- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபொங்கல் பண்டிகை அன்று செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது.

பொங்கல் பண்டிகை அன்று செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது.

- Advertisement -

தை திருநாளை வரவேற்க அனைவரும் நாளைய தினத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றோம். நாளை தை 1. தைத்திருநாள், தை பொங்கல். இதை மகர சங்கராந்தி என்றும் சொல்லுவார்கள். இந்த தைப்பொங்கல் அன்று நம்முடைய வீடுகளில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிப்பது வழக்கம்.

சூரிய பகவானுக்கு மட்டுமல்ல, உழவர்களுக்கும் இந்த நாளில் நாம் நன்றியை தெரிவிக்க வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த தைத்திருநாள் அன்று, நாம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள் என்னென்ன, செய்யக்கூடாத 5 விஷயங்கள் என்னென்ன, என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பொங்கல் அன்று செய்ய வேண்டியவை

தைப்பொங்கல் அன்று அதிகாலை வேலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு, புத்தாடை அணிய வேண்டும். தைத்திருநாள் சூரிய பகவானுக்கு உரிய திருநாள். சூரிய பகவானுக்கு உரிய தானியம் கோதுமை. கோதுமை தானம் நாளைய தினம் செய்வது சிறப்பு. ஒரு ஆசிரமத்திற்கோ அல்லது முதியோர் இல்லத்திற்கோ 5 கிலோ கோதுமை வாங்கி தானம் கொடுங்கள் ரொம்ப ரொம்ப நல்லது.

நாளை சூரியன் உதயமாக கூடிய நேரம், காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் சூரிய பகவானை பார்த்தவாறு நின்று கொள்ளுங்கள். கிழக்கு நோக்கி நின்று கொண்டு, உதயமாகும் சூரிய பகவானை பார்த்து நீங்கள் என்ன வேண்டுதலை வைத்தாலும், அது உடனே பலிக்கும். தை 1 ஒன்றாம் தேதி அதிகாலை உதயமாகும் சூரியனை பார்த்து தரிசனம் செய்யுங்கள். நிச்சயம் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு நல்லது நடக்கும்.

- Advertisement -

சூரிய பகவானுக்கு இட்லி பூ, என்று சொல்லக்கூடிய இந்த பூவை நாளைய தினம் சமர்ப்பணம் செய்து வழிபாடு செய்தால் நல்லது. இட்லி பூ கிடைக்காதவர்கள் ஒரு செம்பருத்திப் பூவை மட்டுமாவது சூரிய பகவானுக்காக பூஜை அறையில் வைத்து வழிபாடு மேற்கொள்ளுங்கள்.

விவசாயம் செழிக்க சூரிய பகவானையும், வருண பகவானையும் ஒரு சேர சேர்த்து வணங்கி உழவர்களுக்கு நன்றி, நன்றி, நன்றி என்ற வார்த்தையை சொல்லுங்கள். நாம் இன்று மூன்று வேலை சாப்பாடு சாப்பிடுகின்றோம் என்றால், அதற்கு காரணம் உழவர்களும் சூரிய பகவானும், அந்த வருண பகவானும் தான். அவர்களை ஒருநாள் மனதார நினைத்து நன்றி செலுத்துவதில் எந்த தவறும் கிடையாது. நன்றி சொல்ல மறவாதீர்கள்.

- Advertisement -

வீட்டு பெரியவர்கள், குழந்தைகளுக்கு பொங்கலோ பொங்கல் வாழ்த்தை வாயார, மனதார சொல்ல வேண்டும். உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள், உங்கள் சொந்தபந்த குழந்தைகள், தெரிந்த குழந்தைகளுக்கு உங்களால் முடிந்த பத்து ரூபாயை யாவது பரிசு பொருளாக கொடுக்க வேண்டும். 500 ரூபாய்க்கு பத்து ரூபாய் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். தெரிந்த குழந்தைகள் கையில் எல்லாம் பொங்கல் வாழ்த்து சொல்லி, அந்த பத்து ரூபாயை கொடுத்து பாருங்கள். இந்த வருடம் உங்களுக்கு எந்த அளவுக்கு செல்வ வளம் இரட்டிப்பாகும் என்பதை சொல்றதுக்கு வார்த்தையே கிடையாது.

உங்கள் உடன் பிறந்தவர்களுக்கு, சகோதர சகோதரிகளுக்கு உங்களால் முடிந்த சீர்வரிசையை செய்யுங்கள். நீங்கள் பெண்களாக இருந்தால், உங்கள் அண்ணன் தம்பிக்கு திருமணமாகி இருந்தால், உங்கள் அன்னிக்கு உங்கள் தம்பி மனைவிக்கு உங்களால் முடிந்த சீரை நீங்கள் செய்ய வேண்டும்.

பொங்கல் அன்று செய்யக்கூடாதவை

பொங்கல் அன்று ஒற்றைப் பானையில் பொங்கல் வைக்க கூடாது. இரண்டு பானையில் பொங்கல் வைக்க வேண்டும். ஒன்று பால் பொங்கல், இன்னொன்று சர்க்கரை பொங்கல். சில பேர் வீட்டில் வெண்பொங்கல் சர்க்கரை பொங்கல் செய்வார்கள் உங்கள் வீட்டில் எதுவோ, அதை கடைபிடித்துக் கொள்ளுங்கள். பொங்கல் பானை வாங்கும் போது, மஞ்சள் கொத்து, கரும்பு வாங்கும் போது, பேரம் பேசக்கூடாது. பொங்கல் அன்று எல்லா காய்கறிகளும் போட்டு ஒரு குழம்பு வைப்பாங்க. அந்த குழம்பு செய்ய காய்கறிகள் வாங்கும் போது பேரம் பேசவே பேசாதீங்க.

தேவைக்கு அதிகமாக பொங்கல் செய்து அந்த பொங்கலை கொண்டு போய் வீணாக குப்பையில் போடக்கூடாது. சில பேர் வீடுகளில் அதை பசு மாட்டிற்கு கொடுப்பார்கள். இருந்தாலும் நாளைய தினம் எல்லோரும் கொண்டு போய் பசு மாட்டிற்கு சர்க்கரை பொங்கல் கொடுத்தால் அந்த ஜீவனாலும் சாப்பிட முடியாது. அதையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள். அது மட்டும் அல்லாமல் அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் பசுக்களுக்கு தேவைக்கு அதிகமாகவே உணவு இருக்கும் ஜாக்கிரதை அளவோடு பொங்கல் வைக்கவும்.

யாரும் நாளைய தினம் அசைவம் சாப்பிட மாட்டீர்கள். இருந்தாலும் பொங்கல் கும்பிட்ட பிறகு, வெளியிடங்களுக்கு நீங்கள் செல்வதாக இருந்தால், அந்த பொங்கல் திருநாள் அன்று அசைவம் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

பொங்கல் அன்று காலை குளித்துவிட்டு கிழிந்த ஆடைகளை பழைய ஆடைகளை அணியவே கூடாது. சுக்கிரனுக்கு உகந்த புதுத்தாடை அணிவதுதான் பொங்கலின் சிறப்பு. பொங்கல் அன்று உங்கள் வீட்டில் எவ்வளவு தான் சண்டை சச்சரவு இருந்தாலும் அதை எல்லாம் எடுத்து ஒரு ஓரம் வைத்துவிட்டு, மலர்ந்த முகத்துடன் சந்தோஷமாக வீட்டில் இருக்கும் பெண்கள் பொங்கல் வைக்க வேண்டும்.

பொங்கல் பானையை அடுப்பில் வைக்கும் போது வெறும் பானையாக வைக்க கூடாது. அதில் கொஞ்சம் பாலும் தண்ணீரும் ஊற்றிய பிறகுதான் அடுப்பில் வைக்க வேண்டும். தண்ணீரும் பாலும் பொங்கி வழிந்த பிறகு அதில் அரிசி போட்டு பிறகு பொங்கல் வைக்க வேண்டும். பொங்கி வந்த உலையில் அரிசி போடும் போது குலதெய்வத்தை நினைத்து அரிசி போடுங்கள்

பொங்கல் அன்று நிலை வாசலில் நல்ல தேவதைகள் குலதெய்வங்கள் எல்லாம் வந்து நம்மை வாழ்த்தும் என்று சொல்லுவார்கள். ஆகவே பொங்கல் தினத்தன்று கோபப்படாதீங்க, கெட்ட வார்த்தை பேசாதீங்க, அடுத்தவர்களை சபிக்கும் வகையில் எந்த வார்த்தையையும் விடக்கூடாது. பொங்கல் கொண்டாட்டம் என்ற பெயரில் பக்கத்து வீட்டுக்காரருக்கு தொந்தரவு கொடுக்கும்படி எந்த வேலையையும் செய்யக்கூடாது.

இதையும் படிக்கலாமே: மார்கழி பௌர்ணமி குலதெய்வ வழிபாடு

முடிந்தால் நாளை இயலாதவர்களுக்கு பொங்கல் கொண்டாட முடியாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். நம்பிக்கை உள்ளவர்களுக்கு மேல் சொன்ன இந்த ஆன்மீகம் சார்ந்த தகவல்கள் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்