வீட்டில் பூஜை அறையையும், கடவுள் சிலையையும் எந்த இடத்தில், எந்த திசையில் வைத்தால் என்ன பலன்கள் உண்டாகும் என்று உங்களுக்கு தெரியுமா?

poojai
- Advertisement -

பூஜை அறை என்பது ஒவ்வொரு வீட்டிற்கும் அவசியம் தேவையான ஒரு முக்கியமான பகுதியாகும். பூஜை அறையை எப்போதும் சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். பக்தி என்பது மனதையும், உடலையும் சமநிலைப்படுத்தும் விஷயமாகும். இவ்வாறு பக்தி மய மிக்க பூஜை அறையை சரியான இடத்தில், சரியான விதத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டும். அவ்வாறு பூஜை அறையையும் பூஜை அறையில் உள்ள படங்களையும் எவ்வாறு சரியான முறையில் கையாள வேண்டும் என்பதுதனை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றீர்கள்.

pooja-room1

பூஜை அறை:
பூஜை அறையை வாஸ்துப்படி அமைப்பது என்பது மிகவும் அவசியமாகும். இதன் படி பூஜை அறை வீட்டின் வடகிழக்கு மூலையில் இருக்க வேண்டும். அதாவது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் இருக்கலாம்.

- Advertisement -

பூஜை அறையை மரத்தினால் அமைப்பது என்பது மிகவும் விசேஷமானதாகும். பூஜை அறையின் மேல் பகுதி கோவிலின் கோபுரத்தினை போன்று கூம்பு வடிவில் இருக்க வேண்டும். அங்கு மதச் சார்பான புத்தகங்கள் மற்றும் புராணங்களை மேற்கு அல்லது தெற்கு திசையில் வைக்க வேண்டும்.

ayyar-malai-kovil

பூஜை அறை எப்பொழுதும் பாத்ரூமிற்கு அருகிலோ அல்லது பாத்ரூமிற்கு கீழேயோ இருந்தால் எதிர்மறை ஆற்றலை உண்டாக்கும். அதுமட்டுமல்லாமல் பூஜை அறை, படிக்கட்டிற்கு கீழேயோ அல்லது பூஜை அறைக்கு அருகிலேயே இருப்பது என்பது கூடாது.

- Advertisement -

பூஜை படங்கள் மற்றும் சிலைகள் வைக்கும் முறை:
பிரம்மா, விஷ்ணு, இந்திரன், சூரியன், முருகன் ஆகிய கடவுள்களின் சிலைகளை பூஜை அறையில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வைப்பதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

guberan

கணபதி, குபேரர், பைரவர், துர்கா, ராதை, மற்ற அம்மன் சிலைகள் இவற்றை பூஜை அறையில் வடக்கு, நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதால் வீட்டில் எப்பொழுதும் நன்மைகள் உண்டாகும்.

- Advertisement -

அனுமன் படம் அல்லது சிலையை பூஜை அறையின் அக்னி மூலையான தெற்கு, கிழக்கு திசைகளில் வைக்க கூடாது, இது நன்மைக்கான அடையாளமாக இருக்காது. எனவே இதனை தவிர்த்து வேறு திசைகளில் வைத்து வந்தால் நல்ல பலன் உண்டாகும்.

Perumal

பெரும்பாலும் சிவபெருமானை லிங்க வடிவில் தான் வழிபடுகின்றோம். எனவே சிவலிங்கத்தை பூஜை அறையின் வடக்கு திசையில் வைத்து தான் வழிபட வேண்டும். அவ்வாறு வழிபடுவதன் மூலம் சிவனின் ஆசியைப் பெற முடியும்.

பொதுவாக கடவுள் படங்கள் மற்றும் சிலைகளை பூஜை அறையின் வடகிழக்கு திசைகளில் வைத்து வணங்குவது என்பது பல நன்மைகளைத் தரும். பெரும்பாலும் சிலைகளை பூஜை அறையில் அதிகமாக வைத்திருந்தால் தினமும் அவற்றிற்கு நெய்வேத்தியம் படைத்து பூஜை செய்வது என்பது மிகவும் அவசியமாகும். அவ்வாறு செய்யாவிட்டால் அது உங்களுக்கு நன்மையை கொடுக்காது.

poojai

அதேபோல் பூஜை அறையில் உள்ள படத்திற்கும், சிலைகளுக்கும் எப்பொழுதும் மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து, வாசனைகள் நிறைந்த பூ மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி, தூபம் காண்பித்து முறைப்படி வணங்கி வந்தால் அனைத்து நன்மைகளும் உங்களைத் தேடி வரும்

- Advertisement -