பித்தளை, செம்பு, வெள்ளி பொருட்கள், பூஜை பாத்திரங்கள் பளிச் பளிச் என ஜொலித்திட இந்த 1 பொருள் பயன்படுமா என்ன?

pithalai-velli-tomato-sauce
- Advertisement -

நம் வீட்டில் இருக்கும் பூஜை அறை பாத்திரங்கள் மற்றும் பித்தளை, செம்பு, வெள்ளி கொண்டு தயாரிக்கப்பட்ட எந்த வகையான பாத்திரங்கள் அல்லது சிலைகள் பளிச் பளிச் என்று மின்னுவதற்கு நாம் நிறையவே மெனக்கெடுக்கிறோம். கொஞ்சம் கூட சிரமம் இல்லாமல் இந்த சில எளிதான வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி இவற்றை ஜொலித்திட செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பொதுவாக பித்தளையாக இருந்தாலும், செம்பாக இருந்தாலும் அதை உரிய முறையில் பராமரித்து வந்தால் தான் எப்பொழுதும் புதிது போல இருக்கும். நீண்ட நாட்கள் விட்டு வைத்து விட்டால் நிறம் மங்கி போய் கறுத்து காணப்படும் எனவே அடிக்கடி பித்தளை மற்றும் செம்பு பாத்திரங்களை ரொம்பவும் சுலபமாக சுத்தம் செய்வது எப்படி?

- Advertisement -

உங்கள் வீட்டில் இருக்கும் பித்தளை தட்டுகள், விளக்குகள் அல்லது பூஜை பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதில் படிந்துள்ள கறைகளை நீக்குவதற்கு டொமேட்டோ கெட்சப் ஒன்றே போதும். ஒரு பல் துலக்கும் பிரஷ் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் டொமேட்டோ கெட்சப் கொஞ்சம் தொட்டு தொட்டு பித்தளை பொருட்கள் மீது நன்கு தேய்த்து விட்டு ஊற விட்டு விடுங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து மீண்டும் ஒருமுறை எல்லா இடங்களிலும் பிரஷ் கொண்டு தேய்த்தால் பளிச்சன மின்ன ஆரம்பித்து விடும். அதன் பிறகு சாதாரண தண்ணீரை கொண்டு நன்கு கழுவி விட வேண்டும். பிறகு மெல்லிய துணியால் துடைத்து வைத்தால் புதிது போல இருக்கும்.

செம்பு பாத்திரங்கள், செம்பு பூஜை பொருட்கள் போன்றவை வாங்கிய புதிதில் எப்படி இருந்ததோ, அதே போல மாற்றுவதற்கு ஒரு கிண்ணத்தில் நாலு தேக்கரண்டி அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் ஒரு கப் வினிகர் சேர்த்து பேஸ்ட் போல கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு செம்பு பாத்திரங்களுக்குள் நன்கு முழுவதுமாக தடவி விட்டு விடுங்கள். அதன் பிறகு பத்து நிமிடம் கழித்து கழுவி சுத்தமான துணியை கொண்டு துடைத்து எடுத்து வைத்து விட்டால், புதிதா? பழையதா? என்றே தெரியாது, அவ்வளவு அழகாக சுத்தமாக இருக்கும்.

- Advertisement -

மேலும் செம்பு பாத்திரத்தில் இருக்கும் விடாப்பிடியான பச்சை நிற கறைகளை அகற்றுவதற்கு உப்புடன் எலுமிச்சையை பாதியாக வெட்டி அதில் தொட்டு நன்கு கறை உள்ள இடங்களில் எல்லாம் தேய்த்தால் சுலபமாக புதிதாக வாங்கியது போல மாறிவிடும். வெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்வதற்கு வெள்ளி பூஜை பாத்திரங்களை பளிச்சிட வைப்பதற்கு முதலில் அலுமினியம் ஃபாயில் பேப்பர் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு அடி கனமான இரும்பு பாத்திரம் ஒன்றில் இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

பின்னர் அலுமினிய ஃபாயில் பேப்பரை சிறு துண்டுகளாக கத்தரித்து அதில் சேர்க்க வேண்டும். பிறகு வெள்ளிப் பொருட்களை அதனுள் மூழ்கிக் கிடக்குமாறு வைத்து ஐந்து நிமிடம் கொதிக்க விடுங்கள். பிறகு அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள். அதன் பிறகு வெள்ளி பொருட்களை எடுத்து ஒருமுறை தண்ணீரில் கழுவி துடைத்து வைத்தால் சிரமமே இல்லாமல் சுத்தமாகிவிடும். வெள்ளிப் பொருட்களை புளிச்சாறு கொண்டும் நீங்கள் சுத்தம் செய்யலாம். அரை மணி நேரம் புளியை கரைத்து புளிச் சாற்றில் வெள்ளி பொருட்களை ஊற வைத்து தேய்த்தால் சூப்பராக மாறிவிடும்.

- Advertisement -