Astrology : பூராடம் நட்சித்திரக்காரர்கள் அதிகம் செல்வம் பெற இதை செய்ய வேண்டும்

pooradam
- Advertisement -

மனிதர்கள் அனுபவிக்கின்ற அத்தனை வகை சுகங்களும் ஒரு வகையில் இறைவனின் ஆசீர்வாதங்களே ஆகும். சுகபோக வாழ்க்கை ஒருவருக்கு ஏற்பட வேண்டுமென்றால் நவகிரகங்களில் இன்பங்களுக்கு அதிபதியாகிய சுக்கிர பகவானின் அருள்கடாட்சம் அவருக்கு அதிகம் இருக்க வேண்டும். அந்த சுக்கிர பகவானின் ஆதிக்கத்துக்குட்பட்ட ஒரு நட்சத்திரமாக பூராடம் நட்சத்திரம் வருகிறது. இந்தப் பூராட நட்சத்திர காரர்கள் வாழ்வில் மிகுந்த செல்வச் செழிப்பும் உண்டாக செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

sukran

27 நட்சத்திர வரிசைகளில் இருபத்தியோராவது நட்சத்திரமாக வருவது பூராடம் நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக நவகிரகங்களில் சுக்கிர பகவான் இருக்கிறார். நட்சத்திரத்தின் தேவதையாக வருண பகவான் இருக்கிறார். பிறருக்கு கொடுத்து மகிழும் குணம் கொண்ட பூராடம் நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்வில் அதிர்ஷ்டங்களையும் மிகுந்த செல்வ செழிப்பையும் பெறுவதற்காக செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

- Advertisement -

வருடத்தில் எந்த மாதத்திலாவது பூராடம் நட்சத்திர தினத்தன்று ஸ்ரீரங்கம் சென்று, ரங்கநாதரையும், தாயாரையும் வழிபட வேண்டும். உங்கள் பகுதியில் லட்சுமி நாராயணன் கோயில் இருக்கும் பட்சத்தில் அக்கோயிலில் இருக்கும் லட்சுமி தாயார் அலங்காரத்திற்கு வளையல்கள், மூக்குத்தி, புடவை மற்றும் மஞ்சள் நிற இனிப்புகளை தானமாகத் தந்து வழிபடுவது உங்களுக்கு லட்சுமி கடாட்சம் ஏற்பட வழிவகுக்கும். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் வசதி வாய்ப்பு குறைந்த மக்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை தானமாக தருவதால் பூராடம் நட்சத்திர காரர்களுக்கு ஏற்படும் எத்தகைய தோஷங்களும் நீங்கும்.

புதிய முயற்சிகள் மற்றும் பணம் சம்பந்தமான விவகாரங்களை உங்கள் நட்சத்திரத்திற்கு பொருந்தாத திருவோணம்,சதயம்,உத்திரட்டாதி, ஆயில்யம், புனர்பூசம் ஆகிய நட்சத்திர தினங்களில் மேற்கொள்ள கூடாது. கோயில்களில் உள்ள நவகிரக சந்நிதியில் வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானையும் வாரந்தோறும் வழிபட்டு வருவதால் உங்களுக்கு எப்போதும் நன்மையான பலன்களே ஏற்படும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
குடும்ப விடயங்களில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் யார்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Pooradam nakshatra pariharam in Tamil. It is also called as Pooradam natchathiram in Tamil or Natchathira pariharam in Tamil or Pooradam natchathiram athipathi in Tamil or Sukkiran natchathirangal in Tamil.

- Advertisement -