உங்க வீட்டு செடிகள் வேகமாக வளரணுமா? இளம் தளிர்கள் நிறைய வந்து, மொட்டுக்கள் நிறைய பூக்க சமையல் கட்டில் இருக்கும் இந்த தண்ணீரை கீழே ஊற்றுவதற்கு பதில் இப்படி பயன்படுத்துங்கள்!

plants-garden-coconut
- Advertisement -

நம் வீட்டில் இருக்கும் விதவிதமான செடிகளுக்கு விதவிதமான உரங்களும் கொடுப்பது உண்டு. அந்த வகையில் வேண்டாம் என்று கீழே ஊற்றும் இந்த தண்ணீருக்கு இவ்வளவு சத்துக்கள் உண்டு என்பதை தெரியாமலேயே அதை வீணடிக்கிறோம். இப்படி வீணடிக்கும் இந்த தண்ணீரை வைத்து செடிகளை வேகமாக மடமடவென வளர செய்ய முடியும். அது மட்டும் அல்லாமல் இளம் தளிர்கள் நிறைய துளிர்த்து மொட்டுக்கள் அதிகம் விடுவதற்கு இது உந்துகோலாக இருக்கிறது. அப்படியான ஒரு சக்தி வாய்ந்த உரம் என்ன? அதை பயன்படுத்தும் விதம் தான் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தோட்ட குறிப்பாக தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நம் வீட்டில் ஏராளமான செடி, கொடிகள் வளர்த்து வந்தாலும் அதற்கு தேவையான உரம் சரியாக கொடுக்கும் பொழுது அது நிறையவே வேகமான வளர்ச்சியை கொடுக்கும். வேகமான வளர்ச்சியும், சீரான வளர்ச்சியும் கிடைக்க நாம் அதிக விலை கொடுத்து உரம் வாங்க வேண்டிய அவசியமே இல்லை! நம் வீட்டில் வீணடிக்கும் சில பொருட்களை வைத்தே ரொம்ப சுலபமாக நம் வீட்டுச் செடிகளை செழிக்க செய்து விடலாம்.

- Advertisement -

அது மட்டும் அல்லாமல் இந்த ஒரு உரத்தில் இருக்கக் கூடிய சத்துக்கள் வேகமான வளர்ச்சியை கொடுப்பதோடு மட்டும் அல்லாமல், பெரிது பெரிதாக பூக்கள், காய், கனிகளையும் கொடுக்க வல்லது. அப்படியான ஒரு இயற்கை உரம் பற்றி பார்ப்போம். நாம் அனுதினமும் பயன்படுத்தும் சமையலில் கண்டிப்பாக தேங்காய் ஏதாவது ஒரு விதத்தில் இடம் பெறுவது உண்டு எனவே தேங்காய் வீட்டில் இல்லாமல் இருக்காது. இந்த தேங்காயை நீங்கள் உடைக்கும் பொழுது கிடைக்கக்கூடிய தண்ணீர் தான் அந்த உரம்! தேங்காய் தண்ணீரில் இருக்கும் அமினோ அமிலங்கள், மைக்ரோ நியூட்ரிஷியன்ஸ் போன்றவை செடிகளின் குரோத் ஹார்மோன்சாக செயல்படும்.

ஒரு டம்ளர் தேங்காய் தண்ணீருடன் ஒரு லிட்டர் அளவிற்கு சாதாரண தண்ணீரை தாராளமாக கலந்து கொள்ள வேண்டும். இந்த தண்ணீரை நீங்கள் நேரடியாக ரோஜா, மல்லி போன்ற பூச்செடிகளுக்கும், விதவிதமான காய்கறி செடிகளுக்கும் வேருக்கு கொடுக்கலாம். அல்லது நீங்கள் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் இதை அடைத்து வைத்துக் கொண்டு ஸ்பிரே போல செடி முழுவதும் தெளிக்கவும் செய்யலாம்.

- Advertisement -

இப்படி செடி முழுவதும் தெளிக்கும் பொழுது இலைகள் நன்கு பச்சை பசேல் என பெரிது பெரிதாக துளிர்க்க ஆரம்பிக்கும். இதனால் வரக்கூடிய மொட்டுக்களும் பெரிது பெரிதாக இருக்கும். எல்லா வகையான செடிகளுக்கும் இந்த ஸ்பிரே பயன்படுத்தலாம். இந்த தேங்காய் தண்ணீர் ஸ்ப்ரே யூரியாவுக்கு ஒரு சிறந்த மாற்றாக இருக்கும். அந்த அளவிற்கு எஃபெக்டிவாக இருக்கக்கூடிய இந்த தேங்காய் தண்ணீரை உங்களுடைய எல்லா வகையான செடிகளுக்கும் வாரத்திற்கு ஒரு முறை நீங்கள் பயன்படுத்தினால் போதுமானது.

இதையும் படிக்கலாமே:
பச்சை பசேலென செடிகள் புஷ்டியாக, பெரிய பெரிய பூக்களை கொடுக்க, தினமும் கட் பண்ணும் பால் பாக்கெட்டை தூக்கி போடுவதற்கு முன்னாடி செடிகளுக்கு இப்படி செய்யுங்க!

இந்த தண்ணீரை மட்டும் தெளித்தால் போதும் என்று விட்டு விடக்கூடாது. இயற்கையாக கிடைக்கக்கூடிய வகையிலான எல்லா உரங்களையும் செடிகளுக்கு கொடுத்துவிட்டு பின்னர் தேங்காய் தண்ணீர் ஸ்ப்ரேயையும் பயன்படுத்தி வர வேண்டும். இப்படி தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் நீங்கள் இந்த செடிக்கு இந்த உரத்தை கொடுத்து வந்தால் நிச்சயம் புதிதாக பூக்கும் மொட்டுக்கள் பெரிது பெரிதாக பூக்கவும் துவங்குவதை நீங்கள் காண முடியும். அது மட்டும் இல்லாமல் செடியும் சீரான வேகத்தில், வேகமான வளர்ச்சியை கொடுக்கும்.

- Advertisement -