பூஜை அறையில் இந்த சிலைகள் இருப்பது இவ்வளவு பலன்களை கொடுக்குமா? பூஜை அறையில் இருக்க வேண்டிய சிலைகள் என்னென்ன?

vikragam-at-home
- Advertisement -

பொதுவாக பூஜை அறையில் சுவாமி படங்களை அல்லது சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். ஆனால் எல்லோருடைய இல்லத்திலும் சிலைகள் இருக்குமா? என்று கேட்டால் நிச்சயம் இருக்காது. சுவாமி படங்கள் மட்டும் அல்லாமல் சுவாமி சிலைகளையும் வைத்து பூஜை செய்பவர்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் உண்டு. அந்த வகையில் சுவாமி சிலை வைத்திருப்பவர்கள் செய்யக்கூடாதது என்னென்ன? எந்தெந்த சுவாமி சிலைகள் வைத்திருப்பது விசேஷமானது? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பொதுவாக பூஜை அறையில் தினமும் விளக்கு ஏற்றி வைக்கும் பொழுது குடும்பத்தில் சுபிட்சம் நிலவுகிறது. எத்தனையோ எதிர்மறை எண்ணங்கள் மனதில் இருந்தாலும், பூஜை செய்யும் பொழுது கன நேரத்தில் மாறி நேர்மறை எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும். இதுவே பூஜை செய்வதற்கான முதல் பலனாகும். இறைவனிடம் நம்முடைய பாரத்தை இறக்கி வைத்தாயிற்று! இனி அவர் பார்த்துக் கொள்வார் என்கிற நம்பிக்கை தான் பூஜை அறையில் இருக்கும் மிகப்பெரிய சக்தி ஆகும்.

- Advertisement -

இந்த சக்தியை கொடுக்கக் கூடிய பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களை விட, சுவாமி சிலைகள் விசேஷமானது! சிலைகள் பெரும்பாலும் பொதுவாக கோவில்களில் வைத்து வழிபடுவது மட்டுமே செய்ய வேண்டிய விஷயம் ஆகும். ஆனால் பெரிய பெரிய சிலைகளை வீட்டில் நிறுவும் போது அது எந்த உலோகத்தால் செய்ததாக இருக்கிறது? என்பதையும் கவனிக்க வேண்டும். சிலைகள் செய்யும் உலோகமும் மிக அவசியமாக இருக்கிறது. அதன் மூலப்பொருள் ரொம்பவும் சக்தி படைத்ததாக இருக்கிறது எனவே சிலையை எந்த உலோகத்தால் நீங்கள் வாங்கி வைத்திருக்கிறீர்கள்? என்பதை கவனியுங்கள். செம்பு, பித்தளை, இரும்பு போன்ற கனமான உலோகத்தால் ஆன சுவாமி சிலைகள் மிகப்பெரிய அளவில் வீட்டில் வைத்திருக்கக் கூடாது. சிறிய அளவில் ஒரு முழத்திற்கு மேலே உயரமாக அமைந்திருக்கக் கூடாது.

இப்படி உயரமான சிலைகளை வீட்டில் வைத்திருந்தால் அதற்குரிய வழிபாடுகளும் செய்ய வேண்டும். சரியான முறையில் அபிஷேகங்கள் செய்வது, ஆராதனைகள் புரிவது போன்றவற்றை முறையாக செய்யும் பொழுது நமக்கு பலன்கள் கிடைக்கும். அதுவே நீங்கள் அப்படியே சிலையை நிறுவி விட்டு போட்டு விட்டால் எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே சிலைகளை நிருவுபவர்கள் அதை கவனமாக கையாள வேண்டும். அப்படி முடியாவிட்டால் நீங்கள் சிலைகளை வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல!

- Advertisement -

பூஜை அறையில் காமதேனு சிலை இருப்பது குடும்பத்தில் மகாலட்சுமியின் அருளை கொடுக்கும். கன்றுடன் கூடிய காமதேனு சிலையை ஒரு சிறிய அளவிலான தட்டில் வைத்து சுற்றிலும் மலர் அலங்காரம் செய்து வெள்ளிக்கிழமை தோறும் அதற்கு முன்பு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் சகல நன்மைகளும் நடக்கும். அன்னபூரணியின் சிலை பூஜை அறையில் இருப்பது ரொம்பவும் விசேஷமானது. தன தானியத்தை பெருக்கி வறுமையை போக்கக்கூடிய அன்னபூரணியின் சிலையை நிறுவி அதற்கு தினமும் அரிசி போட்டு வழிபட்டு வருவது ரொம்பவே நல்ல பலன்களை கொடுக்கும்.

அது மட்டும் அல்லாமல் பூஜை அறையில் முருகன் சிலை வைத்து செவ்வாய்க்கிழமை தோறும் வழிபட்டால் சொந்த வீடு அமையும் என்பது நம்பிக்கை. லிங்க வடிவ சிலையை வைத்து வழிபட்டால் அதற்கு தினமும் பாலாபிஷேகம் மற்றும் வில்வ அர்ச்சனை செய்து வந்தால் மோட்சம் உண்டாகும். சுப காரிய தடைகள் விலக மகாலட்சுமியின் சிலையை சிறிய அளவில் நிறுவி அதற்கு தாமரை மலர் சூடி நெய் தீபம் தொடர்ந்து ஏற்றி வர சகல நன்மைகளும் நடக்கும். உயரமான சிலைகள் அல்லது சரியான முக அமைப்பு இல்லாத விகாரமான சிலைகள், உக்ர தெய்வங்களின் சிலைகள் கண்டிப்பாக வீட்டில் இருக்கக் கூடாது.

- Advertisement -