அரசியலில் முன்னேற்றம் பெற ஒருவரின் ஜாதகம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா ?

astrology

முற்காலங்களில் மனித சமூகத்தில் மன்னர்கள் மற்றும் அவர்களின் வம்சாவளியினர் என பரம்பரை மன்னராட்சி இருந்து வந்தது. ஆனால் சில நூற்றாண்டுகள் முன்பு மன்னராட்சி ஒழித்து மக்களே மக்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் “மக்களாட்சி” அல்லது “ஜனநாயகம்” தோன்றியது. தேர்தல்களில் வெற்றியடைந்து, அரசு பதவிகள் பெற்று மக்களின் பிரதிநிதிகளாக சேவையாற்றுபவர்கள் தான் அரசியல்வாதிகள். ஜோதிட சாத்திரத்தில் ஒரு நபர் அரசியலில் வெற்றியடைய எந்தெந்த கிரகங்கள் எப்படிப்பட்ட நிலையில் இருக்க வேண்டும் என இங்கு தெரிந்து கொள்வோம்.

astrology

ஒரு நபர் அரசியல் துறையில் சிறப்படைவதற்கு “சூரியன், சந்திரன், செவ்வாய், குரு மற்றும் சுக்கிரன்” போன்ற கிரகங்கள் முக்கியத்துவம் வகிக்கிறது. அரசியல் துறைக்கு அடிப்படையே ஜனநாயகத்தின் அடித்தளமான மக்களிடம் ஒருவருக்கு ஏற்படும் அபிமானம் மற்றும் செல்வாக்காகும். ஒருவருக்கு பொது வாழ்வில் மக்கள் கவர்ச்சி ஏற்பட மக்கள் வசீகரமளிக்கும் கிரகமான “சந்திரன்” நல்ல நிலையில் இருக்க வேண்டும். அரசியல் என்றில்லை மற்ற எந்த துறைகளில் ஈடுபடுபவர்களுக்கும் சந்திரன் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகர் மக்கள் ஈர்ப்பு கொண்டவராக மாற வாய்ப்புகள் அதிகம். சூரியன் அனைத்திற்கும் முதன்மையான ஒரு கிரகமாகும். பிறர் மதிக்க கூடிய, எல்லோரையும் அதிகாரம் செலுத்தக்கூடிய தன்மையை அளிப்பவர் சூரிய பகவான் ஆவார். சூரியன் ஒருவரின் ஜாதகத்தில் உச்சமோ அல்லது ஆட்சியோ பெற்றிருக்கும் பட்சத்தில், அவர் உயர்ந்த அரசு பதவிகளை பெறும் வாய்ப்புகள் அதிகம்.

செவ்வாய் கிரகம் ஒரு ஜாதகரின் வீரத்திற்கும், அவரின் போராடும் குணத்திற்கும் காரகனாகிறார். அதே நேரத்தில் நாம் வாழும் இந்த பூமிக்கும் அதிபதியாகிறார். செவ்வாய் ஒரு நபரின் ஜாதகத்தில் உச்சம் பெற்றிருப்பின், அவர் எதற்கும் அஞ்சாதவராகவும், பெருமளவு நிலப்பகுதிகளுக்கு சொந்தக்காரராகவும் அல்லது அதை ஆட்சிபுரியும் நிலையில் இருப்பார்.பல நாடுகளில் ராணுவ தளபதிகள் புரட்சியில் ஈடுபட்டு, ஜனநாயகத்தை ஒடுக்கி ராணுவ ஆட்சியை கொண்டுவருவதற்கு காரணம் அவர்களுக்கு ஏற்படும் செவ்வாய் கிரகத்தின் உச்சம் பெற்ற தன்மையினால் தான்.

astrology

குரு பகவான் எல்லோராலும் மதிக்கப்படக்கூடிய உயரிய நிலையையும், ஒரு ஜாதகருக்கு நல்லொழுக்கங்களை தருபவராகவும் இருக்க கூடியவர். அரசியல் துறையில் ஈடுபவர்களுக்கு அவர்களின் ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருப்பது மிகவும் சிறந்தது. இப்படி குரு நல்ல நிலையில் இருக்கப்பெற்றால் அவர்கள் மக்கள் அனைவரும் நலம் பெறக்கூடிய காரியங்களை தொடர்ந்து செய்வார்கள். “சுக்கிரன்” சுகங்கள் அனைத்திற்கும் அதிபதி. மற்ற எந்த துறையினரை விடவும் அரசியல்வாதிகளுக்கு அவர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் மிகவும் சிறப்பான நிலையில் இல்லாமல் இருப்பதே நல்லது. ஏனெனில் சுகங்களுக்கு அதிபதியாகிய சுக்கிரன் உச்சம் பெற்றால் அரசியலில் அதிகாரம் பெற்ற ஜாதகர்களுக்கு புத்தியில் சபலத்தன்மையை உண்டாக்குவார். குறிப்பாக பணம் மற்றும் பெண்கள் விடயங்களில்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் கையில் சந்திர மேடு எப்படி இருந்தால் யோகம் தெரியுமா ?

இது போன்ற மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Arasiyal jathagam or Arasiyal yogam jathagam in Tamil. Arasiyal is nothing but politics in Tamil and we discussed how the politicians horoscope will be.