ஜோதிடம் : குடும்ப விடயங்களில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் யார்?

rasi

மனிதன் என்பவன் பெரும்பாலும் தனிமையில் இருப்பதில்லை. ஒருவருக்கு குடும்பம் என்ற ஒன்று ஏற்பட்ட பிறகு இறுதி காலம் வரை ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கின்றனர். அத்தகைய குடும்பத்தில் பிரச்சனைகள் எதுவும் உருவாகாது என எவருமே கூற முடியாது. இந்த 2019 ஆம் ஆண்டில் வரவிருக்கும் மாதங்களில் எந்தெந்த ராசியினர் குடும்ப விவகாரங்களில் கவனமாக இருக்க என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்:

midhunam

இந்த ஆண்டு மிதுன ராசிக்கு குரு பகவான் சற்று பாதகமான நிலையில் இருப்பதால் இந்த ராசியினரின் சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் மாற்றங்கள் இருக்கும். பிறர் மீது வீண் சந்தேகங்கள் இருக்கும். திருமணமாகாதவர்களாக இருந்தால் பெற்றோர்கள், சகோதரர்களுடனோ, திருமணமானவர்களாக இருந்தால் வாழ்க்கை துணையுடன் வீண் விவாதங்களும், சண்டைகளும் உருவாகும். சொத்துகள் வகையில் பங்காளிகள் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் பிரச்சனைகள் ஏற்படும். குழந்தைகள் வழியிலும் சிலர் பிரச்சனைகளையும், பொருள் விரயங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

சிம்மம்:

simmam

- Advertisement -

நேர்மையான எண்ணமும், கோப குணமும் கொண்ட சிம்ம ராசியினருக்கு இந்த ஆண்டு கிரகங்களின் நிலை சாதகமற்று இருப்பதால் எந்த ஒரு விடயத்திலும் நிதானம் கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். குடும்பத்தில் வயதில் மூத்தவர்களிடம் வீண் விவாதங்கள் செய்யாமல் விட்டுக்கொடுத்து செல்வது. உங்களுக்கும் உங்கள் சகோதர, சகோதரி வகை உறவுகளில் கருத்துவேறுபாடுகள், வீண் சண்டைகள் உருவாகலாம். திருமணமான தம்பதிகளிடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். ஒரு சிலர் பிரிந்து வாழும் சூழலும் உருவாகலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

தனுசு:

Dhanusu Rasi

தனுசு ராசிக்கு அந்த ராசியின் அதிபதியான குரு பகவான் இந்த ஆண்டு சாதகமற்ற நிலையில் இருப்பதால் குடும்பத்தின் பொருளாதார நிலையில் தடுமாற்றங்கள் இருக்கும். உங்களை சார்ந்த நெருக்கமான உறவுகளுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். உங்கள் குழந்தைகள் வழியில் வீணான பிரச்சனைகள் உருவாகலாம். உங்களுக்கும் உங்கள் சகோதரர், பங்காளி குடும்பத்தினருக்கும் பகை ஏற்படலாம். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை அனுசரித்து செல்வதால் பல பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம். உறவினர்கள் வழியில் ஒரு சிலருக்கு வீண் பொருள் விரயங்கள் உண்டாகலாம்.

இதையும் படிக்கலாமே:
12 ராசியினரின் இல்வாழ்க்கை சிறக்க இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Rasis family issues in Tamil. It is also called as 12 rasi in Tamil or Rasigal jothidam in Tamil or Jothidam rasi in Tamil.