சமையலறையில் இருக்கும் இந்த 1 மாவு போதும். பூஜை பாத்திரங்களை 10 நிமிடத்தில், கை வலிக்காமல் தங்கம் போல பளபளன்னு ஜொலிக்க வைக்கலாம்.

poojavessels
- Advertisement -

பித்தளை பூஜை பாத்திரங்களை சுலபமாக சுத்தம் செய்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளது. பெரும்பாலும் நம்மில் பலபேர் அதை எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்த்திருப்போம். சிலபேர் பீதாம்பரி பயன்படுத்தி பூஜை பாத்திரங்களை தேய்ப்பாங்க. சிலபேர் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் ஊற்றி பூஜை பாத்திரங்களை சுத்தம் பிரிவார்கள். இது எல்லாமே கெமிக்கல் கலந்த, கடையிலிருந்து வாங்கக்கூடிய பொருட்கள் தான். இதன் மூலம் நிறைய பேருக்கு கைகளில் தோல் சுருக்கம் அலர்ஜி கொப்புளங்கள் வருவதற்குக் கூட வாய்ப்புகள் உள்ளது.

கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பூஜை பாத்திரங்களை சூப்பராக சுத்தம் செய்ய வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஒரு பேஸ்ட் தயார் செய்யப் போகின்றோம். இந்தப் பேஸ்டை ஒருமுறை தயார் செய்து ஒரு டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்து விட்டால், 6 மாதங்கள் வரை கெட்டுப்போகாது. உங்களுடைய வீட்டில் ஃபிரிட்ஜ் இல்லை என்றால் ஒரு கொட்டாங்குச்சியில் இந்த பேஸ்டை போட்டு ஒரு வெள்ளைத் துணி போட்டு மூடி அப்படியே ஸ்டோர் செய்தால் 3 மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

முதலில் ஒரு சிறிய பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பு – 1 டேபிள்ஸ்பூன், கோதுமை மாவு – 2 டேபிள்ஸ்பூன், புளி கரைசல் – 1/4 கப்,  1 – பெரிய எலுமிச்சம்பழத்தின் சாறு,  இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக கலந்தால் ஒரு பேஸ்ட் நமக்கு கிடைத்துவிடும். இதை வைத்துதான் பூஜை பாத்திரங்களை தேய்க்க போகின்றோம். (ஒரு எலுமிச்சம்பழம் அளவு புளியை தண்ணீரில் போட்டு திக்காக கரைத்து புளி கரைசலை எடுத்து இதில் ஊற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.)

முதலில் பூஜை பாத்திரத்தில் இருக்கக்கூடிய குங்குமம் எண்ணெய் திரி எல்லாவற்றையும் ஒரு பழைய துணியை அல்லது பேப்பரை போட்டு துடைத்து எடுத்துவிடுங்கள். அதன் பின்பு உங்களுடைய கையாலேயே நீங்கள் தயார் செய்த பேஸ்ட்டை தொட்டு, பூஜை பாத்திரம் முழுவதும் எல்லா இடங்களிலும் படும்படி தடவி அப்படியே 1 நிமிடம் வரை வைத்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு ஸ்பான்ச் நார் அல்லது தேங்காய் நார் அல்லது புதியதாக வாங்கிய பல் தேய்க்கும் பிரஷ் எதை வேண்டும் என்றாலும் பயன்படுத்தி பூஜை பாத்திரங்களை தேய்த்து, இன்டு இடுக்குகளில் நன்றாக சுத்தம் செய்து, சுத்தமான நல்ல தண்ணீரில் கழுவி விடுங்கள். உப்பு தண்ணீரில் முடிந்தவரை பூஜை பாத்திரங்களை கழுவ வேண்டாம். கருத்து போகத்தான் செய்யும்.

நல்ல தண்ணீரில் கழுவி விட்டு அந்த பாத்திரங்களை உடனடியாக ஒரு காட்டன் துணியை வைத்து சுத்தமாக துடைத்து விட வேண்டும். காரணம் தண்ணீர் புள்ளி புள்ளியாக இருக்கும் போது அந்த இடத்தில் எல்லாம் மீண்டும் கரைப்படிவதற்க்கு வாய்ப்புகள் உள்ளது. இப்படி பூஜை பாத்திரங்களை ஒருமுறை தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாக கை வலிக்காது. அதேசமயம் பூஜை பாத்திரங்கள் பளபளவென ஜொலிக்கும். நேரமும் மிச்சமாகும். சுலபமான மெத்தட் இது. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யப் போகின்றோம். குறிப்பாக எந்த கெமிக்கல் கலப்படமும் இதில் இல்லை. உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -