- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபொங்கலுக்கு வாங்கிய மஞ்சள் கிழங்கில் இருந்து ஒரு துண்டை மட்டும் எடுத்து, வீட்டில் இந்த மூலையில்...

பொங்கலுக்கு வாங்கிய மஞ்சள் கிழங்கில் இருந்து ஒரு துண்டை மட்டும் எடுத்து, வீட்டில் இந்த மூலையில் வையுங்கள். பொங்கல் அன்று வீட்டில் பொங்கிய சந்தோஷம் வருடம் முழுவதும் குடும்பத்தில் இருக்கும்.

- Advertisement -

நேற்றய தினம் தைப்பொங்கல் திருநாளை எல்லோரும் வீட்டிலும் சந்தோஷமாக விமர்சையாக கொண்டாடி இருப்போம். பொங்கல் அன்று, பொங்கல் பானையில் கட்டிய மஞ்சள் கிழங்கு, பூஜை அறையில் வைத்து, பூஜை செய்த மஞ்சள் கிழங்கு என்று எல்லோருடைய வீட்டிலும் இந்த மஞ்சள் கொத்து இருக்கும் அல்லவா. அந்த மஞ்சள் கொத்தை வைத்து தான் ஒரு சிறப்பான பரிகாரத்தை இங்கு நாம் பார்க்க போகின்றோம். பொங்கல் அன்று நம் வீட்டில் நிறைவாக இருந்த சந்தோஷம் இந்த வருடம் முழுவதும் நம்முடன் தொடர வேண்டும் என்றால், அந்த மஞ்சள் கொத்தை வீட்டில் எந்த இடத்தில் எப்படி வைக்க வேண்டும் என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவு இதோ உங்களுக்காக.

பொங்கலுக்கு வாங்கி பூஜைக்கு பயன்படுத்திய மஞ்சள் கொத்திலிருந்து ஒரு சிறிய துண்டு மஞ்சள் கிழங்கை வெட்டி எடுத்து, சிறிது நேரம் வெயிலில் காய வைத்து விடுங்கள். அதில் இருக்கும் ஈரப்பதம் சுத்தமாக நீங்கிவிடும். ஒரு விரல் அளவுக்கு மஞ்சள் துண்டு எடுத்துக் கொண்டால் போதும். மஞ்சள் பெருசாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

- Advertisement -

இன்று மாலை 6 மணிக்கு இந்த பரிகாரத்தை செய்யலாம். முடியாதவர்கள் அடுத்தடுத்த நாள் காலை 6 மணிக்கு அல்லது மாலை 6 மணிக்கு இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். ஒரு மஞ்சள் துணியில், ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரம் வைத்து, கொஞ்சமாக வாசனை நிறைந்த ஜவ்வாது பொடியை வைத்து, காய வைத்த இந்த சின்ன துண்டு மஞ்சளை அந்த துணியில் வைத்து, முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். குலதெய்வத்தை வேண்டி இந்த பரிகாரத்தை செய்து பூஜை அறையில் இந்த முடிச்சை வைத்து விட்டு, ஒரு விளக்கு ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். (மஞ்சள் துணியில் ஜவ்வாது, பச்சை கற்பூரம், மஞ்சள் கிழங்கு, இந்த மூன்று பொருட்களை வைக்க வேண்டும் அவ்வளவுதான்.)

ஒரு நிமிடம் கண்களை மூடி இஷ்ட தெய்வத்திடமும் குலதெய்வத்திடமும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களுடைய குடும்பம் இந்த பொங்கல் அன்று எத்தனை சந்தோஷத்தோடு, மகிழ்ச்சியில்  உற்றார் உறவினர்களுடன் கூடி இருந்ததோ, அதையே போல இந்த வருடம் முழுவதும் குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, இந்த முடிச்சை அப்படியே பூஜை அறையில் ஏதாவது ஒரு ஆணியில் மாட்டி வைத்து விடுங்கள்.

- Advertisement -

பூஜை அறை வரவேற்பு அறையில் தான் இருக்கிறது என்றால், பூஜை செய்யும் அலமாரியில் ஏதாவது ஒரு இடத்தில் மாட்டி வைக்கலாம். அப்படி இல்லை என்றால் ஏதாவது ஒரு சுனாமி படத்திற்கு பின்னால் கூட இந்த முடிச்சை வைத்து விடலாம். தவறு கிடையாது. இந்த மஞ்சளுக்குள்ளே பச்சை கற்பூரம் வைத்திருப்பதால் அவ்வளவு எளிதில் பூச்சி பிடிக்காது. வண்டு வருவதற்கு வாய்ப்பு இல்லை. லேசான மஞ்சள் காட்டன் துணியில் இதை முடிந்து வையுங்கள்.

இடையிடையே மூன்று மாதத்திற்கு ஒரு முறை இந்த முடிச்சை எடுத்து பிரித்து பார்க்கலாம். உள்ளே பச்சை கற்பூரம் கரைந்து விட்டால் மீண்டும் பச்சை கற்பூரத்தை வையுங்கள். மஞ்சள் வண்டு வருவது போல இருந்தால், இந்த மஞ்சளை எடுத்து போட்டுவிடலாம். தவறு கிடையாது. மஞ்சளில் வண்டு வராத பட்சத்தில் அடுத்த வருட பொங்கல் வரை இந்த முடிச்சு உங்கள் வீட்டிலேயே இருக்கலாம்.

இதையும் படிக்கலாமே: உங்க வீட்டு சமையலறையில் இந்த பொருட்களை மட்டும் ஒளித்து வைத்தால் போதும், அப்புறம் பாருங்க உங்க வீட்டில் பண தட்டுபாடு என்கிற பேச்சுக்கே இடமில்லை.

இந்த மஞ்சள் துண்டு வீட்டில் இருப்பதன் மூலம் குடும்பத்தில் சந்தோஷம் நிறைவாக இருக்கும். காரணம் நேர்மறை சக்திகள், உங்களுடைய வேண்டுதல், சூரியனின் ஆசிர்வாதம், எல்லாம் அந்த மஞ்சளுக்கு இருக்கின்றது. அந்த மஞ்சளை பத்திரப்படுத்தி வைத்து, அதை பூஜை அறையில் வைத்து இருப்பதால் அந்த நேர்மறை ஆற்றலின் மூலம் உங்களுடைய குடும்பம் என்றென்றும் சந்தோஷமாக இருக்கும் என்பது நம்பிக்கை. உங்களுக்கு இந்த பரிகாரத்தின் மீது நம்பிக்கை இருந்தால் செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்