உங்கள் வீட்டிற்கு வருபவர்கள் வீட்டை பார்த்து பொறாமைப்படுகிறார்களா? இந்த பழத்தை இப்படி ஒளித்து வையுங்கள்! பொல்லாக் கண் திருஷ்டியும் நொடியில் ஒழிந்துவிடும்.

home-lemon-salt

நம்மை சுற்றியிருக்கும் பலரில் ஒரு சிலர் நம் மீது உண்மையான அக்கறையுடனும், அன்புடனும் இருப்பார்கள். ஆனால் பெரும்பாலானோர் நம் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுடைய கண் திருஷ்டி நீங்க வீட்டில் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் தான் இது! அதை முறையாக எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்!

thirusti-lemon

யாருக்கு? எங்கிருந்து? எப்படியான தோஷங்கள் வரும்? என்பது நமக்கு தெரிவதில்லை. வீட்டிற்கு வரும் அத்தனை பேருடைய கண்களும் வீட்டை சுற்றி மொய்த்துக் கொண்டிருக்கும். அப்படி சிலபேர் வீட்டை பார்க்கும் பொழுது அவர்களுடைய கண்பார்வை திருஷ்டியாக மாறும். எந்த ஒரு நல்ல விஷயத்தையும் முடிவு செய்த பின்பு தான் மற்றவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுவது உண்டு. அது ஏன் தெரியுமா?

முடிவு செய்வதற்கு முன்னர் நாம் மற்றவர்களிடம் அந்த விஷயங்களை பகிரும் பொழுது கண் திருஷ்டி படும் என்பதால் தான். கண் திருஷ்டி ஏற்பட்டால் அந்த விஷயம் நடக்காமலேயே போக வாய்ப்புகள் உண்டு. உதாரணத்திற்கு புதுமண தம்பதிகள் குழந்தை பேறு பற்றிய விஷயங்களை உடனே யாரிடமும் கூற மாட்டார்கள். குறைந்தது மூன்று மாதத்திற்கு பிறகு மற்றவர்களிடம் தெரிவிப்பது நல்லது என்று கூறுவது உண்டு. கண் திருஷ்டி அந்த அளவிற்கு மிகவும் பொல்லாதது ஆகும். பொல்லாக் கண் திருஷ்டியை சுலபமாக விரட்டி அடிக்க என்ன செய்யலாம்?

lemon

மிகவும் எளிய இந்த பரிகாரத்தை வீட்டில் இப்படி செய்து விட்டால் போதும்! எந்த ஒரு பொறாமை கண்களும் நம் மீதும், நம் வீட்டின் மீதும் பட்டாலும் அவைகள் வெடித்து சிதறி தவிடு பொடியாகிவிடும். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த இந்த பரிகாரம் செய்ய நமக்கு கல் உப்பு, கண்ணாடி பவுல் – 4, எலுமிச்சை பழம் – 4 ஆகியவை மட்டுமே போதுமானது. இந்த பொருட்களை வைத்து எத்தகைய கொடூரமான கண் திருஷ்டிகளையும் எளிதாக நீக்கி விடலாம். எந்த ஒரு சுப காரியங்களை துவங்கும் முன்பும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அதுபோல வீட்டில் நடக்கும் நல்லது, கெட்டது ஆகியவற்றிற்கும் இதை செய்து வைக்கலாம். புதிய தொழில் துவங்குபவர்கள், புதிய விஷயங்களை செய்பவர்கள், அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு தடை இல்லாமல் செல்ல இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம்.

நான்கு கண்ணாடி பௌலில் கொஞ்சம் கல் உப்பு போட்டு அதில் ஒரு எலுமிச்சை பழத்தை மறைத்து வைக்க வேண்டும். மீண்டும் கல் உப்பைப் போட்டு மூடிவிட வேண்டும். எலுமிச்சை பழம் வெளியில் தெரியக்கூடாது. இப்படி நான்கு பௌலிலும் கல் உப்பு போட்டு அதில் எலுமிச்சை பழங்களை மறைத்து வைக்க வேண்டும். பின்னர் வீட்டில் இருக்கும் நான்கு மூலைகளிலும் வரவேற்பறையில் வைத்து விடுங்கள். இதனை மற்றவர்கள் பார்க்கும் வண்ணம் வைக்கலாம் அதில் தவறில்லை. ஆனால் யாருடைய கைகளும் அதில் படக்கூடாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

salt-and-lemon

வியாழன் கிழமையில் இவ்வாறு செய்து வைக்க மறு வியாழன் கிழமை அன்று கைகள் படாமல் கண்ணாடி பௌவுலை எடுத்து பிளாஸ்டிக் பையில் அவற்றை கொட்டி யாருடைய கண்ணிலும் படாத வண்ணம் போட்டு விட வேண்டும். இப்படி செய்து வந்தால் உங்கள் மேல் இருக்கும் திருஷ்டிகள் அனைத்தும் விலகி ஓடிவிடும். எலுமிச்சை பழத்திற்கு எதிரிகளை விரட்டி அடிக்க கூடிய சக்தி உண்டு. கல் உப்பு நல்ல சக்திகளை அதிகரிக்க செய்யும். இதனால் இவ்வாறு செய்யும் பொழுது துர்சக்திகள் வெளியேறி நல்ல சக்திகள் குடிகொள்ளும் என்பது ஐதீகம்.