- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்பூஜை பாத்திரங்கள் எப்போதும் கருகாமல் புதிது போல கடைகளில் இருந்து வாங்கியது போலவே பளிச்சென்று இருக்க...

பூஜை பாத்திரங்கள் எப்போதும் கருகாமல் புதிது போல கடைகளில் இருந்து வாங்கியது போலவே பளிச்சென்று இருக்க வேண்டுமா? அப்டின்னா இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க.

- Advertisement -

வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது எவ்வளவு ஒரு முக்கியமான விஷயமோ அதைவிட முக்கியம் அந்த பூஜைக்கு பயன்படுத்திய பொருட்களை நாம் எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது. பூஜை பொருட்கள் எப்போதும் எண்ணெய் பிசுக்கு உடன் கருப்படைந்து இருந்தால் பார்க்கவும் நன்றாக இருக்காது அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் செய்யும் பூஜைக்கான பலன்மே கூட உங்களுக்கு முழுமையாக கிடைக்காது.

இன்றைய காலக்கட்டத்தில் பெண்களும் வேலைக்கு செல்வதால் பூஜை பாத்திரங்களை அடிக்கடி சுத்தம் செய்து கொண்டிருக்க முடியாது. வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்வதே கூட மிகவும் கடினம் தான். அப்படி இருக்க ஒரு முறை தேய்த்து வைத்த பாத்திரம் குறைந்தது ஒரு பத்து நாட்களாவது பளிச்சென்று இருந்தால்தான் நன்றாக இருக்கும் தேய்த்து அடுத்த நாளில் கருத்து போனால் அதை மறுபடியும் சுத்தம் செய்ய அலுப்பாக தான் இருக்கும்.

- Advertisement -

இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் பூஜை பாத்திரங்களை எளிமையாக சுத்தம் செய்வதோடு, அது அதிக நாட்கள் கருகாமல் புதுசு போல இருக்க என்ன செய்வது என்பதையும் இந்த வீட்டு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்யும் முறை:
பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு முதலில் ஒரு பெரிய எலுமிச்சை பழ அளவு புளியை எடுத்து நன்றாக கரைத்து கொள்ளுங்கள். இந்தப் புளிக் கரைசல் நல்ல திக்கான பேஸ்ட் பதத்திற்கு இருக்க வேண்டும். இந்த புளி பேஸ்டுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவையும் சேர்த்து அரை ஸ்பூன் உப்பையும் கலந்து நன்றாக குழைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது பூஜை பாத்திரங்களை எல்லாம் ஒரு முறை துடைத்து விட்டு தண்ணீர் ஊற்றி அலசி கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் தயார் செய்து வைத்து இந்த பேஸ்ட்டை பாத்திரங்களின் மீது தேய்த்து ஐந்து நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். அதன் பிறகு ஸ்கிரப்பர் வைத்து லேசாக தேய்த்து விட்டாலே போதும் பூஜை பாத்திரங்கள் அனைத்தும் பளிச் சென்று மாறி விடும். விளக்குகளின் இடுக்கில் அழுக்கு படிந்து இருந்தால் மட்டும் டூத் பிரஷ் அல்லது தேங்காய் நார் வைத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

இந்த முறையில் பூஜை பாத்திரங்களை தேய்த்து சுத்தப்படுத்திய பிறகு ஒரு காட்டன் துணியை வைத்து துடைத்து நன்றாக காய வைத்து கொள்ளுங்கள். பாத்திரங்களில் ஈரம் எல்லாம் சுத்தமாக காய்ந்த பிறகு விபூதியை கொஞ்சமாக எடுத்து மெல்லிய காட்டன் துணியில் தொட்டு பாத்திரங்கள் முழுவதிலும் தேய்த்து விடுங்கள். இப்போது இந்த பூஜை பாத்திரங்கள் கடைகளில் இருந்து வாங்கி வந்தது போல பளிச்சென்று இருக்கும் அதே நேரத்தில் சீக்கிரத்தில் கருப்படைந்தும் போகாது.

இதையும் படிக்கலாமே: வெறும் பத்து ரூபாய்க்கு ஒரு பவுடர் டப்பா வாங்கினா போதும், வீடு மொத்தமே பளிச்சுன்னு மாறிடும். அது எப்படி இங்க பவுடர் டப்பா வச்சு வீட்டை சுத்தம் பண்றது யோசிக்கிறீங்களா வாங்க எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தும் இந்த முறை மிகவும் எளிமையாகவும் இருக்கும். அதே நேரத்தில் அடிக்கடி சுத்தம் செய்யாமல் இருக்கவும் இந்த முறை உதவியாக இருக்கும் உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

சற்று முன்