உருளைக்கிழங்கு இல்லாமல் பூரி மசாலா செய்ய முடியுமா? அது எப்படி? தெரிஞ்சுக்க ஆர்வம் உள்ளவர்கள் ரெசிபியை படியுங்கள்.

poori
- Advertisement -

நிறைய பேருடைய உடம்புக்கு உருளைக்கிழங்கு சேராது. உருளைக்கிழங்கு சாப்பிட்டால் கை கால் வலி வந்து விடும். வாயு பிடிக்கும் என்று சொல்லுவார்கள். இப்படிப்பட்டவர்கள் பூரிக்கு சைடிஸ் ஆக உருளைக்கிழங்கு மசாலாவை தொட்டு சாப்பிட மாட்டார்கள். ஆனால் உருளைக்கிழங்கு சேர்க்காமலும் பூரிக்கு மசாலாவை நம்மால் செய்ய முடியும். அது எப்படி என்பதை பற்றிய சிம்பிள் ரெசிபி இதோ உங்களுக்காக. உருளைக்கிழங்கு இல்லை என்றாலும் இனி கவலைப்படாமல் மசாலா செய்ய குறிப்பை தவறாமல் படிக்கவும்.

செய்முறை

இதற்கு நமக்கு 3 பெரிய வெங்காயங்கள் தேவை. வெங்காயத்தை தோல் சீவி காம்புகளை நீக்கி நைசாக நீள நீளமாக வெட்டி வெங்காயத்தை அப்படியே தனியாக உதிர்த்து  வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து 3 பூண்டை எடுத்து லேசாக இடித்து வைத்துக் கொள்ளவும். 3 பச்சை மிளகாய் எடுத்து நடுவே கீறி தனியாக வைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

இப்போது அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் 1 ஸ்பூன் ஊற்றி கடுகு 1 ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன், சோம்பு 1/2 ஸ்பூன், உளுந்து 1 ஸ்பூன், கடலைப்பருப்பு 1 ஸ்பூன், பெருங்காயம் 1/4 ஸ்பூன், சேர்த்து தாளித்து இந்த பொருட்கள் எல்லாம் சிவந்து வந்தவுடன், இடித்த பூண்டு பல்லை போட்டு ஒரு முறை வதக்கி, அடுத்து நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், போட்டு வெங்காயத்தை கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும்.

அடுத்து இந்த மசாலாவுக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, வெங்காயத்தை 6 லிருந்து 7 நிமிடங்கள் நன்றாக வேக வையுங்கள். வெங்காயம் வெந்து வந்ததும் இந்த மசாலாவுக்கு தேவையான உப்புத்தூளை தூவிக் கொள்ளவும். இதற்குள் ஒரு சின்ன கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலைமாவை போட்டு, 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

வெங்காயம் கடாயில் வெந்து கொண்டிருக்கிறது அல்லவா. அதில் கரைத்து வைத்திருக்கும் கடலை மாவை ஊற்றி, நன்றாக கலந்து விட்டு மூன்று நிமிடம் வரை மிதமான தீயில் கொதிக்க வைத்தால், இது உருளைக்கிழங்கு மசாலா போல திக்காக நமக்கு கிடைக்கும். இறுதியாக கொத்தமல்லி தலையை தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். சூப்பரான உருளைக்கிழங்கு இல்லாத பூரி மசாலா தயார்.

பொதுவாகவே பூரி என்றாலே அதற்கு உருளைக்கிழங்கு மசாலா சாப்பிட்டு தான் நமக்கு வழக்கம் இருக்கும். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இதை ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். சரி, நாங்க எவ்வளவுதான் முயற்சி செய்து பூரி சுட்டாலும் அது உப்பி வரவே மாட்டேங்குது என்று கஷ்டப்படுபவர்களுக்கு இந்த பதிவில் ஒரு எளிய குறிப்பு. சப்பாத்திக்கு மாவு பிசைவது போல பூரிக்கு மாவை தல தலவென பிசைய கூடாது. பூரிக்கு மாவு பிசையும் போது ரொம்பவும் கட்டியாக பிசைய வேண்டும்.

- Advertisement -

தேவையான அளவு மாவை கிண்ணத்தில் போட்டு உப்பு தூள் தூவி, மிகக் குறைந்த அளவில் தண்ணீரை ஊற்றி, லேசாக தண்ணீர் தெளித்து தெளித்து மாவை பிசைய தொடங்குங்கள். தண்ணீரை குறைந்த அளவில் ஊற்றி மாவை கட்டியாக பிசைந்தால் பூரி சூப்பராக உப்பி வரும். எண்ணெய் குடிக்காமல் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. பூரிக்கு மாவு திரட்டும்போது ரொம்பவும் மெல்லிசாகவும் திரட்டக்கூடாது. அதை சமயம் ரொம்பவும் திக்காகவும் திரட்டக்கூடாது. பூரி திரட்டுவதிலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

இதையும் படிக்கலாமே: மஷ்ரூம் மசாலா கிரேவியை இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. வெரைட்டி ரைஸ் ரொட்டி சப்பாத்தி எல்லாத்துக்குமே இது அட்டகாசமான காம்பினேஷன் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

பூரியை தேய்த்த உடனே எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். நீண்ட நேரம் பேப்பரிலோ தட்டிலோ இருந்தால் பூரியின் ஷேப் மாறிவிடும் அதை எடுக்கும்போது. ஒரு பக்கம் மெலிசாகவும் ஒரு பக்கம் தடிமனாகவும் மாறும். அப்போது எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் முழுமையாக உப்பலாக கிடைக்காது. இந்த எளிமையான குறிப்பு உங்களுக்கு உபயோகமாக இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -