நாம் கேட்கும் அனைத்தையும் இறைவன் கொடுத்தால் என்ன நடக்கும் – ஒரு குட்டி கதை

god
- Advertisement -

முனிவர் ஒருவர் பயங்கரமான ஒரு காட்டில் வாழ்ந்துவந்தார். அவரோடு ஒரு நாயும் மிகுந்த விசுவாசத்தோடு இருந்தது. முனிவர் தான் உண்ட காய்கறி, பழங்கள் போக மிச்சத்தை அந்த நாய்க்கு அளிப்பார். அதுவும் அதை மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்தது. முனிவரோடு இருந்ததால் அதற்கு அசைவம் உண்ணும் ஆசை வரவில்லை.

sidhar

ஒரு நாள் திடீரென ஒரு சிறுத்தை அந்த நாயை கண்டு அதை வேட்டையாட துரத்தியது. சிறுத்தையை கண்டு மிகுந்த அச்சம் கொண்ட அந்த நாய் முனிவரிடம் வந்து தஞ்சம் அடைந்து. நடந்தவை அனைத்தையும் அறிந்த முனிவர், பயப்படவேண்டாம் நீ என்னுடைய குழந்தை மாதிரி உனக்கு எந்த ஆபத்தும் நேராமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி ஒரு மந்திரத்தை ஜபித்து தன் கமண்டலத்தில் உள்ள நீரை அந்த நாய் மீது தெளித்தார். உடனே அந்த நாய் ஒரு மிக பெரிய சிறுத்தையாக மாறியது. உடனே அது தன்னை விரட்டி வந்த சிறுத்தையை விரட்டி அடித்தது.

- Advertisement -

சிறுத்தையாக மாறினாலும் அந்த நாய் விசுவாசத்தோடு முனிவரின் காலையே சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தது. ஒரு நாள் திடீரென ஒரு புலி பயங்கர பசியோடு அந்த சிறுத்தையை துரத்த ஆரமித்தது. மீண்டு என்ன செய்வதென்று தெரியாமல் முனிவரிடம் வந்து சரணடைந்தது அந்த சிறுத்தை. உடனே அவர் மீண்டும் மந்திரத்தை ஜபித்து தன் கமண்டலத்தில் உள்ள நீரை அந்த சிறுத்தை மீது தெளித்தார். உடனே அது பலம் பொருந்திய புலியாக மாறியது. பின் தன்னை துரத்தி வந்த புலியை ஓட ஓட விரட்டியது.

tiger

ஆனால் இப்போது புலி பழைய மாதிரி காய்கறி பழத்தை எல்லாம் உண்பது கிடையாது. முனிவருக்கு தெரியாமல் அவ்வப்போது வேட்டைக்கு சென்று மான், முயல் என எது கிடைக்கிறது அதை வேட்டையாடி உண்டு வந்தது. இப்படியே நாட்கள் செல்ல ஒரு நாள் மிக பெரிய யானை ஒன்று அந்த புலியை துரத்தியது. மீண்டும் அந்த புலி முனிவரிடம் தஞ்சம் அடைய அவர் அதை ஒரு பலம் பொருந்திய சிங்கமாக மாற்றினார்.

- Advertisement -

lion

காட்டிலே இது தான் பலம் பொருந்திய சிங்கம் என்பதால் தான் தான் காட்டிற்கு ராஜா என்ற கர்வத்தோடு திரிந்தது. அதோடு முனிவரையும் எப்போவாவது ஒருமுறை தான் வந்து பார்த்தது. மற்ற நேரங்களில் தனக்கு பிடித்த மிருகத்தினை வேட்டையாடி கொன்று உண்டுகொண்டிருந்தது. அப்போது திடீரெனெ ஒருநாள் அந்த காட்டிற்கு வினோதமான மிருகம் ஒன்று வந்தது அந்த சிங்கத்தை விட மிக வலிமையாக இருந்தது. அது இந்த சிங்கத்தை துரத்த ஆரமிக்க மீண்டும் அந்த சிங்கம் முனிவரிடம் தஞ்சம் அடைந்தது.

lion

முனிவரோ மீண்டும் மந்திரத்தை ஜபித்து அந்த சிங்கத்தை சக்திவாய்ந்த வேறொரு மிருகமாக மாற்றினார். அந்த மிருகமானது இப்போது காட்டில் எதையுமே விட்டு வைக்காமல் அனைத்தையும் கொன்று தின்றுகொண்டிருந்தது. இந்த மிருகம் வரும் ஒளி கேட்டாலே மற்ற மிருகங்கள் ஓடி ஒலித்தன. இதற்கு கர்வம் தலைக்கேறியது. நம்மை கண்டு இந்த காட்டில் அனைவருமே அஞ்சி நடுங்குகின்றனர். ஆனால் இந்த முனிவர் மட்டும் எப்போதும் நம்மை கண்டு அஞ்சுவதே இல்லை. ஆகையால் அவரை கொள்ளவேண்டும் என்று அந்த மிருகம் தீர்மானித்தது.

- Advertisement -

dinosaurs

இதையும் படிக்கலாமே:
சூனியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்த முன்னோர்கள்

ஒருநாள் முனிவரை கொள்வதற்காக அந்த மிருகம் பாய்ந்து வந்தது. மிருகத்தின் நோக்கத்தை நன்கு அறிந்த முனிவர் மீண்டும் மந்திரத்தை ஜபித்து அதை ஒரு நோயாகவே மாற்றிவிட்டார்.

நீதி:
கடவுள் நமக்கு கொடுத்ததை வைத்து நாம் அதை பயனுள்ளதாக மாற்றவேண்டுமே தவிர அதை வைத்து எதையும் அழிக்க நினைக்க கூடாது. கடவுளிடம் இருந்து பல வரங்களை பெற்ற அசுரர்கள் அதை தவறாக பயன்படுத்த, அவர்களின் நிலை என்ன ஆனது என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.

ஜென் கதைகள், ஆன்மீக கதைகள், சிறு கதைகள், குட்டி கதைகள் என பலவிதமான தமிழ் கதைகளை தினம் தினம் படிக்க எங்களுடைய மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்து எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -