வீடே மணக்கும் அளவுக்கு வெறும் பத்தே நிமிடத்தில் மணக்க மணக்க பூண்டு ரசம் இப்படி வச்சு பாருங்க. இதை சாப்பாட்டில் ஊற்றி பிசைஞ்சு சாப்பிட மாட்டாங்க. டம்ளர்ல ஊத்தி குடிப்பாங்க.

rasam
- Advertisement -

நம் எல்லோர் வீட்டிலும் தினமும் ரசம் வைக்க கூடிய பழக்கம் இருக்கும். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான முறையில் மணக்க மணக்க பூண்டு ரசத்தை ஒரு முறை இப்படி வைத்து பாருங்கள். வீடே மணக்கும். பசிக்காதவர்களுக்கு கூட இந்த வாசம் பசியை தூண்டும். மீன் குழம்பு, கறி குழம்பு, கூட சுவையாக சுலபமாக வைக்கலாம். ஆனால், இந்த ரசம் வைப்பதில் சில பேருக்கு கஷ்டம் இருக்கும். ரசமே எனக்கு வைக்க தெரியாது என்பவர்கள் கூட ஒரு முறை இப்படி ரசம் வைத்து பாருங்கள். இந்த ரசத்தின் ருசிக்கு உங்கள் வீட்டில் இருப்பவர்களின் நாக்கு அடிமையாகிவிடும்.

செய்முறை

இந்த ரசத்துக்கு முதலில் தோலுரித்த பூண்டு பல் 8, தோலுரித்த சின்ன வெங்காயம் 8, இஞ்சி தோல் சீவிது 1 இன்ச், பச்சை மிளகாய் 3, இந்த பொருட்களை எல்லாம் எடுத்து இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்றும் இரண்டுமாக கொரகொரப்பாக இடிக்க வேண்டும். இடிப்பதற்கு முடியாது என்றால் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பல்ஸ் மோடில் இரண்டு ஓட்டு ஓட்டிக்கோங்க. ரொம்பவும் சின்ன பல் பூண்டு ஆக இருந்தால் 10 – 12 எடுத்துக் கொள்ளலாம். ரொம்பவும் பெரிய பச்சை மிளகாய் என்றால் 2 பச்சை மிளகாய் எடுக்கலாம். அடுத்து 25 கிராம் புளியை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து கொஞ்சம் நீர்க்க கரைத்து, புளி கரைசலையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு 1 ஸ்பூன், கருவேப்பிலை 2 கொத்து, இடித்து வைத்திருக்கும் பூண்டு, சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வரை எண்ணெயில் வதக்குங்கள். பிறகு நறுக்கிய தக்காளி பழம் 3, மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், உப்பு 1 ஸ்பூன், போட்டு வதக்க வேண்டும்.

தக்காளிப்பழம் நன்றாக வதங்கி வந்தவுடன் கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை ஊற்றி கொதிக்க வையுங்கள். புளியின் பச்சை வாடை போகட்டும். அதன் பிறகு 2 பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி ரசத்துக்கு தேவையான அளவு உப்பு போட்டு, பெருங்காயத்தூள் போட்டு, இரண்டு நிமிடம் ரசம் கொதித்து வரட்டும். (தக்காளி வதக்கும்போது உப்பு போட்டு இருக்கு பார்த்து உப்பு சேருங்க.)

- Advertisement -

இதற்குள் சின்ன உரலில் 1 டேபிள் ஸ்பூன் மிளகு, 1/2 ஸ்பூன் சீரகம் பூண்டு 2 பல் போட்டு இதை கொரகொரப்பாக இடித்து கொதித்து வரும் ரசத்தில் கொட்டி அடுப்பை அணைத்து விடுங்கள். இறுதியாக மல்லித்தழை தூவி கலந்து விட்டு ரசத்தை ஐந்து நிமிடம் மூடி வையுங்கள். பிறகு சுட சுட எடுத்து பரிமாறினால் ரசத்தின் வாசம் அத்தனை அருமையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் சமைக்க காய்கறி தக்காளி எதுவுமே இல்லாத சமயத்தில் குழம்பாம சட்டுன்னு அட்டகாசமான இந்த குழம்பை செஞ்சுருங்க. இந்த குழம்புக்கு சுட சுட சாதம் இந்த இருந்தா தட்டு சோறும் பத்தாது.

சுட சுட சாதம், ரசம், தொட்டுக்கொள்ள ஒரு வடாம் இருந்தால் போதும் அமிர்தம் போல சாப்பிட்டு விடலாம். உடம்புக்கு முடியவில்லை, சளி பிடித்திருக்கிறது, காய்ச்சல் இருக்கும் எனும் போது இப்படி ஒரு ரசத்தை வைத்து, சுடசுட சாப்பாட்டில் கரைத்துக் கொடுத்தால் வாய்க்கு ரொம்பவும் பிடிக்கும். செரிமானம் இல்லாத சமயத்தில் இப்படி ஒரு ரசத்தை குடித்தால் வயிறு ஜீரணம் ஆகும். ரெசிபி பிடிச்சவங்க ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -