பிள்ளையாருக்கு ரொம்பவும் பிடிச்ச பூரண கொழுக்கட்டை, சுலபமாக எப்படி செய்வது? கடையில் இருந்து வாங்கிய மாவிலும், சாஃப்டான கொழுக்கட்டை செய்ய டிப்ஸ்.

விநாயகர் சதுர்த்தி வரப்போகின்றது. விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டையை கட்டாயம் நம்முடைய வீடுகளில் செய்வோம். கடையிலிருந்து வாங்கிய மாவில், சாஃப்டாக பூரண கொழுக்கட்டையை ரொம்ப ரொம்ப சுலபமாக எப்படி செய்வது என்பதைப் பற்றியும், சில பேருக்கு கடையிலிருந்து வாங்கிய மாவில் கொழுக்கட்டை செய்தால், அந்த கொழுக்கட்டை ஆறிய பின்பு மிகவும் ரஃப் ஆக மாறிவிடும். ஆரிய பின்பும் கொழுக்கட்டை சாஃப்டா இருக்க என்ன செய்வது என்பதைப் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த வருட பிள்ளையார் சதுர்த்திக்கு, இந்த கொழுக்கட்டை செஞ்சி பிள்ளையாருக்கு படைத்து அசத்துங்க.

pillaiyar1

பூரண கொழுக்கட்டை செய்முறை:
Step 1:
தேங்காய் துருவல் – 1கப், வெல்லம் – 1 கப். தேங்காய் துருவலை எதில் அளந்து எடுத்துக் கொள்கிறீர்களோ, வெல்லத்தையும் நன்றாக பொடி செய்து, அதே கப்பில் அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். (ஒரு கப் தேங்காய் துருவலில் 1/2 கப், தேங்காய் துருவல் சேர்த்து, மீதமுள்ள 1/2 கப் வேகவைத்த பாசிப்பருப்பையோ, கடலைப்பருப்பையோ கூட சேர்த்துக் கொள்ளலாம் அது உங்களுடைய விருப்பம் தான்.)

முதலில் பூரணம் செய்வதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, துருவிய தேங்காய் துருவலை சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வறுக்க வேண்டும். அதன் பின்பு பொடி செய்து வைத்திருக்கும் வெல்லத்தையும் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு வெல்லம் கரைந்து அல்வா பதத்திற்கு வரும் வரை, கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இறுதியாக ஒரு ஸ்பூன் ஏலக்காய் பொடியை தூவி இறக்கி விடுங்கள்.

மொத்தமாகவே இந்த பூரணம் தயாராக 15 நிமிடங்கள் தான் எடுக்கும். சூடாக இருக்கும்போது கொல கொல பதத்தில் இருந்தாலும், பூரணம் சற்று ஆறியவுடன் உருண்டை பிடிக்கும் அளவிற்கு இறுகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பூரணம் அப்படியே இருக்கட்டும். (பூரணத்தில் எக்காரணத்தைக் கொண்டும் தண்ணீர் சேர்க்க வேண்டாம். வெல்லம் உருகிய தண்ணீரே பூரணத்துக்கு போதுமானது)

- Advertisement -

Step 2:
அடுத்ததாக கடையிலிருந்து வாங்கிய கொழுக்கட்டை மாவாக இருந்தாலும், பச்சரிசி மாவாக இருந்தாலும், இடியாப்பம் மாவாக இருந்தாலும், அதை அப்படியே மேல் மாவு செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுடைய வீட்டில் பச்சரிசியை ஊறவைத்து அரைத்து மாவாக வைத்து இருந்தால், அந்த மாவை கடாயில் போட்டு 2 நிமிடங்கள் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

porana-kozhukattai2

இப்போது 2 கப் அளவு கொழுக்கட்டை மாவை அகலமான பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின் அதில், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு டேபிள்ஸ்பூன் அளவு நெய் சேர்த்துக் கொள்ளவேண்டும். எந்தக் கப்பில் மாவை அளந்து எடுத்துக் கொண்டார்களோ அதே கப்பில் 2 கப் அளவு மாவுக்கு, 2 கப் அளவு தண்ணீரை கொதிக்க விடுங்கள்.

porana-kozhukattai3

கொதிக்கின்ற தண்ணீரை அரிசி மாவில் ஊற்றி, ஒரு கரண்டியால் நன்றாக கிளறி விட வேண்டும். மாவு, கை பொறுக்கும் பக்குவத்தில் வந்தவுடன் உங்கள் கைகளாலேயே மாவை பிசைந்து, கையில் ஒட்டாத பதத்தில் மாவு இருக்க வேண்டும். அதன்பின்பு, அந்த மாவின் சூடு சுத்தமாக ஆருவதற்குள் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, பூராணத்தையும் உருண்டை பிடித்து, உங்களுக்கு தேவையான வடிவத்தில் பூரணத்தை உள்ளே வைத்து, கொழுக்கட்டை செய்து, இட்லி சட்டியில் வைத்து 5 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்தாலே போதும். சுவையான கொழுக்கட்டை தயார்.

porana-kozhukattai4

கொழுக்கட்டை சாஃடா இருக்க டிப்ஸ்: நீங்கள் செய்யும் மேல் பூரண மாவு காற்றில் வறண்டு போக கூடாது. அப்படி வரண்டு போய் விட்டால், கொழுக்கட்டை மிருதுவாக வராது என்பது குறிப்பிடத்தக்கது. கொழுக்கட்டையின் மேல் மாவு சூடு ஆறுவதற்குள், மாவு கை பொறுக்கும் சூட்டில் இருக்கும்போதே, கொழுக்கட்டை பிடித்து ஆவியில் வேக வைக்கவேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கொழுக்கட்டை மாவை கட்டாயம் கொதிக்கும் சுடு தண்ணிர் ஊற்றி தான் பிசைய வேண்டும். தேவைப்பட்டால் கொழுக்கட்டை மாவில் ஒரு சிட்டிகை அளவு சோடா உப்பு சேர்த்துக்கொள்ளலாம். அது கொழுக்கட்டையை இன்னும் சாஃப்டாக மாற்றித் தரும்.

இதையும் படிக்கலாமே
பருப்பு இல்லாமல் இட்லி தோசைக்கு வெறும் தக்காளி வைத்தே எப்படி சாம்பார் செய்வது?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.