வீட்டில் சமைக்க காய்கறி தக்காளி எதுவுமே இல்லாத சமயத்தில் குழம்பாம சட்டுன்னு அட்டகாசமான இந்த குழம்பை செஞ்சுருங்க. இந்த குழம்புக்கு சுட சுட சாதம் இந்த இருந்தா தட்டு சோறும் பத்தாது.

kariveppilai kuzhambhu
- Advertisement -

பெரும்பாலும் பெண்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனையை இந்த குழம்பு தான். இன்று இந்த குழம்பு செய்து விட்டு நாளை என்ன செய்வது என்று யோசிப்பதே பெரும் பிரச்சனை இப்படி இருக்கையில் சமைக்க வீட்டில் காய்கறி எதுவும் இல்லாத பட்சத்தில் கேட்கவே வேண்டாம். பெரிய போராட்டமே நடந்து விடும். அப்படியான சூழ்நிலையை எளிதில் சமாளிக்க அட்டகாசமான இந்த குழம்பை செய்து அசத்தலாம். வாங்க அது என்ன குழம்பு எப்படி செய்வது என்பதை எல்லாம் இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இந்த குழம்பு செய்ய முதலில் ஒரு மசாலா தயார் செய்ய வேண்டும். அதற்கு அடுப்பில் பேன் வைத்து சூடானவுடன் ஒரு ஒரு டீஸ்பூன் கடலைப் பருப்பு, ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு டீஸ்பூன் துவரம் பருப்பு, ஐந்து காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு டேபிள் ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை இவை எல்லாம் சேர்த்து லேசாக நிறம் மாறி வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த மசாலாக்களை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்த பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த சமயத்தில் ஒரு எலுமிச்சை பழ அளவு புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது குழப்பை தாளித்து விடுவோம். இதற்கு அடுப்பில் கடாய் வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடான பிறகு ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து பொரிந்த பிறகு ஒரு மீடியம் சைஸ் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு பத்து பூண்டு பல், ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள், கால் டீஸ்பூன் மஞ்சள், ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து அடுப்பை லோ ஃபிலிமில் வைத்து வதக்கி விடுங்கள்.

- Advertisement -

இதன் பச்சை வாடை நீங்கிய பிறகு நாம் அரைத்து வைத்த மசாலாவை இதில் சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் வரை மிதமான தீயில் வதக்கி விடுங்கள். அதன் பிறகு கரைத்து வைத்து புளித்தண்ணீரை சேர்த்து மேலும் இரண்டு கப் தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்த பிறகு ஐந்து நிமிடம் வரை மூடி போட்டு கொதிக்க விடுங்கள். அதன் பிறகு மூடியை திறந்து மீண்டும் ஒரு முறை கலந்து விட்டு ஒரு சிறிய துண்டு வெல்லத்தை சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து மேலும் ஐந்து நிமிடம் வரை மூடி போட்டு கொதிக்க விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பூண்டு மிளகு குழம்பை நல்ல தரமா கிராமத்து கை பக்குவத்துல இப்படி மசாலா வறுத்து அரைத்து வச்சு பாருங்க. சுவையும் மணமும் நாக்கில் எச்சில் ஊற வைக்கும்

இப்போது எண்ணெய் நன்றாக பிரிந்து குழம்பின் நிறம் மாறி சுண்டி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான் சுவையான கறிவேப்பிலை குழம்பு அருமையாக தயார். இந்த குழம்பை சுடச்சுட சாதத்துடன் போட்டு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு பிரமாதமாக இருக்கும்.

- Advertisement -