வெறும் மூன்றே நாட்களில் பித்த வெடிப்பை நீக்க இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.

foot
- Advertisement -

பெண்கள் தங்கள் முகத்தை மட்டும் அழகு செய்து கொள்ளும் விதமாக பல்வேறு அழகு சாதனங்களையும் வீட்டில் உள்ள பொருட்களையும் வைத்து அழகை மேம்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் பாதங்களை மட்டும் பராமரிக்க தவற விட்டு விடுகின்றனர். நமது சுத்தமானது கால்களில் இருந்து தான் ஆரம்பம் ஆகிறது. நமது கால்களை வைத்து தான் ஒருவர் நம் சுத்தத்தை பற்றி அறிந்து கொள்கின்றனர். கால்களில் தானே வெடிப்பானது இருக்கிறது, அதை யார் கவனிக்க போகிறார்கள்? என்று நினைத்துக் கொண்டு, அதை அலட்சியமாக விட்டு விடுகின்றனர்.

உடலில் ஈரப்பதம் குறைவதால் இந்த பித்த வெடிப்பு ஏற்படுகிறது. பொதுவாக பனிக்காலங்களில் அதிகமாக இந்த பித்த வெடிப்பானது ஏற்படுகிறது. மேலும் காற்று புகா காலணிகளை பயன்படுத்துவதாலும் ஏற்படுகிறது. கால்களில் செருப்பு இல்லாமல் நடப்பதாலும் பித்த வெடிப்பு ஏற்படுகிறது. தூசு மற்றும் மண், மாசுக்களினால் பித்த வெடிப்பு ஏற்படுகிறது.

- Advertisement -

நாம் தினமும் குளிக்கும் போது கால்களை நார் கொண்டு தேய்த்து குளிக்கலாம். மெடிக்கலில் கிடைக்கும் கிரீம்களை தடவுவதால் சில பேருக்கு அது ஸ்கின் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்காக அழகு நிலையம் சென்று அதிக பணத்தை செலவு செய்ய தேவையில்லை. வீட்டில் இருக்கும் பொருளைக் கொண்டு இவற்றை சுலபமாக மூன்றே நாட்களில் விரட்டி அடித்து விடலாம்.

முதலில் வெதுவெதுப்பான நீரை ஒரு பக்கெட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கால்களையும் அந்நீரில் மூழ்கும் படி 10 அல்லது 20 நிமிடங்கள் ஊற வைத்து விடவும். பின்பு காட்டன் துணியினால் ஈரம் இல்லாமல் கால்களை நன்கு துடைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வேஸ்லினை (உதடு வெடிப்பிற்கு பயன்படுத்துவது) இரண்டு ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள், அடுத்து ஒரு தக்காளி பழத்தை எடுத்துக்கொண்டு அதைப் பாதியாக வெட்டி அதில் உள்ள பழச்சாறை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இரண்டையும் நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு எலுமிச்ச பழச்சாற்றை இரண்டு சொட்டு அதில் கலந்து கொள்ளுங்கள். கடைசியாக நாம் தினமும் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் (பல் துலக்கும்) கொஞ்சமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த நான்கையும் நன்கு கலந்து பேஸ்ட் பதத்திற்கு வந்தவுடன் அதனை வெடிப்பு உள்ள இடத்தில் தடவி கொள்ளுங்கள். இதனை இரவு நேரங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் பூசிக்கொள்ள வேண்டும். இதனை மூன்று நாட்கள் செய்து வந்தால் மாற்றம் உண்டாகும். உங்கள் கால்களுக்கு ஏற்றவாறு மருத்துவரிடம் ஆலோசித்து இதை பயன்படுத்துவதே சாலச்சிறந்தது.

- Advertisement -