பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் மிகுதியான செல்வம் ஈட்ட இவற்றை செய்யுங்கள்

pooratadhi
- Advertisement -

“குரு பார்க்க கோடி நன்மை” என்கின்ற ஒரு புகழ்பெற்ற ஜோதிட பழமொழி நம்மில் பலர் அறிந்திருப்போம். ஒரு நபரின் ஜாதகத்தில் குருபகவான் தான் இருக்கின்ற வீடுகளை விட, பார்க்கின்ற வீடுகளுக்கே பலன்கள் அதிகம் ஏற்படும். அப்படியான முழு முதல் சுபகிரகமான குருபகவான் ஆதிக்கத்துக்குட்பட்ட நட்சத்திரமாக பூரட்டாதி நட்சத்திரம் வருகிறது. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் மிகுதியான செல்வ வளம் பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

guru-bagawan

27 நட்சத்திரங்கள் வரிசையில் இருபத்தைந்தாவது நட்சத்திரமாக பூரட்டாதி நட்சத்திரம் வருகிறது. பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதியாக குரு பகவான் இருக்கிறார். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை காமதேனு ஆகும். இருக்கிறார். பூரட்டாதி நட்சத்திரத்தின் 1,2,3 பாதங்கள் கும்ப ராசிக்குரியதாகவும், 4 ஆம் பாதம் மீன ராசிக்குரியதாகும் இருக்கிறது. குரு பகவானின் ஆதிக்கம் கொண்டிருப்பதால் உறுதியான உடலும், மனமும் கொண்டவர்களாக பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் இருக்கிறார்கள். பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்வில் மிகுதியான செல்வ வளங்களை பெற கீழ்கண்ட பரிகாரங்களை செய்ய வேண்டும்.

- Advertisement -

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வருடத்திற்கு ஒரு முறை குரு பகவானுக்குரிய கோயிலான ஆலங்குடி குரு பகவான் கோயில் மற்றும் திருச்செந்தூர் முருகப் பெருமான் கோயில்களுக்கு சென்று அங்குள்ள தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். மேலும் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலுக்குச் சென்று சிவ பெருமானுக்கும், சனிபகவானுக்கும் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

cow shed

வெள்ளிக்கிழமைகளில் உங்கள் வீட்டில் இருக்கும் பசுமாட்டிற்கோஅல்லது கோயில்களில் கோசாலைகளில் இருக்கும் பசுமாடுகளுக்கோ வாழைப்பழம், அகத்திக் கீரை போன்றவற்றை தருவது உங்களின் தோஷங்களை போக்கி வாழ்வில் சிறப்பான பலன்களை ஏற்படுத்தும் ஒரு சக்தி வாய்ந்த பரிகாரமாக இருக்கிறது. உங்களுக்கு அருகில் இருக்கும் கோவில்களுக்கு பூட்டுக்கள், சங்கிலிகள் இன்ன பிற இரும்பு கொண்டு செய்யப்பட்ட பொருட்களை தானமாக அளிப்பது சிறந்தது.

- Advertisement -

Sai baba as sri Ram

வியாழக்கிழமைகள் தோறும் மஞ்சள் நிற ஆடைகளை அணிவது உங்களின் அதிர்ஷ்ட வாய்ப்புகளை அதிகரிக்கும். மேலும் ஏதேனும் ஒரு வியாழக்கிழமையில் உங்களுக்கு கல்வி, கலைகளை கற்றுத் தந்த குருவிற்கு இனிப்பு மற்றும் உங்களால் முடிந்த தட்சணையை தந்து, அவரின் ஆசிகளைப் பெறுவது சிறப்பானதாகவும். தங்களுக்கு குரு இல்லாதவர்கள் வியாழக்கிழமையில் சாய்பாபா கோயிலில் பக்தர்களுக்கு இனிப்புகளை தருவதும் சிறந்த பரிகாரம் ஆகும்.

இதையும் படிக்கலாமே:
குடும்ப கஷ்டங்கள் தீர இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Pooratathi nakshatra pariharam in Tamil. It is also called as Pooratathi natchathiram athipathi in Tamil or Pooratathi natchathiram athi devathai in Tamil or Nakshatra parigarangal in Tamil or Pooratathi natchathira kovil in Tamil.

- Advertisement -