தி மனப்பான்மையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு, உற்சாகத்தை தரக்கூடிய மந்திரம் தான் இது.

Amman

மந்திரம்:
“ஆயுர் தேஹி தனம் தேஹி வித்யாம் தேஹி மஹேஸ்வரி
ஸமஸ்தமாகிலம் தேஹி தேஹி மே பரமேஷ்வரி”

பொது பொருள்:
“எல்லாம் வல்ல தாயே எனக்கு சிறந்த கல்வியையும், சிறந்த அறிவாற்றலைத் தரவேண்டும் சிறந்த பொருளாதார நிலை தரவேண்டும் என அந்த மகேஸ்வரியை வேண்டிக்கொள்கிறேன்” என்பது இந்த மந்திரத்தின் பொதுவான பொருளாகும்.

இம்மந்திரத்தை தினமும் அதிகாலையிலும் முடிந்தால் மாலைவேளைகளிலும் உடல் மற்றும் மனசுத்தி உடன் 108 முறை கூறி வணங்க வேண்டும். மேலும் “அங்காள பரமேஸ்வரி அம்மன்” கோவில் போன்ற கோவில் ஏதேனும் உங்கள் வீட்டருகே எங்கேனும் இருந்தால் அங்கு சென்று எலுமிச்சையை தீபமாக கொண்டு, அதில் நெய் ஊற்றி’ தீபம் ஏற்றி வழிபட்டால் நீங்கள் மேற்கூறிய மந்திரத்தில் வேண்டிய அனைத்து பலன்களையும் நிச்சயம் பெறுவீர்கள்.

இதையும் படிக்கலாமே:
மறைமுக எதிரிகள் அழிய, கண் திருஷ்டி நீங்க மந்திரம்

English Overview:
Here we have Goddess Maheswari Amman Mantra in Tamil. By chanting this mantra one can get good health, good education and good wealth.