உங்கள் வீட்டு பூஜை அறையில், இறைவன் நிரந்தரமாக குடியிருக்க வேண்டும் என்றால், என்னென்ன செய்ய வேண்டும்?

pooja-room
- Advertisement -

நாம் எல்லோரது வீட்டிலும் பூஜை அறை, தனியாகத்தான் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது.  சிலரது வீட்டில், ஹால் அல்லது சமையலறை இந்த இடங்களில் கூட பூஜை அறையை வைத்திருப்பார்கள். இடப்பற்றாக்குறை காரணமாக, அலமாரிகளில் பூஜை அறையை வைப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால், உங்கள் வீட்டில் பூஜை அறை எந்த இடத்தில் இருந்தாலும், நீங்கள் அந்த பூஜை அறையை எப்படி பயன்படுத்துகிறீர்கள்! என்பதை வைத்துதான் உங்கள் வீட்டு தெய்வம், உங்கள் வீட்டு பூஜை அறையில், நிரந்தரமாக குடி இருக்குமா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும். சரி. நம் வீட்டு பூஜை அறையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இப்போது, இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

pooja-room

உங்கள் வீட்டு பூஜை அறையும், கோவிலுக்கு சமமான கர்ப்பகிரகம் தானே! கோவிலில் சிலைகளாக, இருந்தால் தான் அது தெய்வமா? நம் வீட்டில் பூஜை அறையில் இருக்கும் தெய்வங்களின் திரு உருவப் படங்களும் கர்ப்பகிரகத்திற்கு சமம்தான். உங்களுக்கு இதிலெல்லாம் இஷ்டம் இல்லை. உங்கள் வீட்டு வழக்கப்படி தான், உங்கள் வீட்டு பூஜை அறை இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், அவரவர் விருப்பப்படி, அவரவர் பூஜை அறையை வைத்துக் கொள்ளலாம். அதில் தவறு ஒன்றும் இல்லை.

- Advertisement -

பொதுவாகவே நம் வீட்டு பூஜை அறையில் இருக்கும் தெய்வங்களின் திருஉருவப் படத்திற்கும் உயிர் இருக்கின்றது, என்ற நினைப்பு எல்லோர் மனதிலும் இருக்க வேண்டும். அப்போதுதான், அந்த இடத்தை அசுத்தமாக வைத்திருக்க மாட்டார்கள். அசுத்தமாக இருக்கும் இடத்தில் உயிருள்ள மனிதர்களால் வாசம் செய்ய முடியுமா? அப்படித்தான், தூசு தும்பு உள்ள இடத்தில் இறைவனாலும் வாசம் செய்ய முடியாது.

Pooja room

வாடிய பூவை, நம் தலையில் சூடிக்கொண்டு இருப்போமா? அதேபோல்தான் தெய்வங்களின் உருவ படத்திலும் வாடிய பூ இருக்க கூடாது. தினம் தோறும் புதிய பூவை சூட்ட வேண்டும். நம்மால் தினமும் சாப்பிடாமல் இருக்க முடியுமா? அதேபோல்தான் தெய்வங்களாலும் சாப்பிடாமல் இருக்க முடியாது. தினம்தோறும் நெய்வேதியம் அவசியம். நம்மால் இருளில் வாழ முடியுமா? அதேபோல்தான் பூஜையறையில் தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும்.

- Advertisement -

இப்படியாக, நம் வீட்டு பூஜை அறையில் இருக்கும் தெய்வங்களும், அந்த இடத்தில் வசிப்பதாக நினைத்துக்கொண்டு, எவரொருவர் இறைவனை முறைப்படி வழிபட்டு வருகின்றார்களோ, அவர்களது வீட்டில், அவர்கள் பூஜை செய்யும் இடத்தில், நிச்சயம் தெய்வம் குடியிருக்கும். இதேபோல் இரவு நேரத்திலும், பூஜை அறையை இருட்டாக வைக்கக்கூடாது. ஒரு சிறிய பல்ப் எந்நேரமும் எரிந்து கொண்டே இருக்க வேண்டும். 24 மணி நேரமும், தீபத்தை ஒளிர விட முடியாதவர்கள் பூஜையறையில் சிறிய பல்பை எரிய விடலாம். அதில் ஒரு தவறும் இல்லை.

Amman-deepam

காலை உங்கள் வீட்டு பூஜை முடிந்தவுடன், ஒன்பது மணிக்கு மேல் உங்கள் வீட்டு பூஜை அறையின் கதவு இருந்தாலும், அதை சாத்தி வையுங்கள். அலமாரியில் பூஜை அறை இருந்தால், அதற்கு ஒரு திரை போட்டு மூடி விடுங்கள். மாலை நேரத்தில், ஒரு 5 மணி அளவில் திரையை விலக்கிக் கொள்ளலாம். பூஜை அறை கதவை திறந்துவிட்டு, 6 மணிக்கு தீபம் ஏற்றி இறைவனை வழிபடலாம்.

- Advertisement -

poojai arai

மாலை இறைவழிபாடு முடிந்ததும், மீண்டும் இரவு ஒன்பது மணிக்கு மேல் உங்கள் வீட்டு பூஜை அறையின் கதவை மூடிவிட்டு, அடிக்கடி பூஜை அறையின் உள்ளே போய் வருவதை தவிர்ப்பது நல்லது. பூஜை அருகில் வசிக்கும் இறைவனை எந்தநேரத்திலும் நாம் தொந்தரவு செய்வது தவறு. இறைவழிபாட்டை தவிர மற்ற நேரங்களில் பூஜை அறையாக இருந்தாலும் சரி, பூஜை அறை அலமாரியாக இருந்தாலும் சரி, அதை அடிக்கடி திறந்து மூடாமல் இருப்பது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது.

deepam

உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், உங்கள் வீட்டு பூஜை அறையில் தெய்வங்கள் நிரந்தரமாக குடிகொள்ள வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், இறை வழிபாட்டில் முழு நம்பிக்கை இருந்தால், மேற்குறிப்பிட்ட குறிப்புகளை எல்லாம் தாராளமாக பின்பற்றலாம் எந்த ஒரு தவறும் இல்லை. நீங்கள் உங்கள் வீட்டை பூட்டி விட்டு, வெளியே செல்வதாக இருந்தால் மட்டும், பூஜை அறையை மொத்தமாக சாத்திவிட்டு செல்லக்கூடாது. கதவாக இருந்தாலும், திரையாக இருந்தாலும் கொஞ்சம் இடைவெளி விட்டு சாத்திவிட்டு செல்வது நல்லது என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் பணக்கஷ்டம் தீர, 1 ரூபாய் நாணயம் போதும்! குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு இப்படி செய்து பாருங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -