போலி மருந்தை எடுத்துக்கொண்டு குணமடைந்த 90% கொரோனா நோயாளிகள். பரபரப்பு சம்பவம்

poli marundhu

இந்தியாவில் தற்போது கொரோனாவால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் ஏராளம். இந்த சூழலில் இருந்து நாம் மீண்டுவர இன்னும் எத்தனை மாதங்கள் ஆகும் என்று தெரியவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்தும் சில மருந்துகள் தற்போது வெளிவர ஆரமித்துள்ளன. ஆனால் கொரோனா முதல் அலையின் பொது இருந்தே மருத்துவர்கள் சிலர் ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைத்தனர். அந்த மருந்தில் போலிகளும் இப்போது வர துவங்கியது. அந்த போலி மருந்தின் மூலமும் சில உயிர் பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அது பற்றி இங்கு பார்ப்போம்.

Corona

ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி அதிக விலைக்கு விற்க கூடாது, ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி கள்ள தனமாக விற்க கூடாது என்று அரசாங்கம் எவ்வளவோ கூறி வருகிறது. அத்தகைய செயலில் ஈடுபடுவபவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகிறது. ஆனால் இதை எல்லாம் தாண்டி மத்திய பிரதேச மாநிலத்தில் சிலர் போலி ரெம்டெசிவிர் மருந்தை தயாரித்து விற்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த போலி மருந்து தயாரிக்கும் கிடங்கிற்று சென்று அந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர்கள் அதுவரை சுமார் 1200 போலி ரெம்டெசிவிர் மருந்துகளை மத்திய பிரதேச மாநிலத்தில் விற்றிருப்பது தெரியவந்துள்ளது.

marundhu

அதோடு அந்த மருந்தை பயன்படுத்திய கொரோனா நோயாளிகளில் 90% பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளதும் தெரியவந்துள்ளளது. இறந்தவர்களின் சடலங்கள் எரிக்கப்பட்டுவிட்டதால் இந்த மருந்தினால் என்ன பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்பதை கண்டறியமுடியவில்லை.

அப்படி அந்த போலி ரெம்டெசிவிர் மருந்து பாட்டிலில் என்ன இருந்தது என்றால் வெறும் குளுக்கோஸும் உப்பும் தான். உப்பை குளுக்கோசில் நன்றாக கலந்து அதை பாட்டிலில் அடைத்து விற்றுள்ளனர். அதே போல அந்த பாட்டில்களை டெல்லியில் இருந்து வாங்கி அதில் போலி ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.