பித்ரு தோஷம், பித்ரு சாபம் எதுவாக இருந்தாலும் அதை உடனடியாக  நிவர்த்தி செய்து, அவர்களுடைய மனம் குளிர்ந்து உங்களை வாழ்த்த, இந்த ஒரு தீபத்தை, வீட்டில் ஏற்றி வைத்தால் எப்போதுமே!

- Advertisement -

ஒருவருடைய ஜாதகத்தில் பித்ரு தோஷம், பித்ரு சாபம் இருந்தால், அவர்களுடைய வாழ்க்கையில் பல தடைகள் ஏற்படும். முன்னேற்றம் இருக்காது. அந்த பரம்பரையில் யாருக்காவது ஒருவருக்கு திருமணம் ஆகாமல் இருக்கும். குழந்தை பேறு தள்ளிப் போகும். வீட்டில் உள்ளவர்களுக்கு தீராத நோய் இருக்கும். மருத்துவ செலவு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்? எவ்வளவுதான் சொத்து வந்து கொண்டே இருந்தாலும், அது தங்காது. அந்த சொத்து, ஏதாவது ஒரு விதத்தில் நஷ்டம் ஆகிக்கொண்டே இருக்கும். அதாவது, சொத்தை விற்று மருத்துவ செலவு, வீண் விரயங்கள் செய்து கொண்டிருப்பார்கள்.

sad-crying3

சொத்தை விற்று வந்த பணத்தில் சுப செலவு செய்தால் கூட மனநிறைவு கிடைக்கும். சொத்தை விற்று திருமணம் செய்தோம் அல்லது வேறு இடத்தில் வீடு கட்டினோம் என்று கூட அவர்களால் அந்த பணத்தை நல்லபடியாக செலவு செய்ய முடியாது. அந்த பணத்தை மருத்துவமனைக்காக செலவு செய்வார்கள். இப்படிப்பட்ட பல பிரச்சனைகள் வருவதற்கு காரணம் உங்கள் ஜாதக கட்டத்தில் இருக்கும் பித்ரு தோஷம் பித்ரு சாபம் ஆக கூட இருக்கலாம்.

- Advertisement -

நம்முடைய முன்னோர்கள் இறந்த பின்பு அவர்களுக்கு செய்ய வேண்டிய, கடமைகளை சரியாக செய்யாதவர்கள், முன்னோர்களை மறந்தவர்களுக்கு ஜாதக கட்டத்தில் இப்படி ஒரு பிரச்சனை இருக்கும்.  நம்மை விட்டு பிரிந்த ஆன்மாக்கள் என்றுமே நம்மை சாபிகிக்காது. நம்மை மறந்து விட்டார்களே! என்ற முன்னோர்களின் அந்த ஏக்கம் கட்டாயம் நமக்கு ஒரு தோஷமாக மாறி விடும். இந்த தோஷம் நம்முடைய பரம்பரைக்கே தொடரும்.

pithru dhosam

நம்முடைய குலம் தழைக்க, குலம் நன்றாக வாழ்வதற்கு, எதிர்பாராத ஆபத்துக்களை நம்மிடம் வராமல் தடுப்பதற்கு, முன்னோர்களின் ஆசீர்வாதம், குலதெய்வத்தின் ஆசிர்வாதமும் கட்டாயம் தேவை. தினம் தோறும் இறை வழிபாடு செய்யும் போது, முன்னோர்களை நினைத்து அவர்களை நீங்கள் மறக்கவில்லை, என்பதற்காக ஒரு நன்றியை தெரிவித்துக் கொள்ளுங்கள். குலதெய்வத்தின் பெயரை உச்சரித்து குலதெய்வத்தையும் தினந்தோறும் நினைவுகூர்ந்து கொண்டே இருங்கள். இது வாழ்நாள் முழுவதும் உங்கள் வாழ்க்கையை நல்லபடியாக வழிநடத்திச் செல்ல துணைபுரியும் ஒரு வழிபாட்டுமுறை.

- Advertisement -

அடுத்தபடியாக, முன்னோர்களின் ஆன்மாவை தீபச் சுடரின் மூலம் நம்மால் உணரமுடியும். நம்முடைய முன்னோர்களின் ஆத்மாக்களும் தீபச்சுடரில் காட்சி தந்து, நமக்கு ஆசீர்வாதத்தை வழங்க முடியும். இதன்படி ஒரு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது 48 நாட்களுக்கு ஒரு முறையோ, உங்களுடைய வீட்டில் முன்னோர்களை நினைத்து ஒரு தீபம் ஏற்றி வைக்கப்படவேண்டும்.

deepam

அந்த தீபம் மண்ணால் செய்யப்பட்ட அகல் தீபம் ஆக இருக்கவேண்டும். நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றவேண்டும். இரவு நேரத்தில் உங்களுடைய வீட்டில் ஏதாவது ஒரு மூலையில், ஒரு தாம்பூலத் தட்டை வைத்து, அதன் மேல் மண் அகல் தீபத்தை வைத்து, எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபத்தை ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும் போது உங்களுடைய முன்னோர்களை மனதார நினைத்து கொண்டு ஏற்றங்கள். அந்த தீபத்திற்கு பக்கத்திலேயே ஒரு சொம்பு நிறைய, குறைய தண்ணீர் வைக்க கூடாது. சொம்பு நிறைந்து சுத்தமான நல்ல தண்ணீரை வைத்து விடுங்கள்.

- Advertisement -

sombu

இரவு முழுவதும் அந்த தண்ணீரும் அந்த தீபாவும் அப்படியே இருக்கட்டும். எண்ணெய் தீரும் வரை தீபம் எரிந்து குளிர்ந்தால் தவறு ஒன்றும் கிடையாது. அன்றைய இரவு உங்களுடைய முன்னோர்கள் அந்த தீப ஒளியின் மூலம் உங்களுடைய குடும்பத்திற்கான ஆசீர்வாதத்தை மனம் குளிர்ந்து வழங்குவார்கள். அவர்களை நினைத்து அந்த தீபத்தை நீங்கள் தொடர்ந்து மாதத்திற்கு ஒருமுறை ஏற்றி வைத்துக் கொண்டு வந்தாலே, உங்கள் ஜாதக கட்டத்தில் இருக்கும் பித்ரு தோஷத்தால் ஏற்படும் கஷ்டங்கள், படிப்படியாக குறைய ஆரம்பிப்பதை உங்களால் உணர முடியும்.

pithru dhosam

வீட்டில் எல்லோரும் தூங்கச் சென்ற பின்பு ஒருவர் மட்டும் இந்த தீபத்தை ஏற்றி வைத்து விட்டு தூங்கச் சென்றுவிடுங்கள். நீங்கள் உறங்கும் இடத்தில் இந்த தீபத்தை ஏற்றி வைக்க வேண்டாம். படுக்கை அறையில் துவங்கினால், ஹாலில் இந்த தீபத்தை ஏற்றலாம். உங்கள் வீட்டு பால்கனியில், திண்ணைப் பகுதியில் எங்கு வேண்டுமென்றாலும் இந்த தீபம் ஏற்றலாம் தவறில்லை.

pray

உங்களுடைய ஜாதக கட்டத்தில் பித்ரு தோஷமும் சாபமும் எதுவுமில்லை. இருப்பினும் உங்கள் வீட்டில் தொடர் கஷ்டங்கள் தீராத துயரங்கள் இருந்து கொண்டே வருகிறது எனும் பட்சத்தில் நீங்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைத்து, அவர்களுடைய மனம் குளிர்ந்து, உங்களை ஆசீர்வதித்து, உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய பல பிரச்சனைகள் காற்றோடு கரையும் கற்பூரம் போல, காணாமல் போகும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
கடுமையான திருஷ்டியை போக்கும் மரம்! அது என்ன மரம்? எப்படி திருஷ்டியை போக்கும் தெரிந்தால் வியந்து போவீர்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -