- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்ஒரே நிமிஷத்துல மேஜிக் பண்ண மாதிரி உங்க பூஜை பாத்திரங்கள் எல்லாம் பளிச்சுனு மின்னணுமா? அப்படின்னா...

ஒரே நிமிஷத்துல மேஜிக் பண்ண மாதிரி உங்க பூஜை பாத்திரங்கள் எல்லாம் பளிச்சுனு மின்னணுமா? அப்படின்னா நீங்க வேண்டாம்னு தூக்கி போடுற இந்த ஒரு பொருளை இப்படி யூஸ் பண்ணி பாருங்க.

- Advertisement -

பெண்களுக்கு இருக்கும் எத்தனையோ வேலைகளில் இந்த பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்யும் வேலை மட்டும் எப்போதுமே ரொம்பவும் சிரமமாகத் தான் இருக்கும். இந்த பூஜை பாத்திரங்களை எப்படி சுத்தம் செய்து வைத்தாலும் கருத்து போய் பார்க்கவே நன்றாக இருக்காது. இதனால் அடிக்கடி தேய்த்து சுத்தப்படுத்த வேண்டியதாக இருக்கும். இப்போது இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் ரொம்பவே சுலபமான முறையில் அதுவும் நாம் வேண்டாம் என்று நினைத்து தூக்கி போடும் பொருட்களை பூஜை பாத்திரங்களை பளிச்சென்று மாற்ற முடியும்.

பூஜை பாத்திரங்களை சுலபமாக சுத்தம் செய்யும் முறை:
பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்ய நாம் பயன்படுத்தப் போகும் அந்த ஒரு பொருள் எலுமிச்சை பழம் தான். எலுமிச்சை பழம் என்றால் நாம் புதிதாக வாங்கி வந்த பழம் கிடையாது. எல்லோர் வீட்டு பிரிட்ஜிலும் எப்போதும் ஒன்று இரண்டு காய்ந்த எலுமிச்சை பழங்கள் இருக்கும். அந்த பழங்களை வீணாக நாம் தூக்கி கீழே தான் போடுவோம். இனி அப்படி போடாமல் அதை வைத்து தான் பூஜை பாத்திரங்களை பளிச்சென்று மாற்றுவதற்கான லிக்விடை தயார் செய்யப் போகிறோம்.

- Advertisement -

இந்த லிக்விடை தயார் செய்ய காய்த்த எலுமிச்சை பழங்களை எடுத்து அதை சின்ன சின்னதாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இதை அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். திப்பிகள் இல்லாமல் அரைக்க முடிந்தால் அரைத்துக் கொள்ளுங்கள் இல்லை என்றால் அதை ஒரு வடிஜெல்லியில் சேர்த்து வடித்துக் கொள்ளுங்கள். திப்பிலிகள் எல்லாம் தங்கி வெறும் சாறு மட்டும் உங்களுக்கு கிடைத்து விடும்.

இப்போது ஒரு சிறிய கிண்ணத்தில் அரைத்த இந்த எலுமிச்சை சாறு சேர்த்து அதில் கால் ஸ்பூன் உப்பையும் சேர்த்த பிறகு, நீங்கள் வீட்டில் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் லிக்விட் அல்லது ஹேண்ட் வாஷ் இதில் எதை வேண்டுமானாலும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது பூஜை பாத்திரங்களை எல்லாம் முதலில் ஒரு டிஷ்யூ பேப்பர் வைத்து எண்ணெய்களை சுத்தமாக துடைத்து எடுத்து விடுங்கள். அதன் பிறகு கலந்து வைத்த லிக்விடை பாத்திரம் தேய்க்கும் ஸ்பான்ச்சை வைத்து தேய்த்துக் கொள்ளுங்கள். பூஜை பாத்திரங்கள் எல்லாம் பளிச்சென்று மாறி விடும்.

இப்படி தேய்த்த பிறகு இந்த பாத்திரங்களை எல்லாம் ஒரு காட்டன் துணி வைத்து சுத்தமாக துடைத்து வெயிலில் சிறிது நேரம் வைத்து எடுத்து விடுங்கள்.இதனால் பூஜை பாத்திரம் அதிக நாட்கள் கருக்கவும் செய்யாது அதே நேரத்தில் பளிச்சென்று மின்னும்.

இதையும் படிக்கலாமே: கருத்துப்போன வெள்ளி கொலுசை 2 நிமிடத்தில் புத்தம் புதுசு போல மாற்றிவிடலாம். ஒரு சொட்டு தண்ணீர் கூட இதற்கு தேவையில்லை.

இப்படி நாம் வீட்டில் தேவையில்லை என்று நினைத்து தூக்கி போடும் இந்த ஒரு பொருளை வைத்து பூஜை பாத்திரங்களை இவ்வளவு பளிச்சென்று ஆக்க முடியுமா? என்று உங்களுக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கும். நீங்களும் ஒரு முறை இதை ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்