பூஜை பாத்திரங்களை அடிக்கடி கழுவ முடியவில்லையா? ஒரு முறை பாத்திரத்தை கழுவிய பின்பு இது போல செஞ்சு பாருங்க, 15 நாட்கள் வரை பூஜை பாத்திரங்கள் பளபளன்னு அப்படியே மின்னிக் கொண்டே இருக்கும்!

pooja-vessels-kanji-rice
- Advertisement -

பொதுவாக பூஜை பாத்திரங்கள் எப்போதும் சுத்த பத்தமாக இருக்க வேண்டும். பூஜை அறையில் இருக்கும் பூஜை பாத்திரங்களில் அழுக்குகள் படிய விடுவது, தூசுகள் சேர விடுவது போன்றவற்றை செய்தால் குடும்பத்தில் நிம்மதி என்பதே இருக்காது. மகிழ்ச்சி குறையும், வருமானம் குறையும் மேலும் கடன் தொல்லைகளும், தரித்திரங்களும் வந்து சேரும் என்று கூறுவார்கள், எனவே வீட்டில் பூஜை பொருட்களை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

எல்லோருக்கும் பூஜை பொருட்களை அடிக்கடி தேய்த்து சுத்தமாக வைத்திருக்க முடியாது. அதற்கான நேரமும் எல்லோருக்கும் சரியாக அமைவது கிடையாது. ஒரு குடும்பத்தில் இருக்கும் அனைவரும் இப்போது வேலைக்கு போகும் நிலையில் பூஜை பாத்திரங்களை அடிக்கடி கழுவி சுத்தம் செய்து பூஜை செய்வது எல்லாம் முடியாத காரியம் ஆகிவிட்டது. இப்படிப்பட்டவர்கள் என்ன செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

வாரம் ஒரு முறையாவது கண்டிப்பாக பூஜைக்கு உரிய பித்தளை பாத்திரங்களை தேய்த்து சுத்தம் செய்து, பொட்டிட்டு அதற்கு பின் பூஜைகள் செய்ய வேண்டும் என்பது சாஸ்திரம் கூறும் வழிமுறை ஆகும். ஆனால் வாரம் ஒரு முறை எல்லா பூஜை பாத்திரங்களையும் எல்லோராலும் சுத்தம் செய்ய முடியாது. நேரம் இருப்பவர்கள் செய்யலாம், நேரம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?

பூஜை பாத்திரங்களில் இருக்கும் எண்ணெய் மற்றும் திரி போன்றவற்றை அவ்வபோது சுத்தம் செய்து விட வேண்டும். அப்படியே விட்டு விட்டால் நாளடைவில் அது பாசி போல படிந்து விடும். இதனால் சுத்தம் செய்வது என்பது ரொம்பவே கடினமான வேலையாகிவிடும். ஒருமுறை பூஜை பாத்திரங்களை தேய்த்த பின்பு, இது போல செய்தால் மீண்டும் பூஜை பாத்திரங்களை தேய்க்கும் வரை அதன் நிறம் மாறாமல் பளபளன்னு மின்னுவதற்கு இந்த குறிப்பு உதவியாக இருக்கும்.

- Advertisement -

முதலில் பூஜை பாத்திரங்களை புளி தண்ணீரில் ஊற வைத்து பின்னர் நீங்கள் எந்த முறையில் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்து கொள்வீர்களோ, அதே போல சுத்தம் செய்து கொள்ளுங்கள். பலரும் பீதாம்பரி போட்டு சுத்தம் செய்வது உண்டு. இது ரொம்பவே சுலபமான வழிமுறை ஆகும். ஸ்க்ரப்பர், நார் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். வெறும் கைகளாலேயே பிதாம்பரி போட்டு அழுத்தி தேய்த்தாலே பூஜை பொருட்கள் அனைத்தும் பளபளன்னு மின்னும்.

இப்படி எல்லா பூஜை பாத்திரங்களையும் தேய்த்து முடித்த பிறகு, நீங்கள் துடைப்பதற்கு முன்பாக கொஞ்சம் சாதம் வடித்த தண்ணீரில் கழுவி விடுங்கள். ஒரு ஒரு பாத்திரமாக சாதம் வடித்த தண்ணீருக்குள் சேர்த்து லேசாக கழுவி அப்படியே உதறி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை சுத்தமான துணியால் துடைத்து வெயிலில் காய வைத்து அப்படியே எடுத்து சந்தனம், குங்குமம் வைத்து தயாராக்கி விட்டால், 15 நாட்கள் வரை பூஜை பொருட்கள் அப்படியே பளபளன்னு தங்கம் போல ஜொலிக்கும். அவ்வளவு சீக்கிரமாக பித்தளை பாத்திரங்கள் கருமை அடையாது எனவே இந்த முறையில் நீங்கள் பூஜை பாத்திரங்களை கழுவி பாருங்கள், அடிக்கடி கழுவ வேண்டிய அவசியமில்லை. எண்ணெய் மற்றும் திரியை மட்டும் அவ்வபோது டிஷ்யூ பேப்பர் அல்லது நியூஸ் பேப்பர் கொண்டு துடைத்து எடுத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -