உங்கள் வீட்டின் பூஜை அறையில் இவைகள் மட்டும் இருந்தால் திடீர் யோகம் வருமாம் தெரியுமா?

vinayagar-elephant

பூஜை அறையில் நாம் வைத்திருக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு உள்ளார்ந்த அர்த்தங்கள் இருக்கும். பூஜை சார்ந்த பொருட்களுக்கு விசேஷ சக்திகள் இருப்பதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. பூஜை அறையில் சில பொருட்கள் இருப்பதால் நமக்கு நிச்சயமாக நல்ல அதிர்வலைகள் உண்டாகும். உதாரணத்திற்கு பூஜை அறையில் சங்கு வைப்பதால் எதிர்மறை ஆற்றல்கள் நீங்குவது போல ஒவ்வொரு விஷயத்திற்கும் சில பலன்கள் உண்டு. அவ்வகையில் இந்த இரண்டு பொருட்களை பூஜை அறையில் வைப்பதால் யோகம் வருவதை ஆன்மீக சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அந்த பொருட்கள் தான் என்ன? அவற்றைப் பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

pooja-room0

பூஜை அறையில் எப்பொழுதும் உங்களுடைய சுய ஜாதகத்தில் இருக்கும் லக்னத்தின் அடிப்படையில் லக்னத்திற்கு உரிய கடவுள்களை வணங்குவது வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்திலும் வெற்றி அடைய உதவும். உங்கள் லக்னத்திற்குரிய கடவுள் யார்? என்பதை தெரிந்து கொண்டு அந்த கடவுளின் படத்தை கட்டாயம் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். வீட்டிலிருக்கும் எல்லோருடைய லக்னத்திற்கும் வைக்க முடியாவிட்டாலும் குடும்பத்தலைவர் லக்னத்திற்கு உரிய கடவுளை வைத்தால் அந்த குடும்பத்திற்கு மிகவும் நல்லது.

சங்கிற்கு எவ்வளவு சக்திகள் இருக்கிறதோ! அதே அளவிற்கு சக்கரம் பதித்த பொருட்களும் நிறைய சக்திகள் உண்டு. சக்கரம் விஷ்ணுவின் அம்சத்திற்கு உரியதாக விளங்குவதால் வீட்டின் நிலை வாசல் கதவில் சக்கரம் பதித்திருப்பது அல்லது பூஜை அறையின் கதவு போன்ற இடங்களில் சக்கர அமைப்பு இருப்பது யோகத்தை கொண்டு வந்து சேர்க்கும். சக்கரம் பூஜை அறையில் வரைந்து கூட வைக்கலாம். பூஜை அறையின் சுவற்றில் சக்கரம் வரைந்து வைத்தால் திடீர் அதிர்ஷ்டங்கள் வரும். அந்த வீட்டில் தீய சக்திகள் நுழையக்கூட முடியாது.

sri-chakra

அது போல் விநாயகரின் உருவமாக விளங்கும் யானை மிகவும் சக்திகள் உள்ள ஒரு உருவப்படம் ஆகும். எனவே யானை பொம்மை அல்லது விக்ரஹம் போன்ற ஏதாவது ஒரு ரூபத்தில் பூஜை அறையில் இருப்பதால் நிறைய நன்மைகள் உண்டாகும். அந்த காலத்தில் கோவில்களில் யானை இருப்பது அந்த கோவிலுக்கு பெருமை என்பது போல, உங்கள் வீட்டின் பூஜை அறையில் யானை வைத்திருப்பது அந்த வீட்டிற்கு மகாலட்சுமி கடாட்சத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

- Advertisement -

கஜானாதிபதி விநாயகரை வணங்குவதற்கு சமமாகும் இந்த யானை படத்தை வீட்டில் வைத்திருப்பது என்பது. யானை உருவம் பதித்த பொம்மைகள் உங்களிடம் இருந்தால் அதை பூஜை அறையில் கொண்டு போய் வையுங்கள். யானை படம் இருந்தால் கூட பூஜை அறையில் வைக்கலாம். வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் நீங்கவும், பூஜை அறையி் யானை படத்தை வைத்திருப்பது மிகவும் நல்லது.

elephant-eye

அது போல் அத்திமரம் பதித்த கதவுகளும், ஜன்னல்களும் அந்த வீட்டிற்கு நல்லவற்றை கொண்டு வந்து சேர்க்கும் என்பது ஐதீகம். மரங்களிலேயே அத்தி மரம் மிகவும் வித்தியாசமானது. அத்தியில் இருக்கும் மருத்துவ குணங்களும், ஆன்மீக சக்திகளும் அளவற்றவை. வீட்டின் வரவேற்பறையில் அத்திமரம், குதிரைகள் படம் போன்றவற்றை வைத்திருப்பது நல்ல அதிர்ஷ்டங்களை அந்த வீட்டிற்கு கொடுப்பதாக அமையும். சங்கு வைத்திருப்பவர்கள் இந்த சக்கரத்தையும் உடன் வைத்திருந்தால் எண்ணற்ற பலன்களை நிச்சயமாக கொடுக்கும். சங்கு இல்லாதவர்கள் சங்கு, சக்கரம் இரண்டும் சேர்ந்த படத்தையும் வைக்கலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த 2 பொருளை மட்டும் இப்படி வைத்தால் தீராத தலைவலியாக இருக்கும் கடன் தொல்லைகள் கூட விரைவில் அடைபட்டு விடும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.