பூஜை அறையில் செய்யவே கூடாத தவறுகளில் இதுவும் ஒன்று. இந்த தவறை பூஜை அறையில் செய்தால், தெய்வங்கள் உங்கள் வீட்டில் வாசம் செய்யாது.

pooja-room-sivan
- Advertisement -

பூஜை அறையில் செய்யவே கூடாத தவறுகள் என்று நிறையவே உள்ளது. அதில் சில விஷயங்களை நாம் அறியாமல் செய்து விடுகின்றோம். அதன் மூலம் கடவுள் நமக்கு பெரியதாக எந்த ஒரு தண்டனையையும் கொடுக்கப் போவது கிடையாது. அறியாமல் செய்த தவறுக்கு இறைவனிடம் நிச்சயமாக மன்னிப்பு உண்டு. மனிதர்கள் நன்றாகத் தெரிந்தும் சில தவறுகளை திரும்பத் திரும்ப செய்து கொண்டே இருந்தாலும், அதற்கான தண்டனையை அந்த இறைவன் கொடுக்க மாட்டான். அந்த தவறை உணர்த்துவதற்காக சில கஷ்டங்களை நமக்கு கொடுப்பான், தவிர இறைவனுக்கு என்னைக்குமே, மனிதர்களைப்போல பழிவாங்கும் குணம் கிடையாது. நாம் அனைவருமே இறைவனின் குழந்தைகள் தான் என்ற ஒரு நல்ல கருத்துடன் இந்த பதிவினை தொடருவோம். பூஜை அறையில் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

pooja-room

பூஜை அறையில் சாமி படங்கள் மாட்டி வைத்து இருக்கக்கூடிய சுவரின் மேல் பகுதியில் அலமாரி, ஸ்லாப் எது இருந்தாலும் அதில் குப்பை கூளங்களை போட்டு வைக்கக்கூடாது. சுவாமி படங்கள் மாட்டி வைத்திருக்கக்கூடிய இடத்திற்கு மேலே எந்த ஒரு பாரத்தையும் வைக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். சுவாமியின் தலையின் மேல் பாரம் வைப்பதற்கு இது சமமாகும்.

- Advertisement -

சித்தர்களும் மகான்களும் அந்த கடவுளுக்கு சமமானவர்கள் தான். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இருப்பினும் உங்கள் வீட்டு பூஜை அறையில் மாட்டி வைத்திருக்கும் தெய்வங்களின் படத்திற்கு மேல் பக்கத்தில், சித்தர்கள் படத்தையும் மகான்கள் படத்தையும் வைக்கக்கூடாது. இப்படி செய்தால் தேவையில்லாத பிரச்சனைகள் வீட்டில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. (இதேபோல் இறந்தவர்களின் படத்தையும், தெய்வங்களின் திருவுருவப் படத்தையும் ஒன்றாக வைக்கக்கூடாது.)

pooja-room1

அடுத்தபடியாக நிறைய பேர் வீடுகளில் குத்துவிளக்கை தினம்தோறும் ஏற்றி வைக்க மாட்டார்கள். சில விசேஷ தினங்களுக்கு மட்டும் ஏற்றி வைப்பார்கள். அதிலும் எந்த ஒரு தவறும் கிடையாது. சில விசேஷ நாட்களுக்கு மட்டும் குத்துவிளக்கை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அந்த விசேஷ நாட்களில் குத்துவிளக்கை ஏற்றி வைத்துவிட்டு அடுத்த நாள் அந்த விளக்கை எடுத்து உடனடியாக சுத்தம் செய்து வைத்துவிட வேண்டும்.

- Advertisement -

ஏற்றாத குத்து விளக்கு, எரிந்த திரியுடன் பழைய எண்ணெயோடு அசுத்தமாக பூஜை அறையில் எப்போதும் இருக்கக்கூடாது. அது வீட்டிற்கு அவ்வளவு நல்லது அல்ல என்றும் சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் இருக்கும் குத்துவிளக்கு தூசி படிந்து நிற்கக்கூடாது. குத்து விளக்கு சுத்தம் செய்து, ஒரு கவரில் அல்லது சுத்தமான பையில் போட்டு பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது வீட்டிற்கு நன்மை தரும்.

poojai

இதைப்போல எக்காரணத்தைக் கொண்டும் பூஜை அறையில் வாடிய பூக்களை அப்படியே வைத்திருக்காதீர்கள். வாடிய பூக்களை பூஜையறையில் வைத்தால் அதிலிருந்து ஒரு வாசம் வீச தொடங்கிவிடும். வாடிய பூக்களைத் தேடி சிறிய கொசுக்கள் வரும். இது பூஜை அறைக்கு தரித்திரத்தை தேடி தரும் ஒரு செயலாகவும் சொல்லப்பட்டுள்ளது.

pooja-room

மேல் சொன்ன விஷயங்களில் நம்பிக்கை இருந்தால் சாஸ்திர சம்பிரதாயங்களில் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மேற்சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -