பித்தளை பாத்திரங்கள், பூஜை பொருட்கள் சிரமம் இல்லாமல் பளபளக்க இந்த 1 பூஜை பொருளே போதுமே!

computer-sambrani-pooja-items
- Advertisement -

நம் வீட்டில் இருக்கும் பித்தளை பாத்திரங்கள் அண்டா, குண்டா போன்றவை முதல் பூஜை பொருட்கள் வரை அனைத்தும் பித்தளையால் ஆன எந்த பொருளாக இருந்தாலும் சரி, கொஞ்சம் கூட சிரமப்படாமல் ரொம்பவே சுலபமாக சுத்தம் செய்ய பூஜை அறையில் இருக்கும் ஒரு பூஜை பொருளே போதும். இந்த வேண்டாம் என்று தூக்கி எறியும் ஒரு பொருள் அனைத்து விதமான பித்தளை பூஜை பொருட்களையும் சுத்தம் செய்து தரக்கூடிய அற்புதமான சக்தி கொண்டுள்ளது உங்களுக்கு தெரியுமா? பூஜை பொருட்கள் பளபளக்க செய்யக்கூடிய அந்த ரகசிய பூஜை பொருள் என்ன? என்பதை பற்றிய பயனுள்ள வீட்டுக் குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பூஜை பொருட்கள் அனைத்தும் பித்தளையால் ஆனதாக பெரும்பாலும் இருக்கும். இந்த பித்தளை பூஜை பொருட்களை சுத்தம் செய்வது ரொம்பவே கடினமாக இருக்கும். நீங்கள் என்னதான் புளி, எலுமிச்சை எல்லாம் போட்டு தேய்த்தாலும் கிடைக்காத சுத்தம் நாம் பயன்படுத்திய பூஜை பொருள் ஒன்றில் அதுவும் இது வேண்டாம் என்று குப்பையில் தூக்கி போடக்கூடிய ஒரு பொருளாக இருக்கிறது. இந்த பொருளைக் கொண்டு எப்படி நாம் அனைத்து பூஜை சாமான்களையும் பளிச்சிட வைக்கப் போகிறோம்?

- Advertisement -

நாம் பூஜை செய்யும் பொழுது வாசனைக்கு சாம்பிராணி, ஊதுவத்தி போன்றவை ஏற்றி வைப்பது உண்டு. அதில் கம்ப்யூட்டர் சாம்பிராணி ஏற்றி வைப்பவர்கள் அதிலிருந்து கிடைக்கக்கூடிய சாம்பலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பொதுவாக இந்த கம்ப்யூட்டர் சாம்பிராணியில் இருந்து கிடைக்கக்கூடிய சாம்பலை குப்பையில் தான் கொட்டுவோம். இதை இனி குப்பையில் கொட்டாமல் சேகரித்து வைத்துக் கொண்டால் உங்களுடைய பூஜை பொருட்கள் அனைத்தையும் இதை வைத்து சுத்தப்படுத்தி விடலாம்.

உங்களிடம் காய்ந்த எலுமிச்சை பழங்கள் அல்லது பயன்படாத எலுமிச்சை பழங்கள் இருந்தாலும் அதிலிருந்து கிடைக்கக் கூடிய சாற்றையும் எடுத்து பிரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். இது பிரிட்ஜை நறுமணமாகவும் வைத்திருக்கும். பூஜை சாமான்கள் தேய்க்கும் பொழுது தேவையான அளவிற்கு இந்த மீந்து போன சாம்பலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்துள்ள எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளுங்கள். ஒரு பேஸ்ட் போல கிடைக்கும்.

- Advertisement -

இந்த பேஸ்ட்டை கைகளால் அல்லது ஸ்கிரப்பரால் எடுத்து பித்தளை பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டும். நீங்கள் சுத்தம் செய்வதற்கு முன்பு பூஜை பொருட்கள் அனைத்தையும் முதலில் ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது துணியால் நன்கு துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் சுத்தம் செய்வதற்கு சுலபமாக இருக்கும். சந்தன, குங்குமம், எண்ணெய், திரி என்று எல்லாவற்றையும் துடைக்காமல், சுத்தம் செய்யாமல் அப்படியே கொண்டு போய் தேய்க்க ஆரம்பித்தால் சிரமமாக இருக்கும் எனவே ஒவ்வொரு பூஜை பொருட்களையும் முதலில் நன்கு துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
1/2 ஸ்பூன் டீத்தூள் இருந்தால் போதும். கருத்து போன பழைய தங்க நகையை கூட ஐந்தே நிமிடத்தில் புதுசு போல மாட்டலாம்.

அதன் பிறகு இந்த சாம்பலை கொண்டு லேசாக தேத்தாலே போதும் பளிச் பளிச்சென தங்கம் போல பித்தளை மின்ன ஆரம்பிக்கும். அந்த அளவிற்கு எஃபக்டிவாக இருக்கக்கூடிய இந்த கம்ப்யூட்டர் சாம்பிராணியின் சாம்பல் இனி கண்டிப்பாக குப்பையில் போகாது, இப்படித்தான் பயன்பட போகிறது பாருங்கள். அதே போல சாம்பிராணி போட பயன்படுத்தும் தேங்காய் சிரட்டை சாம்பல் கூட நீங்கள் இது போல பித்தளை பாத்திரங்களை தேக்க பயன்படுத்தி பாருங்கள், அந்த அளவிற்கு செம ரிசல்ட் கிடைக்கும்.

- Advertisement -