இவரது ஆட்டம் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தராது – பாண்டிங் சர்ச்சை பேட்டி

ponting
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 8 ரன்களை அடித்துள்ளது. இந்திய அணி 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி சார்பாக புஜாரா 106 ரன்கள் அதிகபட்சமாக குவித்தார்.

pujara

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்த பின்னர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் புஜாராவின் சதம் குறித்த கருத்துகளை முன்வைத்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பாண்டிங் கூறியதாவது : புஜாரா ஒரு சதம் அடித்துள்ளார் அவ்வளவுதான்.

- Advertisement -

அந்த சதத்தால் இதனால் இந்திய அணி வெற்றிபெரும் என்பது இல்லை. புஜாராவின் ஆட்டம் மிக பொறுமையாக உள்ளது. அவர் தொடர்ந்து இவ்வாறு ஆடினால் இந்திய அணி ரன் விகிதம் குறையும். இதனால் அவர் ஆடும்போது அணியின் ரன்கள் குறைந்த வேகத்திலே அதாவது ஓவருக்கு 2 ரன்கள் என்கிற வீதத்தில் நகருகிறது.

pujara

இந்திய அணி வெற்றி பெற்றால் இந்த சதம் சிறப்பானதாக அமையும். அப்படி இல்லை என்றால் இது வெறும் ஒரு எண்ணிக்கை மட்டுமே. மேலும் ஆஸ்திரேலிய அணியின் 20 விக்கெட்டுகளை இந்தியா வீழ்த்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதனால் இவ்வளவு பொறுமையாக விளையாடுவதில் அர்த்தமில்லை. ரன் விகிதத்தினை சீராக வைத்து விளையாட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

ராகுல் டிராவிட் என்ற சுவரை உடைத்த இந்திய அணி வீரர். யார் தெரியுமா?

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -