கருத்துப்போன வெள்ளி கொலுசை 2 நிமிடத்தில் புத்தம் புதுசு போல மாற்றிவிடலாம். ஒரு சொட்டு தண்ணீர் கூட இதற்கு தேவையில்லை.

- Advertisement -

பெண்கள் தங்களுடைய காலில் விரும்பி அணியக்கூடிய அணிகலன் தான் இந்த கொலுசு. விதவிதமாக எத்தனையோ டிசைன்களில் பேன்சி கொலுசு வந்து இருந்தாலும் வெள்ளி கொலுசுக்கு இருக்கும் மவுசு தனி. பெரும்பாலும் பெண் குழந்தைகளுக்கு கொலுசு போட்டு தான் வைத்திருப்போம். ஆனால் அந்த கொலுசு புதுசாக வாங்கி போடும்போது பளபளப்பாக ரொம்பவும் அழகாக இருக்கும். சில நாட்கள் கழித்து அந்த கொலுசை பார்த்தால் கருத்துப் போய் இருக்கும்.

கருத்து போன கொலுசு கொஞ்சம் அழகு குறைவாக காணப்படும். அந்த கொலுசை மிக மிக சுலபமான முறையில் வெள்ளையாக மாற்றுவது எப்படி என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். வெள்ளி கொலுசுக்கு மட்டும் அந்த குறிப்பு கிடையாது. வெள்ளி செயின், வெள்ளி மோதிரம், வெள்ளி கம்மல், வெள்ளி சம்பந்தப்பட்ட எந்த பொருட்களாக இருந்தாலும் இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க. ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் அந்த வெள்ளி பொருளை பளிச் பளிச்சென்று மாற்றலாம்.

- Advertisement -

வெள்ளி பொருட்கள் சுத்தம் செய்ய எளிமையான முறை:
இது கொஞ்சம் பழைய ஐடியா தாங்க. சில பேருக்கு தெரிந்திருக்கும். சில பேருக்கு தெரிந்திருக்காது. உங்களுக்கு இந்த ஐடியா தெரிந்திருந்தால் பரவாயில்லை. தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும். இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் பல்பொடி. கோல்கேட் பல்பொடி நம்முடைய வீட்டு பக்கத்தில் இருக்கும் அன்னாசிக்கடையிலேயே கிடைக்கும். பத்து ரூபாய்க்கு சின்ன டப்பா வாங்கினால் கூட போதும். அதை ஒரு கிண்ணத்தில் கொட்டிக் கொள்ளுங்கள்.

கருத்துப்போனே வெள்ளி கொலுசை எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் எல்லாம் வேண்டாம். ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது வெள்ளை காட்டன் துணியில் இந்த கோல்கேட் டூத் பவுடரை தொட்டு, கருத்துப்போன வெள்ளி கொலுசின் மேல் லேசாக தேய்க்க வேண்டும். முன்பக்கமும் பின்பக்கமும் நன்றாக தேய்த்துக் கொடுக்க வெள்ளி கொலுசின் மேல் இருக்கும் கருப்பு அனைத்தும் அந்த துணியில் ஒட்டி, வெள்ளி கொலுசு 5 நிமிடத்தில் பளபளப்பாக மாறிவிடும். முன் பக்கம் பின் பக்கம் இரண்டு பக்கமும் இதேபோல துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுடைய கொலுசில் கொஞ்சம் டிசைன் அதிகமாக இருக்கிறது. டிசைன்களுக்கு உள்ளே கருப்பு நிறத்தில் அழுக்கு தூசி எல்லாம் இருக்கிறது என்றால் பல் தேய்க்கும் பழைய பிரஷில், இந்த டூத் பவுடரை தொட்டு தண்ணீர் எதுவும் போடாமல் அப்படியே அந்த கொலுசின் மேல் லேசாக வைத்து தேய்த்துக் கொடுத்தால், டிசைன்களின் இடுக்குகளின் இருக்கும் கருப்பு நிறமும் சுத்தமாக நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல தான் உங்களுடைய வீட்டில் இருக்கும் வெள்ளி செயின், வெள்ளி பாத்திரம், குங்குமச்சிமிழ் எதுவாக இருந்தாலும் இந்த டூத் பவுடரை கொண்டு லேசாக தேய்த்துக் கொடுங்கள். அதில் இருக்கும் கருப்பு நிறமெல்லாம் நீங்கி வெள்ளி பொருட்கள் புத்தம் புதுசு போல ஜொலிக்க தொடங்கி விடும்.

இதையும் படிக்கலாமே: அட வாஷிங் மெஷின் கிளீன் பண்றது இவ்ளோ ஈசியா? இது தெரியாம கை வலிக்க துடைச்சி கஷ்டப்பட்டோமே. ஒரே ஒரு முறை இப்படி மட்டும் கிளீன் பண்ணி பாருங்க, பழைய மிஷின் கூட புதுசு மாதிரி மாறிடும்.

நூற்று கணக்கில் கடையில் காசு கொடுத்து வெள்ளி பொருட்களுக்கு, பாலிஷ் போடுவோம். கோல்கேட் டூத் பவுடர் தானே. கடையிலிருந்து வாங்கி இதை முயற்சி செய்துதான் பாருங்கள். ரிசல்ட் எவ்வளவு கிடைக்கிறது என்று உங்களுக்கே தெரியும். பிறகு நீங்கள் போட்டிருக்கும் கொலுசு எப்போதும் புதுசு போலவே ஜொலிக்கும். பாக்குறவங்க எல்லாம் கேப்பாங்க தினமும் வெள்ளி புது கொலுசா என்று. இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -