பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர, திருமணம் ஆகாதவர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்க, இந்த வழிபாடு தான் சிறந்தது. இதை செய்தவர்கள் பலன் அடையாமல் போனதாக சரித்திரமே இல்லை.

marriage

ஆண்டாண்டு காலமாக நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்த பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தொடர்ந்து கஷ்டப்பட்டு இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டால் நிச்சயமாக உங்களுக்கு கைமேல் பலன் உண்டு. பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்று சேர, குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வராமல் இருக்க, திருமணம் ஆகாதவர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் கைகூட, இதுதான் சிறந்த பரிகாரம் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு பலபேர் செய்து பலனை பெற்ற இந்த பரிகாரத்தை இன்று இந்த இடத்தில் நாமும் நினைவுகூர்ந்து பலன் அடைவோம். அந்த வழிபாட்டு முறையோடு சேர்ந்த பரிகாரம் என்ன தெரிந்து கொள்வோமா? பதிவுக்கு செல்வோம் வாருங்கள்.

pillaiyar

இந்த கோவிலை நீங்கள் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுடைய வீட்டின் அருகிலேயே இருந்து விட்டால் பிரச்சினை இல்லை. இல்லையென்றால் கோவில் இருக்கும் இடம் தேடி நாம் தான் செல்ல வேண்டும். பிரச்சினைக்கு கட்டாயம் தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் வேறு வழியில்லை.

வேப்ப மரமும் அரச மரமும் சேர்ந்து இருக்கக்கூடிய இடத்தில், அந்த மரத்திற்கு அடியில் விநாயகர் இருக்க வேண்டும். அந்த விநாயகருக்கு 108 நாட்கள் அருகம்புல் மாலையை அணிவித்து, மனதார வேண்டிக்கொண்டு ஜோடி விளக்குகள் அதாவது கட்டாயம் இரண்டு மண் அகல் விளக்குகளில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி விநாயகரை 3 முறை வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும்.

pillaiyar1

அடுத்தபடியாக செவ்வாய்க் கிழமை அன்றும் வெள்ளிக்கிழமை அன்றும் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு மிக மிக நல்லது. துர்க்கை அம்மனை வழிபாடு செய்தாலும் இந்த செவ்வாய் கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் விநாயகரையும் சேர்த்து கட்டாயம் வழிபாடு செய்ய வேண்டும். துர்க்கை அம்மனுக்கும் இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும். விநாயகருக்கும் இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும்.

வேப்பமரமும் அரசமரமும் சேர்ந்திருக்கும் மரத்தடியில் இருக்கக்கூடிய விநாயகரையும் வழிபாடு செய்து, துர்க்கை அம்மனையும் தொடர்ந்து வழிபாடு செய்து வந்தாலே போதும். இல்லறத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும்.

blue-durga

108 நாட்கள் தொடர்ந்து விநாயகர் வழிபாடு, அந்த 108 நாட்களுக்குள் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை வழிபாட்டுடன் விநாயகரையும் வழிபாடு செய்து வாருங்கள். ஜாதக கட்டத்தில் ராகு கேது தோஷத்தால் தான் நிறைய பேருக்கு குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை வருகின்றது. ராகு கேது தோஷத்தை நிவர்த்தி செய்வதற்கும் விநாயகர் வழிபாடும், துர்க்கை வழிபாடு கைமேல் பலனை கொடுக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.