பூச்செடி வளர்க்க ஆசைப்பட்டு வாங்கி அதை நாம் என்னதான் பராமரித்து வந்தாலும், இந்த பூச்சிகள் வந்து செடிகளை வீணாக்கி விடும். ஒரே ஒரு இலை தானே இருக்கிறது என்று நினைத்த மாத்திரத்தில் செடி முழுவதும் பரவி அடுத்த செடிக்கும் தாவி மொத்தமும் வீணாகி விடும். எனவே முடிந்த அளவிற்கு இந்த பூச்சிகள் வருவதற்கு முன்பே அதற்கான தடுப்பு மருந்துகளை நாம் உபயோகிக்க வேண்டும். அப்படி பூச்சிகள் வராமல் இருக்கவும், வந்து விட்டால் அதை சரி செய்யவும், இந்த ஒரு பாட்டில் ஸ்பிரே இருந்தால் போதும். உங்கள் வீட்டில் எத்தனை செடிகளில் பூச்சி இருந்தாலும் அத்தனையும் மறுபடியும் துளிர்த்து கொத்துக் கொத்தாக பூக்க ஆரம்பித்து விடும். இதற்கு செலவு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முதலில் பூச்சிகள் வைத்த செடியில் பழுத்த, கருப்பு புள்ளிகள் விழுந்த இலைகள், கிளைகளில் பரவி இருந்தாலும் அனைத்தையும் முதலில் அப்புறப்படுத்தி விடுங்கள். அடுத்தடுத்து அதிகமாக பரவி விடும் வாய்ப்பு இருக்கிறது. பூக்களிலும் இருந்தாலும் கூட அந்தக், கிளையும் கூட கத்தரித்து எடுத்து விடுங்கள். அதை அப்படியே விட்டு விட்டு அடுத்த மொட்டு அதில் வைக்காது.
இப்போது இதற்கான மருந்தை தயார் செய்வோம். இதற்கு பெரிய அளவில் ஒன்றும் செலவு செய்து வாங்க வேண்டியது இல்லை எல்லோருக்கும் தெரிந்த வேப்பங்கொட்டை தான். இது சாதாரணமாகவே எல்லோருக்குமே கிடைக்க கூடிய பொருள் தான். இந்த வேப்ப கொட்டைகளை எடுத்து காய வைத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
இதை நாம் இரண்டு வழிகளில் பயன்படுத்தலாம். ஒன்று வேப்பங்கொட்டையை ஒரு கிண்ணத்தில் போட்டு ஒரு நாள் முழுவதும் ஊற வைத்த பிறகு அந்த தண்ணீரை வடித்து அதனுடன் தண்ணீர் கலந்து மற்ற செடிகளுக்கு பயன்படுத்தலாம் இது ஒரு எளிமையான முறை.
அடுத்தது முறை கொஞ்சம் வேலை இருக்கும் ஆனால் பலன் அதிகம். வேப்பங்கொட்டைகளை ஒரு மணி நேரம் மட்டுமே ஊற வைத்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பழைய மிக்ஸி ஜார் ஏதாவது இருந்தால் சேர்த்துக் கொள்ளுங்கள் இல்லை அம்மி இருந்தால் அதில் அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்து அதை ஊற வைத்த தண்ணீரில் கலந்த பிறகு, இதை ஒரு பெரிய பக்கெட் தண்ணீர் எடுத்து அதில் அரைத்த விழுதை கரைத்து அந்த தண்ணீரை வடிகட்டி எடுத்து ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி எடுத்து கொள்ளுங்கள். உங்களின் தோட்டம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் இந்த ஒரு மருந்து போதும் அனைத்து பூச்சி வைத்த செடிகளையும் சரி செய்து விடும்.
இதற்கு வேப்பம் புண்ணாக்கு, வேப்ப எண்ணையும் பயன்படுத்தலாம். ஆனால் அது அனைத்தையும் விட இந்த முறை உடனடியாக பலன் அளிக்கும். ஏனென்றால் வேப்ப எண்ணெய் சுத்தமாக கிடைக்குமா என்று தெரியாது. வேப்பம் புண்ணாக்கு இதை வேப்ப எண்ணெய் எடுத்த பிறகு தான் கிடைக்கும். நேரடியாக இப்படி வேப்பங்கொட்டை ஊற வைத்து எடுத்து பயன்படுத்தும் போது உங்கள் செடிகள் கொத்து கொத்தாகவே பூக்க ஆரம்பிக்கும்.
பூச்சி வைத்த செடிகளுக்கு வாரத்தில் இரண்டு முறை மட்டும் அடித்தால் போதும் அதிகமும் அடிக்கக்கூடாது. எனில் இந்த தண்ணீர் அதிக சூட்டு தன்மை உடையது. பூச்சி வைக்காத செடிகளுக்கு வாரத்தில் ஒரு முறை மட்டும் அடித்தால் பூச்சி வைக்கவே செய்யாது.
இதையும் படிக்கலாமே: உங்க வீட்டு செடிகள் வேகமாக வளரணுமா? இளம் தளிர்கள் நிறைய வந்து, மொட்டுக்கள் நிறைய பூக்க சமையல் கட்டில் இருக்கும் இந்த தண்ணீரை கீழே ஊற்றுவதற்கு பதில் இப்படி பயன்படுத்துங்கள்!
இவ்வளவு ஈஸியா காசு செலவு பண்ணாமல் செடிகளை நல்ல முறையில் பழக்க முடியும்னா கண்டிப்பா ட்ரை பண்ணி பார்க்கலாம் தானே.