பூஜை அறையில் மறந்தும் இவ்வாறான தவறுகளை செய்து விடாதீர்கள். குடும்பத்தில் தீராத கஷ்டங்கள் வந்துவிடும்

poojai
- Advertisement -

அனைவரது வீட்டிலும் சமையலறை மற்றும் பூஜை அறை இவை இரண்டும் தான் முக்கியமான இடங்களாக பார்க்கப்படுகிறது. எவ்வாறு உயிர் வாழ உணவு முக்கியமோ, அதுபோல நமது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற கடவுளின் அனுகிரகம் கிடைப்பதும் மிகவும் முக்கியமானதாகும். கடவுளின் அருளைப் பெறுவதற்காக அனைவரும் பூஜைகள் பல செய்து வருகின்றோம். இவ்வாறு வீட்டில் பூஜை செய்து கடவுளின் அருளைப் பெறும் பூஜை அறையை எவ்வாறு வைத்துக் கொள்கிறோமோ அந்த வகையில் தான் நமது வீட்டிற்கான பலன்கள் கிடைக்கின்றன. அவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறையை எப்படி வைத்திருக்க வேண்டும்? அதில் எந்தெந்த தவறுகளை செய்திடக் கூடாது? என்பது பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

poojai arai

ஒருவர் வாழப்போகும் வீடு அவர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். அந்த வீட்டிலுள்ளவர்கள் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும், செல்வச் செழிப்புடனும் வாழ்வதற்காக பல சாங்கியங்கள் செய்துதான் வீட்டைக் கட்டுவார்கள். அவ்வாறு நிலை வாசற் படியில் ஒரு வித பூஜை செய்வது, குபேர மூலையில் குபேர பூஜை செய்வது, சமையல் அறையில் பால் காச்சி பூஜை செய்வது இது போன்ற சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாம் சரியான முறையில் செய்த பின்னர்தான் வீட்டிற்குள் குடும்பத்தினர்கள் நுழைவார்கள். இவ்வாறு பார்த்து பார்த்து செய்யும் பூஜைகளின் பலன்கள் நிரந்தரமாக நமக்கு கிடைக்க தினமும் கடவுளை பூஜை செய்யும் பூஜை அறையை நாம் முறையாக கையாள வேண்டும்.

- Advertisement -

பூஜை அறையில் வைத்திருக்கும் சாமி படங்கள் மிகவும் பழையதாக துரு பிடித்ததாகவும் அல்லது ஈரம் படிந்ததாகவும் இருந்தால் அவற்றை உடனடியாக பூஜை அறையில் இருந்து எடுத்து ஏதேனும் கோவிலில் வைத்து விடவேண்டும். இவ்வாறான சேதமடைந்த படங்களை வைத்து பூஜை செய்வதால் அது வீட்டிற்கு பெரும் கஷ்டத்தை உண்டாக்கும்.

god-photo-frames

அதேபோல் ஒரு படத்தின் மீது இன்னொரு சாமி படத்தை வைத்து வணங்குதல் கூடாது. லேமினேசன் செய்த சிறு சிறு பூஜை படங்களையும் பூஜை அறையில் வைக்கக் கூடாது. இவற்றை வைப்பதன் மூலம் எதிர்மறை ஆற்றல்களை வீட்டிற்கு கொண்டு வந்து விடும்.

- Advertisement -

பூஜை அறையில் பூஜைகான பொருட்கள் மட்டுமே இருக்க வேண்டும். பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் சம்மந்தமான பொருட்களை எப்பொழுதும் பூஜை அறையில் வைத்திருக்கக்கூடாது. அவை எதிர்மறை சக்திகளை ஈர்க்கும் திறன் படைத்தவை. எனவே பல காரியத் தடைகள் வந்து கொண்டே இருக்கும். நாம் நினைத்த காரியங்கள் நிறைவேற வில்லை என்று பலரும் இறைவனை நொந்து கொண்டிருப்போம். இதற்கு காரணமும் இந்த பிளாஸ்டிக் பொருட்கள் தான். இவற்றை பூஜை அறையிலிருந்து உடனே அப்புறப்படுத்த வேண்டும். அதேபோல் பிளாஸ்டிக் பொருட்களினால் செய்த எந்த ஒரு சாமி சிலைகளையும் படங்களையும் பூஜை அறையில் வைத்திருக்க கூடாது.

plastic-boxes

ஒரு சில வீடுகளில் இறந்தவர்களின் படங்களை பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள். அவ்வாறு வழிபடுவது சிறந்த பலனை கொடுப்பதில்லை. இறந்தவர்களின் படங்களை எப்பொழுதும் வடக்கு திசை நோக்கி வைத்து வழிபட வேண்டும்.

- Advertisement -

அதேபோல் பூஜை அறையில் படங்களை மாட்டி வைக்கும் போது சரியான முறையில் வைக்க வேண்டும். ஒவ்வொரு படத்திற்கும் இடையில் ஒரு சென்டி மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். முதலில் விநாயகர் படம், விநாயகர்படம் அருகே சிவன் பார்வதி குடும்ப படம் அல்லது முருகர் படம் வைக்கலாம். பின்னர் பெருமாள் படத்தை மேல் வைத்து அதற்கு கீழாக மகாலட்சுமி படத்தை வைக்க வேண்டும். இவ்வாறு சரியான முறையில் சாமி படங்களை வைத்து வணங்க வேண்டும்.

3-god-picture

பூஜை அறையில் வைக்கும் பஞ்சபாத்திரம் தண்ணீரை வாரம் ஒரு முறை நிச்சயம் மாற்றிவிட வேண்டும். அவ்வாறு செய்யாமல் அந்த தண்ணீரை அப்படியே விட்டு விட்டால் அதில் பாசி அடைய ஆரம்பிக்கும். இது குடும்பத்திற்கு நன்மையை கொடுக்காது.

poojai pathiram

உங்கள் வீட்டில் இவ்வாறான தவறுகள் செய்து கொண்டிருந்தால் அவற்றை உடனே சரி செய்து உங்கள் பூஜைக்கான பலன் கிடைக்க இறைவனை மனதார வேண்டி வாழ்த்தி விடை பெறுகிறோம்.

- Advertisement -