இந்த 2 பொருளை மட்டும் இப்படி வைத்தால் தீராத தலைவலியாக இருக்கும் கடன் தொல்லைகள் கூட விரைவில் அடைபட்டு விடும் தெரியுமா?

milagu-uppu-cash

கடன் என்பது தலைவலியான ஒரு விஷயம் தான். ஏண்டா கடன் வாங்கி விட்டோம்? என்கிற புலம்பல் கடன் வாங்கிய ஒவ்வொருக்கும் நிச்சயமாக ஒரு முறையாவது தோன்றியிருக்கும். வாங்கும் பொழுது அதை எப்படியாவது அடைத்து விடுவோம் என்ற நம்பிக்கையுடன் தான் வாங்கி இருப்போம். ஆனால் ஏதாவது ஒரு சூழ்நிலையில் அதனை அடைக்க முடியாத பொழுது, அந்த நம்பிக்கை உடையும் பொழுது, கடன் கூட கொடுமையான சுமையாக மாறி விடுகிறது. எப்படிப்பட்ட கடன் தொல்லைகள் இருந்தாலும் வீட்டில் இதை மட்டும் செய்தால் போதும். கடன்கள் நீங்கி, வருமானம் பெருகும். அதை எப்படி செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

kadan

கடன்கள் இருப்பவர்கள் பெரும்பாலும் இரவு நேரத்தில் தூங்குவது இல்லை. இது மன அழுத்தமாக மாறி விடுகிறது. மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த வேலையும் சரியாக செய்வதில்லை. இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் குறைகிறது. நேர்மறை ஆற்றல்கள் பெருகவும், எதிர்மறை ஆற்றல்கள் குறையவும் வீட்டில் இப்படி செய்து வைப்பது நல்லது.

கல்லுப்பு என்பது மகாலட்சுமியின் அம்சம் மட்டுமல்ல. திருஷ்டியை போக்க கூடிய மற்றும் நேர்மறை ஆற்றல்களை வெளிவிட்டு எதிர்மறை ஆற்றல்களை கிரகித்துக் கொள்ளும் தன்மையும் உடையது. கல் உப்பு என்பது கடலில் இருந்து கிடைக்கப் பெறுவது. பாற்கடலில் இருக்கும் விஷ்ணு பகவானும், மகாலட்சுமியும் அதில் வாசம் செய்வதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அவ்வகையில் இந்த கல் உப்பை செல்வ செழிப்புக்கு மட்டுமல்ல, நல்ல எண்ணங்கள் மேலோங்கவும், வீட்டில் இருக்கும் கெட்ட அதிர்வலைகளை நீக்கி தொடர்ந்து பிரச்சனைகளை உண்டு பண்ணும் தீயவற்றை தடுக்கிறது. அதனால் தான் கல்லுப்பு ஆன்மிகத்தை பொறுத்தவரை விசேஷமாக கூறப்பட்டு வருகிறது.

salt

இத்தகைய கல்லுப்பு மற்றும் எதிர்மறை எண்ணங்களை நீக்கக்கூடிய தன்மையுள்ள மிளகும் சேர்த்து வீட்டின் இந்த இடத்தில் வைப்பதால், உங்களுடைய மனநிலையில் மாற்றம் ஏற்படும். இதனை வேண்டுதலுக்காகவும், பரிகாரத்திற்காகவும் கோவில்களில் செய்வது வழக்கம். கோவில்களில் நாம் சில இடங்களில் உப்பையும், மிளகையும் சேர்த்து மாடங்களில் வைத்திருப்பதை பார்த்திருப்போம். நோயுற்றவர்கள் நோய் குணமாக இவ்வாறு வேண்டிக் கொள்வது வழக்கம். தீராத நோய்களையும் இந்த உப்பும் மிளகும் சேர்ந்த ஒரு விஷயம் தீர்த்து விடும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

அதே வகையில் தான் வீட்டிலும் பூஜை அறையில் சிறிய கண்ணாடி பௌல் ஒன்றில் சிறிதளவு கல் உப்பு போட்டு, கொஞ்சம் மிளகுகளை போட்டு வைக்க வேண்டும். பின்னர் உங்கள் குலதெய்வத்திடம் மனதாரப் பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும். இருக்கின்ற கடன்கள் அடையவும், மேலும் இனியும் கடன் வாங்காமல் இருக்கவும், வருமானம் பெருகவும் முழுமனதாக பிரார்த்திக்க வேண்டும். பின்னர் அப்படியே அதை ஒரு வாரம் வரை வைத்திருந்து பின்னர் ஓடும் நீரில் அல்லது கால் படாத இடங்களில் போட்டுவிட வேண்டும்.

Milagu benefits in Tamil

நீங்கள் வியாழன் கிழமை இதை செய்து வைத்தால் மறு வியாழக்கிழமை அன்று அதனை நீக்கி விட வேண்டும். உங்களிடம் மற்றும் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை அதிர்வலைகள் நீங்கிவிடும். எதிர்மறை அலைகள் நீங்கினால் உங்களுக்கு புதிய தன்னம்பிக்கை பிறக்கும். மீண்டும் எப்படியாவது அந்த கடனை அடைத்து விடுவோம் என்கிற நம்பிக்கையும் வரும். தானாகவே வருமானமும் அதிகரிக்க வழி பிறக்கும். முயன்று பார்த்து பயனடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
இரவில் மீறும் சாப்பாட்டை இப்படி செய்வதாலும் பணக்கஷ்டம் வரும். மீந்து போன சாப்பாட்டை என்ன செய்வீர்கள்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.