கேட்ட வரத்தை உடனே கொடுக்கும் சிவன் அருள் பெற பௌர்ணமியில் அரசமரத்தை என்ன செய்யணும் தெரியுமா?

sivan-arasa-maram
- Advertisement -

வரம் கொடுப்பதில் வல்லவராக இருக்கும் சிவபெருமானை பற்றிய பல்வேறு புராண கதைகள் நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். யார் என்ன வரம் கேட்டாலும், உடனே அதனை அவர்களுக்கு கொடுப்பது அவருக்கு நிகர் அவரே ஆவார். இதில் மாற்றுக் கருத்து இல்லை. அத்தகைய எம்பெருமான் ஈசனுடைய அருளை பெறுவதற்கு சக்தி வாய்ந்த அரச மர வழிபாடு பௌர்ணமி அன்று செய்யும் பொழுது நமக்கு வேண்டிய வேண்டுதல்கள் அப்படியே பலிக்கும் என்பது ஐதீகம்.

Sivan-God

எவ்வளவு பேர் எவ்வளவு விஷயங்களை சாதிக்க நினைத்தாலும் இறைவனுடைய அருள் இருந்தால் தான் அதனை மெய்பிக்க முடியும். அவ்வகையில் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் இந்த வழிபாட்டை செய்து பலனடையலாம். அதை எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

பொதுவாகவே பவுர்ணமி நாளில் பிரபஞ்சத்தில் அதிக சக்தி இருக்கும். பௌர்ணமியில் நாம் செய்யும் ஒவ்வொரு வேண்டுதல்களும், பரிகாரங்களும், பூஜைகளும் கூட கூடுதல் பலன்களை கொடுப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய பௌர்ணமி நன்னாளில் உணவு எடுக்காமல் விரதம் இருந்து இரவு நேரத்தில் இதனை செய்ய வேண்டும். அரச மரம் இருக்கும் இடத்திற்கு சென்று, அம்மரத்தை சுற்றி 1008 முறை வலம் வர வேண்டும் அப்படி வலம் வரும் பொழுது சிவபெருமானுடைய சக்தி வாய்ந்த பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்த படி வலம் வர வேண்டும் என்பது முக்கியமானது.

om-mantra

இரவு முழுவதும் உண்ணாமல், உறங்காமல் முழுமையான விரதத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தை பொறுத்து நீங்கள் இதனை செய்வதா? வேண்டாமா? என்கிற முடிவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்திற்கு மிஞ்சிய விரதம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். விரதம் இருக்க முடியாதவர்கள் நீர் ஆகாரங்களை எடுத்துக் கொண்டு வழிபாடு செய்யலாம். இரவில் கண்விழித்து பஞ்சாட்சர மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். முழுமையாக சிவனை சரணடைய வேண்டும்.

- Advertisement -

பின்னர் காலையில் சிவன் கோவிலுக்குச் சென்று அங்கே இருக்கும் சிவபெருமான் சன்னதியில் தீபத்தில் நெய் ஊற்றி அதில் பஞ்சு திரி இட்டு விளக்கு ஏற்ற வேண்டும். அப்பொழுதும் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். விரதம் முடியும் வரை இந்த மந்திரத்தை உச்சரிப்பது நிறுத்தக்கூடாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. விளக்கேற்றிய பின் சன்னிதியை சுற்றி ஒன்பது முறை குறையாமல் வலம் வர வேண்டும்.

sivan

அதன் பிறகு பூஜையை நிறைவு செய்து விட்டு வீட்டிற்கு வந்து புதிதாக சமைத்த சுத்த அன்னத்தை சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். அன்றைய நாளில் உங்களால் முடிந்த அளவிற்கு வீட்டிற்கு மற்றவர்களை அழைத்து தயிருடன் கூடிய அன்ன தானத்தை செய்ய வேண்டும். அப்படி செய்ய முடியாதவர்கள் வெளியில் 5 பேருக்காவது உண்ண உணவின்றி இருப்பவர்களுக்கு தயிர் சாத உணவு பொட்டலங்களை வாங்கிக் கொடுக்கலாம். இப்படி செய்வதால் இறைவனுடைய முழு அருளும் உங்களுக்கு கிடைக்கும். கேட்ட வரம் உடனே கிடைக்கும். சுபகாரிய தடை, திருமண தடை, தொழில் தடை போன்று எந்த விஷயத்தில் தடைகள் இருந்தாலும் அவைகள் நீங்கி ஏராளமான நன்மைகள் நடைபெறும்.

இதையும் படிக்கலாமே
ஆண்கள் வீட்டில் விளக்கு ஏற்றினால் ஒரு பலனும் கிடைக்காதா? எதனால் அப்படி சொல்லப்படுகிறது என்பதை நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -