- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்வெளியூரில்தங்கி படிக்கும் வேலை செய்பவர்களுக்காகவே வெங்காயம், தக்காளி, காய்கறி ஏன் கறிவேப்பிலை கூட சேர்க்காமல், சூப்பரான...

வெளியூரில்தங்கி படிக்கும் வேலை செய்பவர்களுக்காகவே வெங்காயம், தக்காளி, காய்கறி ஏன் கறிவேப்பிலை கூட சேர்க்காமல், சூப்பரான ஒரு பூண்டு குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

- Advertisement -

இப்போதெல்லாம் பெரும்பாலும் நம் பிள்ளைகளோ அல்லது வீட்டில் யாரோ ஒருவராவது வெளியூரில் தங்கி தான் தங்களின் படிப்பு வேலையோ செய்கிறார்கள், அப்படிப்பட்ட சூழ்நிலையில் சமைக்க தெரிந்தவர்கள் ஏதோ சமாளித்துக் கொள்வார்கள் .சமைக்க தெரியாதவர்கள் ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு பணத்தை செலவு செய்வதோடு உடம்பையும் கெடுத்துக் கொண்டு பல்வேறு வியாதிகளை சிறு வயதிலே தேடி கொள்கிறார்கள். இதில் அவர்களை சொல்லியும் குற்றமில்லை சமைக்க தெரிந்தால் சமைத்து இருப்பார்கள் தெரியாத போது அவர்களும் என்னதான் செய்வார்கள் இது போன்ற சமயங்களில் இந்த குழம்பு நிச்சயம் கை கொடுக்கும். எந்த சிம்பிள் குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருள்கள்: பூண்டு -20 பல், புளி ஒரு பெரிய எலுமிச்சை பழ அளவு, தனி மிளகாய் தூள்- 1 1/2 டீஸ்பூன், தனியாத்தூள் – 3 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், உப்பு- 1/2 டீஸ்பூன், நல்லெண்ணெய் -3 டேபிள் ஸ்பூன்,கடுகு – டீஸ்பூன், வெந்தயம் – 1/2 டீஸ்பூன்,

- Advertisement -

முதலில் புளியை நன்றாக கரைத்து திப்பி இல்லாமல் வடிகட்டி தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், அதில் கடுகு, வெந்தயம், போட்டு இரண்டும் பொரிந்ததும் பூண்டை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். இந்த பூண்டு மட்டும் நன்கு சிவந்து வரவேண்டும். பூண்டு பாதி அளவு வேக வேண்டும் அந்த அளவிற்கு வதக்க வேண்டும். பூண்டு நன்றாக வதங்கிய பிறகு அதில் மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, மஞ்சள் தூள் அனைத்தையும் சேர்த்து லேசாக ஒரு பிரட்டு பிரட்டி கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். இது இந்த மசாலாவின் பச்சை வாசனை போவதற்காக மட்டுமே, இந்த தண்ணீர் சுண்டியதும் கரைத்து வைத்துள்ள புளி கரைச்சலை இதில் சேர்த்து கொதிக்க விடுங்கள். குழம்பு நன்றாக வற்றி எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வேண்டும். ஒரு பத்திலிருந்து பதினைந்து நிமிடம் கொதித்தால் சரியாக இருக்கும் அவ்வளவு தான் பூண்டு குழம்பு தயாராகி விட்டது.

- Advertisement -

இதையும் படிக்கலேமே: கறி குழம்பை மிஞ்சும் வகையில் வீடே மணக்கும் ஒரு சூப்பரான சைவ கறி குழம்பு எப்படி செய்யலாம் என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம்.

இந்த குழம்பு எப்படி வெளியூரில் தங்கி வேலை செய்பவர்களுக்காக மட்டும் இல்லை நமக்கும் கூட வீட்டில் சில நேரங்களில் சமைக்க எதுவும் இல்லாமல் இருக்கும். அது போன்ற சமயத்தில் இப்படி ஒரு சிம்பிள் புளி குழம்பு செய்து சமாளித்து விடுங்கள். இந்த குழம்பு ரெசிபி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நீங்களும் உங்கள் வீட்டில் இதை ஒரு முறை செய்து பாருங்கள்.

சற்று முன்