உங்க வீட்டு பூஜை அறையில் தவறியும் இனி இந்த தவறை செய்யாதீங்க! கஷ்டம் வருவதற்கு இதுவும் ஒரு காரணம் தான்.

எவ்வளவு பூஜை புனஸ்காரங்களை செய்து வந்தும், இன்றளவும் நம்முடைய வாழ்க்கையில் கஷ்டங்கள் குறைந்தபாடில்லை. ஏதாவது ஒரு ரூபத்தில் கஷ்டங்கள் வரத்தான் செய்கிறது. கஷ்டங்களும் நஷ்டங்களும், சந்தோஷத்திற்கும் நாம் செய்த பாவ புண்ணிய கணக்குகள் ஒரு பக்கம் காரணமாக இருந்தாலும், அன்றாடம் நாம் செய்யக்கூடிய சின்னச்சின்ன தவறுகளும் ஏதோ ஒரு வகையில் காரணமாக வந்து நிற்கும். அந்த வரிசையில் நாம் நம்முடைய வீட்டு பூஜை அறையில் செய்யக்கூடிய ஒரு சிறிய தவறு என்ன? பெரும்பாலும் இதை நம்மில் நிறைய பேர் செய்து கொண்டிருக்கின்றோம். அதை திருத்திக் கொள்வதற்காக இந்த பதிவு.

deepam

வீட்டு பூஜை அறையில் காமாட்சி அம்மன் விளக்கு இருந்தாலும் சரி, குத்துவிளக்காக இருந்தாலும் சரி, அதை தரையில் வைக்கக்கூடாது. இது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். காமாட்சி அம்மன் விளக்கை சிறிய தாம்புல தட்டில், சிறிய கிண்ணத்தின் மேல் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லுவார்கள். முடிந்தவரை அந்த தட்டை எவர்சில்வரில் பயன்படுத்த வேண்டாம். உங்களால் முடிந்த பித்தளை அல்லது செம்பு தட்டுகளை வாங்கி காமாட்சி அம்மன் விளக்குக்கு கீழே வைக்கலாம்.

நம்மில் நிறைய பேர் குத்துவிளக்கை தரையில் வைத்து தான் ஏற்றுவோம். இருப்பினும் குத்துவிளக்கிற்கு அடியில் கொஞ்சமாக பச்சரிசியை பரப்பி, அதன் மேல் குத்து விளக்கை வைத்து ஏற்றுவது வீட்டிற்கு மேலும் லட்சுமி கடாட்சத்தை தேடித்தரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அடுத்தபடியாக சொல்லப்படும் தவறு, இது நிறைய பேர் வீட்டில் செய்யக்கூடிய தவறு, நிறைய பேர் வீடுகளில் தூபக்கால் பித்தளையில் வைத்திருப்பார்கள்.

deepam1

அந்த தூபக்காலில், கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டும்போது, கையில் சூடு பிடிக்கிறது என்ற காரணத்தினால் அதை ஒரு சில பேர், சில்வர் தட்டின் மேல் வைத்துவிட்டு, அதன் பின்பு ஆரத்தி காட்டும் பழக்கம் இருக்கும். இன்னும் சில பேர் வெறும் சில்வர் தட்டையே ஆராத்தி காட்டும் தட்டாக பயன்படுத்தி வருவார்கள். இது அவ்வளவு சரியான முறை அல்ல.

- Advertisement -

பூஜை அறையில் இருக்கும் தெய்வத்தின் திருவுருவப்படத்திற்கு எக்காரணத்தைக் கொண்டும், சில்வர் தட்டில் ஆரத்தி காட்டும் பழக்கத்தை வைத்துக் கொள்ளாதீர்கள். பித்தளை அல்லது செம்பு தட்டை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அந்தத் தட்டில் ஏதேனும் சுவாமியின் உருவப் படங்கள் பதிந்திருந்தால் மிகவும் நல்லது. எடுத்துக்காட்டாக பிள்ளையார், மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் படம் இருக்கலாம்.

thambula-thattu

ஒரு சிறிய மண் அகல் விளக்கில், விபூதி போட்டு, அதன் மேல் கற்பூரத்தை வைத்து பித்தளை தாம்பூல தட்டிலோ அல்லது தூபக் காலிலோ வைத்து இறைவனுக்கு ஆரத்தி காட்டுவதே சரியான முறை. தாம்பூல தட்டாக இருந்தால் ஓரமாக கொஞ்சம் குங்குமத்தையும் வைக்க வேண்டும். இதோடு சேர்த்து சில பேர் வீடுகளில் சுவாமியின் திருவுருவப் படத்திற்கு பின்னால் அதாவது, ஃபிரேம் செய்து வைத்திருக்கும் போட்டோவிற்கு பின்னால், இரும்பு இருக்கும்.

poojai-room

இரும்பு உலோகம் வைத்து ஃபிரேம் செய்த சுவாமியின் திருவுருவப் படத்தை வீட்டில் வைத்துக் கொள்வதும் அவ்வளவு சரியல்ல. இப்போது இரும்புக்கு பதிலாக பலவகையான உலோகங்களில் சுவாமி படங்கள் செய்யப்பட்டு கிடைக்கின்றது. முடிந்தவரை துருப்பிடித்த இரும்பு உள்ள சுவாமி படங்களை பூஜை அறையில் இருந்து அகற்றி விடுவது மிகவும் நல்லது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த சின்ன சின்ன மாற்றங்களை உங்களுடைய வீட்டு பூஜை அறையில் கொண்டு வந்தால் நிச்சயமாக தீராத கஷ்டம், ஏதாவது ஒரு வகையில் சிறிது குறைவதற்கு வாய்ப்பு உள்ளது என்ற கருத்தை இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
கேட்ட வரத்தை உடனே கொடுக்கும் சிவன் அருள் பெற பௌர்ணமியில் அரசமரத்தை என்ன செய்யணும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.