மஷ்ரூம் மசாலா கிரேவியை இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. வெரைட்டி ரைஸ் ரொட்டி சப்பாத்தி எல்லாத்துக்குமே இது அட்டகாசமான காம்பினேஷன் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

mushroom-kulambu2
- Advertisement -

அசைவ உணவுகளை எடுத்துக் கொண்டால் அதில் பல வகைகள் உண்டு. சைவ உணவில் பெரும்பாலும் வெரைட்டியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் மஷ்ரூம் பன்னீர் இது போல தான் செய்வோம். அந்த வகையில் இந்த மஷ்ரூம் வைத்து நிறைய கிரேவி வகைகள், வெரைட்டி ரைஸ், எல்லாம் தெரிந்து கொண்டு இருப்பீர்கள். ஆனால் ரொம்ப சுலபமா அதே நேரத்துல அதிகமான டேஸ்ட்டோட இருக்கக் கூடிய இந்த மஷ்ரூம் மசாலா கிரேவியை எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் இப்போது தெரிந்து கொள்ளப் போகிறோம்.இந்த கிரேவி செய்வதற்கு முதலில் 2 பழுத்த தக்காளி, 3 பச்சை மிளகாய், 3 காய்ந்த மிளகாய், 5 பல் பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி, 1 துண்டு பட்டை, 2 இலவங்கம், 1 கிராம்பு, 10 முந்திரி, 1 டீஸ்பூன் தயிர், இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் பைன் பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு அடுப்பில் பேன் வைத்து சூடானவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு 2 பெரிய வெங்காயத்தை நல்ல பொடியாக நறுக்கி இதில் சேர்த்து வெங்காயம் சிவந்து வரும் வரை வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு 1 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த் தூள், 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்,11/2 டீஸ்பூன் தனியாத் தூள், 1/4 டீஸ்பூன் கரம் மசாலா, 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் உப்பு, இவை அனைத்தையும் சேர்த்த பின் அடுப்பை லோ பிளேமில் வைத்து விட்டு இவையெல்லாம் கருகி விடாமல் எண்ணெயிலே வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இவையெல்லாம் வதங்கி பச்சை வாடை போட பின்பு அரைத்து வைத்த பேஸ்டையும் இதில் சேர்த்து மீண்டும் இதே போல வதக்க வேண்டும். ஏனெனில் இதில் சேர்த்து இருப்பவை எல்லாம் நாம் பச்சையாக சேர்த்திருக்கிறோம். எனவே இதன் பச்சை வாடை போகும் வரை வதக்கி கொள்ள வேண்டும். இதன் பிறகு இந்த கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடி போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

கிரேவி நன்றாக கொதிக்கும் போது 1 கப் மஷ்ரூமை சுத்தம் இதில் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதில் சேர்க்கும் போது மஷ்ரூமை உங்கள் விருப்பப்படி முழுதாகவும் சேர்த்துக் கொள்ளலாம். இதை எப்படி சேர்ந்தாலும் சுவை நன்றாக இருக்கும். இந்த கிரேவியை எண்ணெய் பிரியும் வரை கொதித்த பின்பு இறக்கும் முன்பு அரை எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து விட்டு ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லியை மேலே தூவிய பிறகு அடுப்பை அணைத்து விட்டால் சுவையான மஷ்ரூம் மசாலா கிரேவி தயார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: 2 நிமிசத்துல தக்காளியே சேர்க்காம ரோட்டு கடை ஸ்டைலில் சூப்பரான இந்த கார சட்னியை எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாமா? இந்த சட்னிக்கு சுட சுட இட்லி இருந்தா எவ்வளவு செஞ்சாலும் பத்தாது.

இந்த கிரேவி சப்பாத்தி, வெரைட்டி ரைஸ், பூரி, நாண், தோசை என எல்லாவற்றுக்கும் இது ரொம்பவே நன்றாக இருக்கும். அசைவம் சாப்பிட முடியாத நேரங்களில் கூட இது போல செய்து கொடுத்தால் நல்ல ஒரு அசைவ சாப்பாடு சாப்பிட்டு திருப்தி இருக்கும் இந்த மஷ்ரூம் மசாலா கிரேவி உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -