மனதிற்குப் பிடித்த வேலை, குறிப்பாக அரசாங்க வேலை கிடைப்பதில் சிக்கலா? எப்படிப்பட்ட தடையையும் நீக்கும் பரிகாரம்.

vinayagar-job

தொழில்நுட்பம் நிறைந்த இந்த காலகட்டத்தில் வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக உள்ளது. அதிலும் மனதிற்கு பிடித்த வேலை கிடைக்க வேண்டுமென்றால் கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். அதிலும் நமக்கு கிடைக்கக்கூடிய வேலை அரசாங்க வேலையாக இருக்கவேண்டும் என்று நினைப்பது மிக மிக கஷ்டமான முயற்சியாக இருந்து வருகிறது. சிலருக்கு அரசாங்க வேலை கிடைக்கும் யோகமானது அவர்களது ஜாதகத்திலேயே அமைந்திருக்கும். ஒரு சிலருக்கு கொஞ்சம் பரிகாரங்கள் செய்து கஷ்டப்பட்டால்தான் அரசாங்க வேலை கிடைக்கும் சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு என்ன தான் முட்டி மோதினாலும் அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்பு இருக்காது. ஆனால் அரசாங்க வேலையை செய்யும் அனைவரும் தங்களது ஜாதகத்தை பார்த்து தான் அரசாங்க வேலைக்கு சென்றார்களா? என்று கேட்டால் அது கண்டிப்பாக இல்லை. அவர்களது கடுமையான முயற்சியும், தன்னம்பிக்கையும் தான் நிரந்தரமான வருமானத்தைத் தரும், அரசாங்க வேலையை அவர்களுக்கு தேடித் தந்திருக்கிறது என்பதை கூற வேண்டும். நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்தும் வேலை கிடைப்பதில் தடங்கல் வந்து கொண்டே இருக்கின்றதா? அந்தத் தடைகளை எல்லாம் தகர்த்தெறிய இந்த சின்ன பரிகாரங்களை செய்தாலே போதும். நிச்சயம் நீங்கள் விரும்பிய வேலையாக இருந்தாலும், அரசாங்க வேலையாக இருந்தாலும் கிடைக்கும் அதிக வாய்ப்புகள் உண்டு.

job

சனி கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் பைரவர் சன்னிதானம் இருக்கும் கோவிலுக்கு சென்று விட வேண்டும். புதியதாக வாங்கிய அகல்விளக்கு 1, 27 மிளகு, கருப்பு காட்டன் துணி, இலுப்பை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய். பரிகாரத்தை செய்ய இவைதான் தேவையான பொருட்கள். கோவிலுக்கு சென்ற பிறகு அகல் விளக்கில் மஞ்சள் குங்குமம் வைத்து கொள்ள வேண்டும். 27 மிளகை கருப்புத் துணியில், கருப்பு நூலைக் கொண்டு சிறிய மூட்டையாக கட்டி, அகல் விளக்கில் போட்டு நல்லெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெயையோ ஊற்றி விடவேண்டும். நீங்கள் தயார் செய்த மிளகு மூட்டையுனது எண்ணெயில் முழுவதுமாக நனைந்து இருக்க வேண்டும். பைரவரை மனதார வேண்டிக் கொண்டு ‘வேலையில் இருக்கும் எப்படிப்பட்ட தடையாக இருந்தாலும் அது நீக்க வேண்டுமென்று’ மனதார வேண்டிக்கொண்டு இந்த தீபத்தை ஏற்றி விட வேண்டும். கருப்பு துணையுடன் சேர்ந்து, மிளகும் தீ சுடரில் எரியும் போது உங்களுக்கு ஜாதகத்தில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் பஸ்பம் ஆகும் என்பது நம்பிக்கை. இந்த பரிகாரத்தை தொடர்ந்து 11 சனிக்கிழமைகள் செய்து வரவேண்டும். நல்ல பலன் கிடைப்பதை கண்கூடாக காணலாம். மிளகு மூட்டையை வீட்டிலிருந்து தயார் செய்து எடுத்துச் செல்லக்கூடாது. கோவிலுக்கு சென்று தான் தயார் செய்ய வேண்டும்.

முடிந்தால் இந்த பரிகாரத்தோடு சேர்த்து அரசமரத்திற்கு தொடர்ந்து 41 நாட்கள் வேரில் தண்ணீர் விட்டு வருவது நல்ல பலனை அளிக்கும் ராமநாதர் கோவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பிரகதீஸ்வரர் கோவில் பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில் இந்த திருத்தலங்களுக்கு சென்று வழிபட வேலை கிடைப்பதில் இருக்கும் தடைகள் நீங்கும்.

job

நேர்காணல்(interview) வரும். வேலையே கிடைத்துவிட்டது என்ற சூழ்நிலை வரும். ஆனால் கடைசி சமயத்தில் வேலை கிடைக்காமல் போய்விடும். இப்படிப்பட்டவர்கள் நேர்காணலுக்கு செல்லும் போது, சிறிதளவு கல் உப்பை பேப்பரில் எடுத்து மடித்து உங்களுடைய பர்சில் வைத்துக் கொள்ளவும். இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்தால் போதும். அந்த கல்லுப்பு உங்கள் பர்ஸில் அப்படியே இருக்கவேண்டும். வேலை எப்போது கிடைக்கிறதோ அந்த கல் உப்பை எடுத்து தண்ணீரில் கொட்டி விடுங்கள். உங்கள் பஸ்ஸில் வைத்த சில நாட்களிலேயே நல்ல செய்தி வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே
மொய் பணம் ஒற்றைப்படையில் வைப்பதற்கு இதுவா காரணம்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Pariharam for getting good job in Tamil. Arasanga velai kidaika Tamil. Piditha velai kidaikka vazhipadu. Arasu velai kidaikka Tamil. Velai kidaika pariharam in Tamil.