சந்திர மேடு பலன்கள்

Chandra medu

மனிதனின் மனமும் நீரை போன்றது தான் அது சலனமில்லாமல் இருக்கும் நேரம் மிகவும் குறைவு. ஜோதிட ரீதியாக சந்திர பகவான் இந்த தண்ணீருக்கும் மனிதனின் மனதிற்கும் காரகனாகிறார். கை ரேகை ஜோதிடத்தில் நம் உள்ளங்கையில் சந்திர மேடு என்ற இடம் நமக்கு கூறும் பலன்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

Chandra medu

நமது உள்ளங்கையில் மணிக்கட்டின் கீழ்ப்புற ஓரத்தில் இருந்து உள்ளங்கையின் வெளிப்புற ஓரத்தில் உப்பாலாக இருக்கும் பகுதி சந்திர மேடு எனப்படும்.

இந்த சந்திர மேடு பகுதி நன்கு உப்பாலாகவும், இளஞ்சிவப்பு நிறத்திலும், வேறு எந்த வகையான மச்சங்கள் புள்ளிகள் இல்லாமல் இருந்தால் அந்த நபர் சிறந்த அறிவாற்றலும், எதற்கும் கலங்காத மனமும், சிறந்த நற்குணங்களையும் கொண்டிருப்பார்.

Keel irundhu mel
கீழிருந்து மேல்நோக்கி செல்லும் ரேகை

சந்திர மேட்டில் கீழிருந்து மேல்நோக்கி செல்லும் ரேகை இருந்தால் அந்த ஜாதகர் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்வார். அதிகமான வெளிநாடுகளுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்பு இந்த ரேகை கொண்டவர்களுக்கு அதிகம் உண்டு. அரசாங்கத்தில் அமைச்சர் போன்ற பதவிகளும் வகிக்க கூடும்.

kurukku regai
வெளிப்புறத்திலிருந்து உட்புறத்தை நோக்கி செல்லும் சமநிலையான ரேகை

சந்திர மேட்டில் வெளிப்புறத்திலிருந்து உட்புறத்தை நோக்கி செல்லும் சமநிலையான ரேகை இருந்தால், அந்த நபரின் திருமணம் அயல்தேசத்தில் நடக்கக்கூடும். மேலும் தன் வாழ்நாள் முழுவதும் அந்த நாட்டிலேயே அவர் வசிக்க கூடும். சந்திர மேட்டில் கூட்டல் குறி போன்ற ரேகைகள் இருந்தால் வெளிநாடு செல்லும் யோகம் இருக்காது. அப்படி செல்வதற்கான முயற்சிகளும் தோல்வியுறும்.

- Advertisement -

ஒருவருக்கு இந்த மேட்டில் சிறு கருப்பு நிற புள்ளிகள் இருந்தால் அவருக்கு நீர் சம்பந்தமான சளி, உடலில் நீர் கோர்த்துக்கொள்ளுதல் போன்ற வியாதிகள் ஏற்படும். சந்திர மேடு புடைப்பாக இல்லாமல் வெளிரிய நிறத்தோடு, எவ்விதமான ரேகைகளும் இல்லாத பட்சத்தில் அந்நபர் சற்று குழப்பமான மனநிலையை கொண்டவராக இருப்பார். அவரின் வாழ்வில் எந்த விதமான பெருமுன்னேற்றங்களும் இல்லாமல் சாதாரண நிலையிலேயே இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் வாழ்க்கை நிலையை சொல்லும் புத்தி ரேகை பற்றி தெரியுமா ?

இது போன்ற மேலும் பல கை ரேகை ஜோதிடம் சம்மந்தமான குறிப்புகளை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have details about Chandra medu in Tamil. This is a palm asrtrology detail in Tamil.