இது தெரியாமல் இத்தனை நாட்களாக பூண்டு தோலை குப்பையில் போட்டு விட்டோமே, அப்படின்னு வருத்தப்பட போறீங்க. பூண்டு தோலுக்கு இத்தனை மகத்துவமா?

poondu
- Advertisement -

பூண்டு தோலை உரித்து விட்டு அதை குப்பையில் தான் தூக்கி போடுவோம். குப்பையில் தூக்கி போடக்கூடிய பூண்டு தோலில் இத்தனை மகத்துவமா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு சில அரிய தகவல்களைத் தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பூண்டுக்கு மருத்துவ குணம் இருப்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. அதே போல் தான் பூண்டு தோலிலும் அதிகப்படியான மருத்துவ குணம் உள்ளது. குப்பையில் போடக்கூடிய இந்த பூண்டு தோலை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றிய குறிப்புகளை தெரிந்து கொள்ளவோமா. ஆரோக்கியத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் இந்த குறிப்புகளை படித்து பலன் பெறலாம்.

இனிப்பூண்டு தோலை உரித்தால் அதை ஒரு துணி பையில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து வாருங்கள். உங்களுடைய வீட்டில் பண்டிகை தினங்களில் இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைப்பதற்கு பூண்டு தோலை உரிக்கும் போது கவனமாக அதை பத்திரப்படுத்தி வையுங்கள். அப்போதுதான் குறிப்புக்கு பயன்படுத்த முடியும். பூண்டுக்கு மேலே இருக்கும் லேசான தோல், உள்ளே உரிக்கக்கூடிய தோல் எல்லாமே பயன் தருவது தான்.

- Advertisement -

முதல் குறிப்பு:
இன்றைய சூழ்நிலையில் வேலை பளு காரணமாக நிறைய பேருக்கு தலைபாரம், தலைவலி, மன அழுத்தம் வருகிறது. சில பேருக்கு தலையில் நீர் கோர்க்கக்கூடிய பிரச்சனை இருக்கும். அதாவது தலைக்கு குளித்தாலே அவர்களுக்கு தலைபாரம் வந்து விடும். இப்படிப்பட்டவர்களுக்கு இந்த குறிப்பு. சேகரிக்கப்பட்ட பூண்டு தோலை ஒரு துணி பையில் போட்டு ஒரு முடிச்சு போட்டு தலையணை போல தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இரவு தூங்கும் போது இந்த பூண்டு தோல் தலையணையில், தலை வைத்து படுத்தால் உங்களுடைய தலைபாரம் குறையும். மன அழுத்தம் குறைந்து தலை லேசானது போல ஒரு உணர்வு ஏற்படும். ஒருபோதும் பூண்டு தோலை பிளாஸ்டிக் கவரில் போட்டு, தலைக்கு வைத்து படுக்கக் கூடாது. துணி பையை தான் பயன்படுத்த வேண்டும். பழைய தலையணை உறை இருந்தாலும் அதன் உள்ளே, பூண்டு தோலை போட்டு தலையணை போல தயார் செய்து கொள்ளலாம்.

இரண்டாவது குறிப்பு:
தலைக்கு குளித்த பின்பு அந்த காலத்தில் எல்லோருமே சாம்பிராணி தூபம் போடுவார்கள். காரணம் சாம்பிராணி தூபத்திலிருந்து வெளிவரக்கூடிய புகை தலை பாரத்தை குறைக்கும். குழந்தைகளுக்கு கர்ப்பிணி பெண்களுக்கு சளி பிடிக்காமல் பாதுகாப்பாக இருக்கும். ஆனால் இந்த காலத்தில் யாருமே அந்த சாம்பிராணி புகை பக்கம் போவதே கிடையாது. கேட்டால் புகை அலர்ஜி என்று சொல்கிறார்கள்.

- Advertisement -

தலைக்கு குளித்த பின்பு கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் சாம்பிராணி தூபம் போடுவது மிகவும் நல்லது. சாதாரணமாக இருப்பவர்கள் கூட சாம்பிராணி தூபம் போடலாம். அதில் ஒன்றும் தவறு கிடையாது. உங்களுக்கு சாம்பிராணி தூபம் போடுவது அலர்ஜி இல்லை என்றால் இந்த குறிப்பா ட்ரை பண்ணி பாருங்க. வழக்கம் போல கொட்டாங்குச்சியில் நெருப்பு மூட்டி அதில் சாம்பிராணி தூபம் போட்டு புகையை வர வையுங்கள். கூடவே பூண்டு காம்புகள், பூண்டு தோல்களை அந்த நெருப்பில் கொஞ்சம் போட்டு விடுங்கள். சாம்பிராணி தூபத்தோடு இந்த பூண்டு தோலும் கருகி புகை வரும் அல்லவா. அந்தப் புகையை, தலைக்கு குளித்த பின்பு, தலைமுடிக்கு காட்டலாம். தலைக்கு குளித்த பின்பு குழந்தைகளுக்கும் இந்த தூபத்தை காட்டலாம். கர்ப்பிணி பெண்களுக்கும் இந்த பூண்டு தோல் சாம்பிராணி தூபத்தை காட்டலாம். அவர்களுக்கு தலைபாரம் சளி தொந்தரவு வராமல் இருக்க இந்த பூண்டு தோல் தூபம் பயன்படும்.

மூன்றாவது குறிப்பு:
சில பேருக்கு சுவாச பிரச்சனை, மூக்கடைப்பு ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் இருக்கும். தொடர்ச்சியான இருமல் இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு சின்ன குறிப்பு. ஒரு சிறிய காட்டன் துணியில் இந்த பூண்டு தோலை வைத்துக் கொள்ளுங்கள். அதை முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். ஒரு தோசை கல்லை நன்றாக அடுப்பில் வைத்து சூடு செய்துவிட்டு, அடுப்பை அணைத்து விடுங்கள். சூடாக இருக்கும் தோசை கல்லின் மேலே இந்த பூண்டு தோலை வைத்து விட வேண்டும். பூண்டு தோல் நன்றாக சூடான பின்பு இந்த முடிச்சை எடுத்து முகரும் போது நமக்கு ஒரு நல்ல வாசம் வரும். அந்த பூண்டு தோலில் வாசத்தை சுவாசிக்கும் போது நமக்கு மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

சிறு குழந்தைகளுக்கு தீராத இருமல் பிரச்சனை உள்ளது என்றால் இந்த முடிச்சை கொடுத்து லேசாக முகர சொல்லுங்கள். அப்படி இல்லை என்றால் அவர்கள் தூங்கும்போது அவர்களுடைய தலையணைக்கு பக்கத்தில் சூடு செய்து முடிச்சை வைத்து விடுங்கள். அதிலிருந்து வெளிவரும் வாசத்தை சுவாசித்தாலே போதும். பெரியவர்களும் இதே போல இந்த முடிச்சில் இருந்து வெளிவரும் வாசத்தை சுவாசிக்கும் போது சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.

இந்த குறிப்புகள் அனைத்துமே இயற்கையாக நமக்கு கிடைக்கும் பூண்டு தோலில் இருந்து தான் கொடுக்கப்பட்டுள்ளது. எதையுமே நாம் சாப்பிடப் போவது கிடையாது. லேசாக முகர்ந்து தான் பார்க்கப் போகின்றோம். ஆக பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்கள் அனைத்திலுமே இறைவன் நமக்கு நிறைய நன்மைகளை கொடுத்துள்ளான். அதை நாம் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளாததால் வரக்கூடிய பிரச்சனைகள் தான் ஏராளம். பூண்டு தோலின் மகத்துவத்தை தெரிந்தவர்கள் இனி பூண்டு தோலை குப்பையில் போடாமல் அதை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -