தலைமுடி வறண்டு பொடுகு பிரச்னை தலைதூக்கி இருக்கிறதா? ஒரே அலசலில் பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?

poduthalai-podugu
- Advertisement -

தலை முடி உதிர்தல் பிரச்சனைக்கு ஆரம்ப காரணமாக இருப்பது இந்த பொடுகு பிரச்சனை தான். தலை முடி தன் ஈரப்பதத்தை இழக்கும் பொழுது வறண்டு போய் பொடுகு தொல்லை ஆரம்பிக்கிறது. தலைமுடியை விலக்கி பார்த்தாலே வெள்ளை வெள்ளையாக தோல் உரிவது போல இருக்கும் இந்த வெள்ளை திட்டுகளை பொடுகு என்கிறோம். இதனை அவ்வளவு எளிதாக நாம் போக்கி விட முடியாது ஆனால் இதற்கான சிறந்த தீர்வாக இருக்கும் ஒரு மூலிகையைப் பற்றி தான் இப்போது இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பொடுகு பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வைக் கொடுக்கும் ஒரு மூலிகை ‘பொடுதலை’ ஆகும். இது பல்வேறு விதமான நோய்களையும் நீக்குகிறது. இதனை கூட்டாக சமைத்து சாப்பிடுவதும் உண்டு. இந்த பொடுதலை மூலிகை சாற்றைக் கொண்டு தலைமுடிக்கு நல்ல ஒரு மசாஜ் கொடுத்து வந்தால், ஒரு பொடுகு கூட இல்லாமல் அனைத்தும் நீங்கிவிடும்.

- Advertisement -

தினமும் தலைக்கு குளித்தால் முடி கொட்டும் என்று பலர் கூற நாம் கேட்டிருப்போம். ஆனால் உண்மையில் தினமும் தலைக்கு குளிப்பது தலை முடியை வளர செய்யுமே தவிர, அதை அழிப்பதில்லை எனவே எந்த அளவிற்கு உங்கள் தலைமுடியை நீங்கள் சுத்தமாகவும், ஈரப்பதத்துடனும் பராமரித்து வருகிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களுக்கு தலைமுடி பிரச்சனை சுலபமாக நீங்கும்.

அடிக்கடி உணவில் கறிவேப்பிலை, நெல்லிக்காய், சிறுகீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கைக் கீரை, மாதுளை, உலர் திராட்சை, அத்திப்பழம், அவரைக்காய், பீன்ஸ், சுண்டல் வகைகள், சத்துமாவு, நவ தானியங்கள், சிறு தானியங்கள் போன்றவற்றை சேர்த்து வருவதன் மூலம் அதிவிரைவாக உங்கள் தலைமுடியை உதிரும் பிரச்சனையில் இருந்து மீட்டு விடலாம். இயற்கையாகவே உணவின் மூலம் தீர்க்க கூடிய இந்த அற்புத உணவுப் பொருட்களை தவிர்த்து வருவதன் விளைவாகவே இன்று பலருக்கும் முடி உதிர்வது, பொடுகுத் தொல்லையும் இருப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.

- Advertisement -

100ml அளவிற்கு தேங்காய் எண்ணெயை மிதமான சூட்டில் காய்ச்சி கொள்ளுங்கள். அதில் பொடுதலை மூலிகையைப் பறித்து அதில் இருந்து கிடைக்கும் சாற்றை கொஞ்சம் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். நன்கு ஆறிய பின்பு ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடுதலை இலை சாற்றை கலந்த தேங்காய் எண்ணெயை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை நன்கு தலைக்கு மசாஜ் செய்து தடவிக் கொள்ள வேண்டும். பின்னர் வழக்கம் போல தலைக்கு அலசி குளித்தால் கொஞ்சம் கூட உங்கள் தலையில் பொடுகு இல்லாமல் பளிச்சென இருக்கும். மேலும் முடி உதிர்வது கட்டுப்படும், புதிதாக முடி வேகமாக வளரத் துவங்கும்.

தலைக்கு ஹேர் டை பயன்படுத்துபவர்கள் அதிகம் இந்த பொடுகு பிரச்சனையை சந்திக்கின்றனர். 100% இயற்கையான முறையில் ஹேர் டையை பயன்படுத்த முடியாது. அதனை தலையில் நிறுத்துவதற்கு ரசாயன குழம்புகளை பயன்படுத்த வேண்டும் எனவே கூடுமானவரை ஹேர் டையை பயன்படுத்துவதை தவிர்ப்பது தான் தலைமுடி பிரச்சனைகள் தீர்வதற்கு வழியாகும். பொடுகு தொல்லை நீங்குவதற்கு நேரடியாக பொடுதலையை அரைத்து தலையில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து அலசி பாருங்கள், இன்னும் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

- Advertisement -