சகல சௌபாக்கியங்களையும் பெற்று தரும் இந்த தெய்வங்களின் படம் உங்கள் வீட்டிலும் இருக்கிறதா?

vinayagar

பொதுவாக பெரும்பாலானோரின் வீட்டு பூஜை அறையில் குலதெய்வம், இஷ்ட தெய்வம் இவைகளைத் தவிர மற்ற தெய்வங்களின் திருவுருவப் படங்கள் எல்லாம் வைத்திருப்பார்கள். சில பேரது வீட்டில் ஒரு சில சுவாமி படங்கள் இருக்கும். சில பேர் வீட்டில் ஒருசில சுவாமி படங்கள் இருக்காது. ஆனால் நம் அனைவரின் வீடுகளிலும் கட்டாயம் கணபதி, லட்சுமி, முருகர், சரஸ்வதி, பெருமாள் இந்த ஐந்து படங்களும் சேர்ந்தது போல நிச்சயமாக ஒரு சுவாமி படம் இருக்கும். குறிப்பாக இந்தக் கடவுள்களை மட்டும் அவசியம் நாம் வீட்டுப் பூஜை அறையில் ஒன்றாக வைக்கும் காரணம் என்ன என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? அதற்கான விடையை இந்தப் பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

5 god

இந்த ஐந்து கடவுள்களும் சேர்ந்தது போல் திருவுருவப்படம் ஒரு வீட்டில் இல்லை என்றால் கூட, ஏதாவது ஒரு விசேஷ தினத்தன்று அதனை கட்டாயம் வாங்கிவிட வேண்டும் என்று நினைப்பார்கள். அதாவது புதியதாக தொழில் தொடங்கும் போதோ, வீடு கட்டி குடி போகும் போதோ முதலில் பூஜை செய்யும்போது இந்த படத்தை வைத்து பூஜை செய்வதையும் வழக்கமாக வைத்திருப்பார்கள். இதற்கு ஒரு முக்கியமான காரணமும் உள்ளது. சரஸ்வதி-ச கணபதி-க லட்சுமி-ல முருகர்-மு இந்த நான்கு கடவுள்களின் முதல் எழுத்தையும் சேர்க்கும்போது சகலமும் என்ற வார்த்தை வந்துவிடுகிறது. கடைசியில் இருக்கும் பெருமாள் இந்த வெற்றிகளை எல்லாம் சேர்த்து தரும் வெற்றி தெய்வமாக கருதப்படுகிறார். இதனால்தான் இந்த திரு உருவ படத்தை வீட்டின் பூஜை அறையில் நடுவே வைத்து முதல் மரியாதை கொடுத்து வழிபடுகின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் நம் வீட்டு பூஜை அறையில் தெய்வங்களின் திருவுருவப் படத்துடன் சேர்த்து முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து வழிபடுவது என்பது மிகவும் சிறந்த ஒன்று. சங்கு, சோழி, சாலிகிராமம், கோமதி சக்கரம் இவைகளுக்கெல்லாம் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்திருந்தாலும் எல்லோரது வீட்டிலும் இந்த பொருட்களை வைத்து முறையாக வழிபடுவது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். நேரம் இருப்பவர்கள் இதற்கான பூஜை புனஸ்காரங்களை செய்து வழிபடலாம். ஆனால் பூஜை செய்ய நேரம் இல்லாதவர்கள் இவற்றுக்கெல்லாம் இணையாக ஒரு கண்ணாடியை பூஜை அறையில் வைத்து வழிபடுவது சிறந்தது என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி குறையும் என்றும், இறந்தவர்களின் படம் குலதெய்வத்தின் படம் இல்லாதவர்களது வீட்டில், இறந்தவர்களின் ஆத்மா அல்லது அந்த வீட்டின் குலதெய்வம் மறைமுகமாக வீட்டிற்குள் வரும் சமயத்தில் அதன் பிம்பமானது இந்த கண்ணாடியில் தெரியும் போது, நம்மை மறக்காமல் இந்த வீட்டின் வழிபட்டு வருகிறார்கள் என்ற மனதிருப்தியானது அந்த குல தெய்வத்திற்கும், நம் முன்னோர்களின் ஆத்மாவிற்கும் கிடைக்கும் என்றும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் முடிந்தவரை ஒரு சிறிய அளவு கண்ணாடியை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளலாம். இப்போது சகல சௌபாக்கியம் தரும் இந்த திருவுருவப் படத்தையும், ஒரு கண்ணாடியையும் நம் வீட்டு வைத்து வழிபடுவதன் மூலம் பல நன்மைகள் நடக்கும் என்றால் அதை செய்வதில் ஒன்றும் தவறு இல்லை.

இதையும் படிக்கலாமே
எப்படிப்பட்ட கடனையும் 48 நாட்களில் தீர்த்து வைக்கும் அபிராமி அந்தாதி பாடல்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Pooja room god photos. Which god photos to keep in pooja room. 5 hindu god photos. Pooja room ideas in Tamil. Pooja room tips in Tamil.