எப்பவும் ஒரே மாதிரி இல்லாம கொஞ்சம் வித்தியசமான முறையில் இந்த பக்கோடா குழம்பை செய்து தான் பாருங்களேன், டேஸ்ட் வேற லெவெல்ல இருக்கும்.

- Advertisement -

குழம்புகள் எத்தனை வகைகள் இருந்தாலும் நாம் எப்பொழுதுமே சமைக்க வேண்டும் என்று நினைக்கும் போது என்ன குழம்பு வைப்பது என்று யோசிக்க தான் செய்வோம். ஒரு வேளை இத்தனை குழம்பு வகைகள் இருப்பதால் அப்படி யோசிக்கிறோமா! தெரியாது. ஆனாலும் யோசித்த பிறகு கடைசியாக வைப்பது என்னவோ சாம்பார், புளி குழம்பு, ரசம் அதிக பட்சம் இதைத் தவிர பெரிய அளவில் ஒன்றும் வைப்பது கிடையாது. இப்போது இந்த பதிவில் பக்கோடா சேர்த்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஆனால் இந்த பக்கோடா குழம்பு என்பது புதுவகையான குழம்பு கிடையாது. நெடு நாட்களாவே நம் வழக்கத்தில் உள்ளது தான். ஆனால் அதை வைத்து வித்தியாசமான முறையில் எப்படி செய்வது என்பதை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

தேவையான பொருட்கள்: எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – 1 ஸ்பூன், சின்ன வெங்காயம் -10, தக்காளி – 2, பூண்டு -5பல், சீரகம் – 1ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, தனியா தூள் – 3 டீஸ்பூன், மிளகாய் தூள் -1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன், பக்கோடா – 50 கிராம், வெந்திய பொடி 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை -1 கொத்து.

- Advertisement -

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். கடாய் சூடானதும் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொறித்த உடன் கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளுங்கள் பிறகு, பூண்டை போட்டு லேசாக வதங்கியதும், சின்ன வெங்காயமும் சேர்த்து வதக்கி விடுங்கள். சின்ன வெங்காயம் வதங்கியவுடன் தக்காளியும் சேர்த்த பிறகு மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கி விடுங்கள்.

அதன் பிறகு குழம்பிற்கு தேவையான தனியா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து லேசாக எண்ணையில் வதக்கிய பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். (தண்ணீர் கொஞ்சம் கூட இருந்தாலும் பரவயில்லை பக்கோடா போட்டதும் குழம்பு கெட்டியாகி விடும்) குழம்பு நன்றாக கொதிக்கட்டும்.

- Advertisement -

இப்போது இந்த குழம்பிற்கு தேவையான ஒரு மசாலா அரைத்து கொள்ளுவோம். அதற்கு அடுப்பை பற்ற வைத்து ஒரு சிறிய காடாய் வைத்து கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வாசம் வரும் வரை வறுத்து அரைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொதித்து கொண்டு இருக்கும் குழம்பில் சேர்த்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: அதிரசம் நன்றாக வர இந்த சின்ன சின்ன குறிப்புகள் தெரிந்தாலே போதும். அதிரசம் செய்வதில் நீங்கள் தான் மாஸ்டர்.

இந்த மசாலா தான் குழம்பிற்கு ஒரு தனி சுவையை தரும். இது சேர்த்த பிறகு குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்ததும் கடைசியாக வெந்திய பொடியை போட்ட பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். இதன் பிறகு பக்கோடாவை இந்த குழம்பில் சேர்த்து அப்படியே மூடி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான பக்கோடா குழம்பு தயார். இந்த குழம்பு இட்லி,தோசை, சாதம் என அனைத்திற்கும் மிகவும் நன்றக இருக்கும்.

- Advertisement -