பூஜை அறையில் வைக்கக் கூடாத பொருட்களின் பட்டியலில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் இந்த தவறுகளை உங்க வீட்ல செய்றீங்களா?

flowers-pooja-room
- Advertisement -

ஒவ்வொரு வீட்டினுடைய கருவறை என்பது அந்த வீட்டின் பூஜை அறை தான். அந்த பூஜை அறைக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை எல்லோரும் கட்டாயம் கொடுத்தே ஆக வேண்டும். முதலில் உங்களுடைய வீட்டு பூஜை அறை சுத்தமாக இருந்துவிட்டால் அதன் பின்பு படுக்கை அறையில் நிம்மதி கிடைக்கும். அதன்பின்பு சமையலறையில் சந்தோஷம் இருக்கும். வீட்டில் மனநிறைவு முழுமையாக இருக்கும். பெரும்பாலும் இந்த விஷயம் நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். இதுதவிர நம்மை அறியாமல் பூஜை அறையில் செய்யக்கூடிய சில தவறுகள் உள்ளது. பின் சொல்லக்கூடிய தவறுகளை இதுநாள்வரை நீங்கள் அறியாமல் செய்து இருந்தால் பரவாயில்லை. இனி வரும் காலங்களில் அதை திருத்திக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

பூஜை அறை என்றால் அதைப் பராமரிக்கும் பொறுப்பு அந்த வீட்டின் பெண்களிடத்தில்தான் உள்ளது. பெண்கள் தலைக்கு குளித்து விட்டு வந்து தலையில் ஈரத்தோடு பூஜை அறை வேலையை செய்யத் தொடங்குவார்கள். பூஜை அறைக்குள் சென்றவுடன் தலையில் இருக்கும் துண்டை கழட்டி அப்படியே பூஜை அறையில் முடியோடு வைத்து விடுவார்கள். இந்த தவறை இனி செய்யாதீர்கள். பூஜை அறைக்குள் செல்வதற்கு முன்பே தலையில் இருக்கும் துண்டை எடுத்து விடுங்கள். முடியோடு சேர்ந்து ஈரத் துண்டு பூஜை அறைக்குள் இருக்கக்கூடாது.

- Advertisement -

அடுத்தபடியாக சில பேர் இறைவனுக்கு நிவேதனமாக பழவகைகளை வைப்பார்கள். அந்த பழத்தில் இருக்கும் தோலை நீக்கிவிட்டு சுவாமிக்கு படைக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அவசர அவசரமாக பழத்தை எடுத்து பூஜை அறையிலேயே உரித்து, பழத்தோலை பூஜை செய்யும் இடத்திற்கு அருகிலேயே வைத்துக் கொள்வார்கள். ஆனால் இறைவனுக்கு நிவேதனம் செய்வதற்கு முன்பு அந்த பழத்தோலை பூஜை செய்யும் இடத்தில் இருந்து அப்புறப்படுத்துவது நல்லது.

விளக்கிலிருந்து எரிந்த திரியை எடுத்து விட்டு, விளக்கு பக்கத்திலேயே வைத்துவிட்டு மீண்டும் புதிய திரி போட்டு ஏற்றும் பழக்கத்தை வைக்கக்கூடாது. பழைய திரியை பூஜை அறையில் இருந்து உடனடியாக நீக்கி விட வேண்டும். சுவாமி படங்களுக்கு மேலே வைய்த்திருக்கும் பழைய பூக்கள் வாடி விட்டால், அதை உடனடியாக நீக்கி விடுங்கள். புதிய பூ கிடைக்கும் வரை, பழைய பூவை பூஜை அறையில் போட்டு வைக்கக்கூடாது. பூ இல்லாமல் தீபம் ஏற்றினாலும் தவறு கிடையாது. ஆனால் வாடிய பூவை போட்டு பூஜை செய்யக்கூடாது. வாடிய பூக்களை எடுத்து பூஜை அறைக்கு ஓரமாக வைத்துவிட்டு, மீண்டும் புதிய போப் போடுவதும் தவறு. வாடிய பூவை பூஜை அறையில் இருந்து வெளியே எடுத்து வர வேண்டும்.

- Advertisement -

இறுதியாக ஒரு விஷயம். இவை அனைத்தும் மிக மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியவை. நிறைய பேர் வீடுகளில் இப்போது கோவிலிலிருந்து அல்லது தெரிந்தவர்களிடம் இருந்து எலுமிச்சம் பழம் வாங்கி கொண்டு வந்து பூஜை அறையில் வைக்கும் பழக்கம் உள்ளது. இப்படி பூஜை அறைக்குள் எடுத்து வரக்கூடிய எலுமிச்சை பழம் நமக்கு நன்மையையும், செய்யும். அதற்கு நேர் எதிராக சில கெடுதல்களையும் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

யார் எலுமிச்சம்பழத்தை கொடுத்தாலும் அதைக் கொண்டு வந்து பூஜை அறையில் வைக்கக் கூடாது. நம்பிக்கையான நபர் கையில் இருந்து பெறப்பட்ட எலுமிச்சம்பழத்தை மட்டும்தான் பூஜை அறையில் வைக்க வேண்டும். அம்மனின் பாதங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட எலுமிச்சம்பழத்தை பூஜை அறையில் வைத்து பூஜை செய்தாலும், அதற்கு என்று ஒரு குறிப்பிட்ட காலம் உள்ளது. எலுமிச்சம்பழம் நிறம் மாறி கருப்பு நிறத்திற்கு வந்துவிட்டால், எலுமிச்சம் பழத்தினுடைய அந்த மஞ்சள் தன்மை மாறும் போது எலுமிச்சம் பழத்தை உடனேயே பூஜை அறையில் இருந்து அப்புறப்படுத்திவிட வேண்டும்.

இதுதவிர சிலபேர் தாயத்து, மந்திர தகடு, எந்திரம், தேங்காய் என்று நிறைய பொருட்களை பூஜை அறையில் நீண்ட நாட்களாக வைத்து பராமரித்து வருவார்கள். இப்படிப்பட்ட பொருட்களுக்கெல்லாம் காலம் நேரம் என்பது இருக்கும். அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள், இருபத்தியோரு நாட்கள் தான் வீட்டில் வைக்க வேண்டும் என்ற கணக்கு இருக்கும். அதையும் தாண்டி இப்படிப்பட்ட பொருட்களை பராமரிப்பு இல்லாமல் பூஜை அறையில் வைப்பது நம் வீட்டிற்கு சில பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்க்கும். இந்த தவறுகளை எல்லாம் உங்கள் வீட்டில் நீங்கள் செய்கிறீர்களா என்று பாருங்கள். தேவையில்லை என்று நினைக்கும் பொருளை உடனடியாக பூஜை அறையை விட்டு அப்புறப்படுத்துவது நம் வீட்டிற்கு நல்லது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -