கூலிக்காரன் குபேரனான சம்பவம் – ஒரு குட்டி கதை

kuberan

ஏழை ஒருவன் தன்னுடைய தின கூலியை வைத்தே பிழைப்பு நடத்தி வந்தான். ஒரு நாள் அவன் வேளைக்கு செல்கையில் ஓட்டை காலணா ஒன்று தெருவில் இருப்பதை அவன் கண்டான். கீழே கிடைக்கும் ஓட்டை காலணா அதிஷ்டத்தை தரும் என்றொரு நம்பிக்கை இருந்தது. ஆகையால் அவன் அதை அதிஷ்டம் என்று எண்ணி தன் சட்டை பைக்குள் வைத்துக்கொண்டான்.

rendena

வழக்கத்திற்கு மாறாக அவனுக்கு அன்று சற்று வருமானம் அதிகமாகவே கிடைத்தது. அதனால் அவனுக்கு ஓடைகாலனா மீதிருந்த நம்பிக்கையும் அதிகரித்தது. அன்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்றதும் தனக்கு கிடைத்த ஓட்டை காலணா குறித்து தன் மனைவியிடம் சந்தோசமாக விவரித்தான். பின் அந்த ஓடைக்காலணாவை தான் அன்று அணிந்திருந்த சட்டையிலேயே வைத்து அந்த சட்டையில் தனியாக வைத்தான்.

தினமும் வேளைக்கு செல்லும்மும்பு அந்த சட்டை பையில் இருக்கும் ஓடைக்கலானாவை வெளியே எடுக்காமல் தொட்டு மட்டும் பார்த்துவிட்டு போவான். காலம் கடந்தது அவன் தன் வாழ்வில் படிப்படியாக முன்னேறினான். வீடு, கார் என அனைத்தையும் சம்பாதித்தான். எல்லாம் அந்த ஓட்டை காலணா வந்த ராசி
தான் என்று அவன் ஆணித்தரமாக நம்பினான்.

man

ஒருநாள் காலை வழக்கம் போல அவன் அந்த ஓட்டை காலணாவை தொட்டு பார்த்தான். அன்று அவனுக்கு அந்த ஓடைக்கலானாவை வெளியில் எடுத்து பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. அதை வெளியில் எடுத்து பார்த்த அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பழைய சட்டை பையில் இருந்தது ஓட்டை காலனவே இல்லை அதற்கு பதிலாக வேறு காசு இருந்தது.

- Advertisement -

one rupee

அவன் தன் மனைவியை அழைத்து இது குறித்து விசாரித்தான். அப்போது அவள், அந்த ஓட்டை காலணா கிடைத்த அடுத்த நாள் உங்கள் சட்டையை துவைக்க நான் எடுத்தேன் அப்போது அதை உதறும் போது அந்த ஓட்டை காலணா எங்கோ விழுந்துவிட்டது. நான் எவ்வளவு தேடியும் அது கிடைக்க வில்லை. ஆகையால் உங்கள் மனம் கஷ்டப்படவேடாம் என்று எண்ணி நான் தான் அதில் வேறு காசை போட்டுவைத்தேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்றாள்.

இதையும் படிக்கலாமே:
நாம் கேட்கும் அனைத்தையும் இறைவன் கொடுத்தால் என்ன நடக்கும் – ஒரு குட்டி கதை

இதனை நாள், அந்த ஓடைக்காலணாவால் தான் தனுக்கு அதிஷ்டம் வந்தது என்று எண்ணிய அவன் அன்று தான் தன்னுடைய கிட்டின உழைப்பின் காரணமாகவே அனைத்தையும் சம்பாரிக்க முடியுந்தது என்பதை உணர்ந்தான். உழைப்பே உயர்வு என்பதற்கு அவன் ஒரு சிறந்த உதாரணமாக திகழ்ந்தான்.

சுவாரசியமான சிறு கதைகள், குட்டி கதைகள், ஜென் கதைகள் என அனைத்து விதமான தமிழ் கதைகளையும் உங்கள் மொபைலில் பெற  தெய்வீகம் மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்து பயன் பெறுங்கள்.